UNLEASH THE UNTOLD

Tag: Story

அவள் என்ன செய்யப் போகிறாள்?

ஆரம்பத்திலிருந்து எல்லா விஷயங்களையும் அறிந்திருந்த தோழி அழுத்தந்திருத்தமாக, “வேண்டாம்னு சொல்லிருடி… நீ பட்ட கஷடமெல்லாம் போதாதா? இந்த சைக்கோ குடும்பத்துல உன் மகளையும் சிக்க வெச்சுறாதே” என்றாள். இந்தப் பெண் மறுக்கவே மீண்டும் பாராமுகமாகச் சென்று விட்டனர் கணவன் வீட்டார். அந்தக் குழந்தைக்கு சிறு செலவுகூடச் செய்யவில்லை அவர். இதனிடையே அந்தப் பெண்ணின் அம்மாவும் காலமானார். இவர்கள் இருவர் மட்டும் அமைதியாக வாழ்ந்து வந்தார்கள். அதுவும் நெடுநாள் நீடிக்கவில்லை. அந்தக் குழந்தை கல்லூரிப் படிப்பை முடித்த உடனே மீண்டும் புகுந்த வீட்டார் படையெடுப்பு. அவரது சகோதரி மகனும் படிப்பை முடித்துவிட்டு வேலையில் அமர்ந்திருந்தான். அதைக் காரணம் காட்டி மீண்டும் திருமணப் பேச்சு ஆரம்பித்தது. மாமியார் இந்த முறை இந்தப் பெண்ணின் காலிலேயே விழுந்துவிட்டார்.

கொழுந்தன் கல்யாணம்...

புது ஆண் ஒருவனைத் தன் பழகிய அறைக்குள் எதிர்பார்த்திருந்தாள் லதா. தள்ளியிருத்தலே பெருமதிப்பு என்றும் முடிவெடுத்திருந்தாள். ஆனாலும் தன் உடல் அப்படிச் சொல்லுமா என்பதில் அவளுக்கும் சந்தேகம் இருந்தது. மணப்பந்தலில் அவன் வாசம் அவளைத் துளைத்தபடியே இருந்தது. உடல் ஒரு போக்காகவும் அவள் ஒரு போக்காகவும் போய்க்கொண்டிருந்தார்கள்.

குர்தியும் பட்டியாலா பேண்ட்டும்

“சம்சாரி வீட்டில் வாக்கப்பட்டு மாடு, கண்ணு, காடு, கரைன்னு போறவளுக்குச் சீலதாண்டி அழகு. ஏழு வயசுல பேரன் இருக்காங்கறத மறந்துட்டு நைட்டி போடுறேன்னு கேக்குறயே? உனக்கு எம்புட்டு தைரியம்? அக்கம்பக்கத்துப் பொம்பளைங்க எல்லாம் பார்த்துச் சிரிக்கமாட்டாங்க? கோமாளி மாதிரி நைட்டிய மாட்டிகிட்டுத் திரியணும்னு கிறுக்குத்தனமா ஆசைப்படாதே’’ என நைட்டி ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

வியூகம்

“உங்க விருப்பம் அதுதான்னா, அப்படியே நடக்கட்டும். நான் தீர்மானிச்சிட்டேன். கூடிய சீக்கிரம் நாங்க அங்கே குடிபோறோம். நீங்க இங்கதான்தான் இருப்பேன்னு பிடிவாதம் பிடிச்சா, இருந்துக்கோங்க, தனியா சமைச்சுச் சாப்பிட்டுக்கிட்டு. எனக்கு அதைப் பத்தி கவலையில்லை’’ என அழுத்தமாகச் சொல்லிவிட்டு அவள் எழுந்து போக, உறைந்து நின்றான்.

<strong>குரல்கள்</strong>

நானறிந்தவரை, கணவன் மனைவி உறவில், சிலருக்குத் தினம் பார்த்துக்கொள்ளும்படி இருக்க வேண்டும்; சிலருக்கு வாரமொருமுறை, சிலருக்கோ மாதம் ஒருமுறையே போதுமானது; சிலரோ வருடத்திற்கொருமுறை சந்திக்கிற கணவன் மனைவியாக இருந்தால்தான் அந்தத் தாம்பத்யம் நிலைத்திருக்கும்.

