UNLEASH THE UNTOLD

Month: April 2023

“நீங்க மரியாதையை உயரத்துல வைச்சிருக்கீங்க!” -2

“அதாம்மா பெரிய பொண்ணாயிட்டா அவங்க வீட்ல இப்படித்தான் கீழ உட்காரணுமாம். அங்க சேலத்துல வீட்ல விஷேசத்துல பொண்ணுங்களுக்கு மட்டும் பாய் போட்டாங்க. ஆண்களுக்கெல்லாம் சேர் போட்டாங்கன்னு மொறைச்சனே… இங்கயும் அப்படித்தான் பொண்ணுங்களுக்கு ஒரே கெடுபிடி. அதுதான் பெரியவங்களுக்குக் கொடுக்கற மரியாதையாம். அதான் குழி வெட்டி வைங்க உயரம் கொறைஞ்சா மரியாதை இன்னும் அதிகமா தந்தா மாதிரி இருக்கும்ன்னு சொன்னேன்.”

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது பெண்களின் வேலையா?

‘Feminisation of care’ என்ற ஒரு பதத்தைப் பயன்படுத்துகிறார் எழுத்தாளர் சரண்யா பட்டாச்சார்யா. அதாவது, அக்கறைக்குப் பெண் தன்மையைக் கொடுப்பது. இதன்மூலம் பெண்கள் மீதான உணர்வு மற்றும் உழைப்புச் சுரண்டல் நியாயப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவிக்கிறார். “அக்கறை என்பது ஒரு சிக்கலான அரசியலுக்குள் மாட்டிக்கொண்டிருக்கும் செயல்பாடு” என்கிறார் ஆராய்ச்சியாளர் அரின் மார்டின். ஆகவே இந்த அரசியலைப் பேசுவது முக்கியம். பெண்களுக்குத் தேவையான பிரதிநிதித்துவத்தைக் கொடுக்காமலேயே தனிநபர் சூழல் செயல்பாடுகளில் மட்டும் அவர்கள் தொடர்ந்து ஈடுபடவேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கிறது. அதை நடத்திக்கொள்ளவேண்டும் என்பதற்காக, “பெண்ணுக்கு இயற்கையிலேயே சூழல் மீது அக்கறை உண்டு” என்பது போன்ற சமாதானங்கள் சொல்லப்படுகின்றன. சூழல்சார்ந்த தனிநபர் செயல்பாடுகளில் ஆண்களின் பங்களிப்பையும் சூழல்சார்ந்த கொள்கை முடிவுகளில் பெண்களின் பங்களிப்பையும் இது பாதிக்கிறது. இந்த நிலை ஆபத்தானது.

வாழ்க்கையைப் புரட்டிப் போடும் பெரி மெனோபாஸ் – 3

சில நேரம் நள்ளிரவு தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென படபடப்பு ஏற்பட்டு, ஏஸியிலும் வியர்வை பெருகும். இரவு ஆழ்ந்த தூக்கமிருக்காது. அதே போல திடீரென குளிரில் உடல் நடுங்கும். சில நிமிடங்கள் நீடித்து பின் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். இது பெரும்பாலும் இதயம் சம்மந்தப்பட்டதில்லை ஹாட் ப்ளஷ் என்றார் மருத்துவர். ஹார்மோன்களின் தாறுமாறான ஏற்ற இறக்கத்தின் விளைவு. சிலருக்கு மார்பில் பாரத்தைச் சுமப்பது போன்ற வலியிருக்கும். அந்த வலி நெஞ்சை அடைப்பது போல, மூச்சு முட்ட செய்வது போலத் தோன்றும். இது பீரியட்ஸ் முடிந்தவுடன் சரியாகிவிடும்.

பெண்களும் நகைச்சுவையும்

இங்கே சினிமா துறையில் மனோரமா, கோவை சரளா என்று குறிப்பிட்டுச் சொல்ல இரண்டே இரண்டு பெண்கள்தாம் நகைச்சுவை நடிகர்களாக இருக்கிறார்கள் என்பது இவர்கள் தியரிக்குக் காரணமாக இருக்கலாம்.

