பொம்மி திம்மி வம்பி
மறுநாள் வம்பி அவரிடம் வந்தாள். “எசமானியம்மா, பூங்குளம் ஊரில் பயிர் விதைகள் மிகக் குறைந்த விலைக்குக் கிடைப்பதாக ஊரில் சொல்கிறார்கள். பலரும் அங்கு வண்டி கட்டிக் கொண்டு செல்கிறார்கள். நாம் சீக்கிரமே போனால் நல்ல பேரம் கிடைக்கும். வாருங்கள்“ என்று அழைத்தாள்.
பண்ணையாரும் பேராசைப்பட்டு அவளுடன் போகச் சம்மதித்தார். வம்பி தானே வண்டியை ஓட்டுவதாகச் சொல்லித் தாறுமாறாக மாடுகளை விரட்டினாள். வண்டி காடுமேடுகளில் இஷ்டத்துக்கும் ஓடிற்று. பண்ணையாருக்குக் குண்டு உடல். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, “அடியே மெதுவாடி, மெதுவாடி” என்று கெஞ்சிக் கொண்டு குலை நடுங்க அமர்ந்திருந்தார்.