தேமாக்காதல்

பத்து நாள்களாகவும் வேம்பின் தலையணையும் விஜியின் தலையணையும் ஒன்றாக ஆகியிருந்தது. இரவில் மொட்டை மாடியில் படுத்தபடியே நட்சத்திரங்களை இணைத்து வேண்டுமானதை வரைந்துகொண்டார்கள் இருவரும். தனது இருபத்தி நான்கு வருடக் கதையையும் வேம்பிடம் சொல்லியிருந்தாள் விஜி.

<strong>நாங்கள் இந்தியர்கள் இல்லையா?</strong>

“ஸ்கூல்ல டீச்சர் என்ன கூப்டாங்க. நா போய் நின்னேன். டீச்சரு என் பேர கேட்டாங்க. நா செய்யது அலி பாத்திமானு சொன்னேன். உடனே, ‘அவங்களா நீங்க?’னு கேட்டாங்க. அப்டினா என்னங்குற மாதிரி அமைதியா முழிச்சிட்டு நின்னேன். ‘அலி’னா என்னனு தெரியுமானு கேட்டாங்க. நா தெரியாதுனு சொன்னேன். என்னைய அனுப்பிட்டு பக்கத்துல இருக்கற டீச்சர்கிட்ட ஏதோ சொல்லி சிரிச்சாங்க. ஏன் மாமா அப்டி பண்ணாங்க…”

மீண்டும் ஒருமுறை...

இந்த மனிதன் வேண்டுமென்றேதான் இப்படிச் செய்வார் போலிருக்கிறது. உள்ளே விடுப்பை ரத்து செய்யச் சொல்லியவுடன் மனம் கதறியது. திங்கள், செவ்வாய் விடுப்பு எடுக்கலாமென்றால் கூடாது. அடுத்த சனிக்கிழமைதான் விடுப்பு. சென்ற முறை போலல்லாது இம்முறை மிகுந்த ஏமாற்றம். சென்ற வருடம் பிரிவுத் துயர். இவ்வருடம் பிரிவு அறுவடைநாள். அதை விட்டுக் கொடுக்க என்னால் சற்றும் இயலவில்லை. சரியான காரணம் என்று மூவருக்கு விடுமுறை உறுதியாயிற்று, எனக்கு முடிந்தவரை வேண்டும் என்று கேட்டாயிற்று. ‘சாரி மதி’ என்ற ஒற்றைப் பதிலைக் கேட்டு, கலங்கியபடி பார்க்கையில், ‘நீ செல்லலாம்’ என்று அஃதரின் வாய் சொன்னது. உண்மையில் இம்முறை என்னால் இயலவில்லை, மீண்டும் ஒருமுறை தனியே சென்று கேட்டேன்.

இரவின் இசை

மணி பதினொன்றைத் தொட்டுவிட்டது. எனக்கோ பயம் தொற்றிக்கொண்டது. திறமையானவர்தான். அலுவலகத்தில் நல்ல மனிதர்தான். ஆனால், அவரைப் பற்றி முழுதும் தெரியாதே. ராகுலும் மணியும் இருக்கும்போது தோன்றாத எண்ணங்களும் பயங்களும் நெஞ்சைக் கவ்வின.

பூக்கரு

“இங்க பாரு பூவு, ஒன்னு வச்சேன்னு வையி, வாய் கொட்டாவி விட்டுக்கும். எங்கம்மாவைப் பாத்தியா எப்டித் தவிச்சு நிக்குதுன்னு? அது ஆசைப்பட்டுச்சுன்னுதான் நான் உன்னை இங்க வச்சிக்க சம்மதிச்சேன். இப்ப உன்னால அதுக்கு எதுவும் ஆச்சுன்னு வையி வெளுத்துடுவேன்” என்று சட்டைக் கைகளை மடித்தான் சரவணன்.