UNLEASH THE UNTOLD

Tag: india

முத்துமணி மாலை உன்னைத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட...

நகை போட்டால் தான் ஊரில் மதிப்பார்கள் என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. நம்மைத் தெரிந்தவர்கள், நாலு தடவை நகை போட்டு வரவேண்டியது தானே என்பார்கள். பின் இவள் இப்படித்தான் எனக் கடந்து போய்விடுவார்கள். தன்னை அழகுபடுத்திக்கொள்வதில் ஆர்வம் இருப்பவர்களுக்கென்றே இப்போது ஓராயிரம் ஆபரணங்கள் வருகின்றன. அவற்றை அணிந்து பாதுகாப்பாகப் பயணிப்போம்.

வணிகத் துறையில் பெண்கள்

கடந்த காலங்களில் பெண்கள் தொழில் தொடங்குவதற்கான சட்டங்கள் மிகக் கடுமையாகவே இருந்துள்ளன. குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளில்கூடப் பெண்கள் தொழில் தொடங்க அவர்களது கணவர்களின் கையொப்பம் கட்டாயமாக்கப்பட்டது. பிறகு 1988இல் புதிய சட்டம் இயற்றப்பட்டு பெண்கள் சுதந்திரமாகத் தொழில் தொடங்கவும் மேலும் அரசாங்க ஒப்பந்தங்களில் விண்ணப்பிக்கவும் புதிய சட்டத் திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டது.

எகிறும் விலைவாசி; பதறும் நடுத்தர மக்கள்

அதிகரித்துள்ள பல தனியார் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களைக் கவர கடன் அட்டைகளையும் லோன்களையும் தாராளமாக வாரி வழங்கிவருகிறது. இதனால் மக்களின் வாங்கும் திறன் அதிகரித்துள்ளது. எல்லாக் கடைகளிலும் உணவகங்களிலும் மக்கள் தாராளமாகச் செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். கிரெடிட் கார்டுகளின் வருகையால் நடுத்தர மக்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்தைவிட வசதியான ஒரு வாழ்க்கைத் தரத்தை வாழ்ந்து பழகிவிட்டார்கள்.

டிஜிட்டல் இந்தியாவின் கழிப்பறைகள்

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான திறந்த வெளியில் மலம் கழிக்கும் மக்கள் (சுமார் 62 கோடி பேர்) இந்தியாவில் இருப்பதாக, குறிப்பாக இந்தியக் கிராமங்களில் இருப்பதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் நடத்திய கணக்கெடுப்பின் அடிப்படையில், நவம்பர் 2019இல் வெளியான தேசியப் புள்ளிவிவர அறிக்கை கிராமப்புறங்களில் 29.7 % குடும்பங்கள் கழிப்பறை வசதியின்றி இருப்பதாகக் கூறுகிறது.