அப்படிப் பார்த்தாலும் அது பெண்களின் தவறில்லை. ஆணாதிக்கம் நிறைந்த நம் சினிமா நாயகர்களைச் சார்ந்தே இயங்குகின்றன. அவர்களைச் சார்ந்தே நகைச்சுவைக் காட்சிகளும் எழுதப்படுகின்றன

தனிக்குடித்தனம்

நிலாவுக்கு ஒரு மாதமாகவே தலையணை மந்திரம் போட்டுக் கொண்டிருந்தான் வருண். ஆரம்பத்தில் கோபப்பட்டு வருணை அடிக்கவே போய்விட்டாள் நிலா. ஆனால், வருண் திருப்பி அடிக்கவில்லை. கண்ணீரால் அடித்தான். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் அல்லவா! வருணின் கண்ணீரும் கம்பலையும் பொறுக்க முடியாமல் இந்த ஞாயிறன்று பெற்றோருடன் பேசுவதாகச் சொல்லி இருந்தாள். கிரிக்கெட் விளையாடிவிட்டு மதிய உணவு நேரத்தில் பேசுவதாகச் சொல்லிப் போனவளை எதிர்பார்த்துக் கடிகாரத்தில் கண் வைத்துக்கொண்டே இருந்தான் வருண்.

ஆணுக்கு (ம்) அவசியம் பாலியல் கல்வி

ஆணுக்குப் பாலியல் கல்வி அளிப்பதன் மூலம் ஆணாதிக்கம், பாலியல் பாகுபாடு, பெண் அடிமைத்தனம் போன்றவை ஒழியும். பாலியல் கல்வி இல்லாத ஆண்பிள்ளை வளர்ப்பு இன்னோர் ஆணாதிக்கவாதியைத்தான் உருவாக்கும்.

நான் பெண் என்பதால் இரக்கமற்றவள்...

“பெண்கள் எல்லாரும் படித்துப் பொருளாதார நிலையில் முன்னேறிவிட்டதால் ஆண்களை மதிப்பதில்லை. எல்லாரும் குடும்பம் நடத்தாமல் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடுகிறார்கள்” என்பது பெண்களின் மீது வைக்கப்படும் முக்கியக் குற்றச்சாட்டு. புள்ளி விவரங்களின்படி ஒரு சதவீதம் திருமணங்கள் மட்டுமே விவாகரத்து வரை செல்கின்றன. எதன் அடிப்படையில் இப்படி ஒரு பொய்யான குற்றச்சாட்டைப் பெண்கள் மீது வெட்கமின்றி சுமத்துகிறீர்கள் எனக் கேட்டால், “தேவாவே சொன்னான்” என்பது மாதிரி நானே பாதிக்கப்பட்டேன். குடும்ப நீதிமன்றத்தில் என் கண்ணாலேயே பார்த்தேன். நீங்களும் வேண்டுமானால் வந்து பாருங்கள் என்று கோயில் வாசலில் பிச்சை எடுக்க செட்டு சேர்ப்பவர்கள் மாதிரி பதில் சொல்கிறார்கள்.

செயென் வீர மங்கைகள் !

எவ்வளவு துணிச்சலான வீரர்களிருந்தாலும் எவ்வளவு வலிமையான ஆயுதங்கள் இருந்தாலும் ஒரு தேசம் போரில் எப்போது வீழும் தெரியுமா? அந்தத் தேசத்துப் பெண்களின் இதயங்கள் நிலத்தின் மேல் விழும்போதுதான்!

கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்காதீர்கள்...

ஒரு பொருளை வாங்குவதற்கு முன் அந்தப் பொருள் பற்றிய பயன்பாட்டின் தேவையை அறிந்துகொள்ள முயற்சித்தாலே தேவையில்லாத பொருள்கள் வாங்குவதைத் தவிர்க்க முடியும். பணமும் வீட்டில் இடமும் மிச்சமாகும்.

கண்ணுக்குத் தெரியாமல் போன அறிவியலாளர்

1958இல் பாக்டீரியாக்களின் மரபணுவியல் குறித்த ஒரு கண்டுபிடிப்புக்காக ஜோஷுவாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அந்த ஆராய்ச்சியின்போது எஸ்தரும் சம அளவில் பங்களித்திருந்தார் என்றாலும், ஜோஷுவாவின் மனைவியாக அரங்கத்தில் அமர்ந்து கைதட்டும் வாய்ப்பு மட்டுமே அவருக்கு வாய்த்தது. “என்னுடைய சக ஆராய்ச்சியாளர்களின் பங்களிப்பு, குறிப்பாக என் மனைவியின் பங்களிப்பு” என்ற ஏற்புரை சொற்ளோடு எஸ்தருக்குத் தரவேண்டிய அங்கீகாரத்தை முடித்துக்கொண்டார் ஜோஷுவா.