UNLEASH THE UNTOLD

Tag: Story

தங்கமே வெற்றி...

மாலதிக்கும் வெற்றிக்கும் அப்படியொரு சிரிப்பு அவர்கள் ஜாதகதப் பொருத்தம் போல பொருந்திக் கிளம்பியது. இரண்டும் மகள்களாகப் போய்விட்டதே என்று மாலதியும் சோர்ந்ததில்லை. வெற்றியும் மகனுக்கு முயற்சிக்கவில்லை.

சக்தி

இப்போதெல்லாம் அம்மாவின் ஞாபகங்களும் அவளிடம் கேட்கவென பல கேள்விகளும் சக்திக்கு அடிக்கடி எழுகின்றன. கேட்டால் அவளும் கத்துவாளா? சக்தியின் ஞாபகங்களில் அம்மா அவளுடன் அதிரக் கத்தியதாக நினைவில்லை. மூன்று வயதில் சக்தியைப் பிரிவதற்குள் அப்படி என்ன பெரிய தப்பைதான் செய்துவிடக் கூடும் கத்துவதற்கு என எண்ணிக்கொண்டாள் . ஆனாலும் அவளுக்கு அம்மாவிடம் நிறையக் கோபம் உண்டு. தன்னை விட்டுவிட்டுப்போன கோபம். இப்போதும் அந்தக் கோபம் வந்தது.

குட்டிக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம்...

‘பாவம் அம்மா. நம்ம நல்லதுக்கு தான் எதுனாலும் பண்ணுவாங்க. நான் வருத்தப்படக்கூடாதுனு தான் சொல்லாம இருந்திருக்கும்.’ இப்போது குட்டிக்கு அம்மாவை அணைத்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது.

குட்டி ஏன் அதிர்ச்சியடைந்தாள்?

ஒரே விஷயத்தைத் தொடர்ந்து யோசிக்கும்போது, அதில் இருக்கும் சிறு சிறு விஷயங்கள் யாவும் பூதாகரமாய் தெரிய ஆரம்பிக்கின்றன. ரதியாளுக்கு அது தான் நடந்துகொண்டிருந்தது.

தோப்புக்குப் போய்ப் பார்த்தபோது, நிஜமாகவே கழுகும் காக்காயும் ஒவ்வொரு பக்கம் கூட்டமாகத் தான் இருந்தன. சண்டையெல்லாம் இல்லை. அது அவன் கற்பனை.

வள்ளியக்காவின் காதல்

இந்த வயதில் காதல் வர காரணங்கள் ஆயிரம் இருப்பினும் தனக்குப் பிடித்த நபர்கள் காதலிப்பதைப் பார்த்து தானும் காதலித்தாக வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுவதுதான் ஆகச் சிறந்த வேதனை. தேவையா, அவசியமா இவற்றையெல்லாம் தாண்டி ஒரு காதல் நிச்சயமாக வேண்டியிருக்கிறது.

வீட்டின் கடைக்குட்டி, நம்ம குட்டி

நம் குட்டிக்கும் இப்போது வயது 20. இன்னும் ஒரு வருடத்தில் திருமணம் முடித்துவிட வேண்டும் என்ற பேச்சு காதில் விழ ஆரம்பித்திருக்கிறது.

அந்நியன்

’எதற்கு வீட்டு வாசலில் காத்துக்கிட்டு இருக்கீங்க?’ என்று ஒரு செல்லக் கோபத்தைக் காட்டுவதிலெல்லாம் ஒரு குறைச்சலும் இருக்காது. அந்தப் பத்து நிமிட நடையை யாராவது பார்த்திருந்தால் தெரிந்திருக்கும்!

ஆண்மை

இது துக்க வீடு. யாரையும் சந்தேகிக்காது. யாரும் அவரை இப்படி எல்லாம் நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள். ஆனால், அவளுக்கு அவரைத் தெரியும். மிக நன்றாகத் தெரியும்.