UNLEASH THE UNTOLD

Tag: animals and gender

கடற்கன்னிகளின் மணிபர்ஸ்!

கடற்கன்னிகளின் பர்ஸ் என்பது, சுறா முட்டைகளுக்கான வெளிப்புறக் கூடு. ஒவ்வொரு மணிபர்ஸுக்குள்ளும் ஒன்று அல்லது இரண்டு சுறாக்குஞ்சுகளும் அவற்றுக்கு உணவூட்டும் மஞ்சள் கருவும் இருக்கும்.

இருபால் உயிரிகளின் இனப்பெருக்கம்

ஒவ்வொரு விலங்கிலும் ஆண் – பெண் இருவகை உறுப்புகளும் உண்டு என்றாலும் இணைசேரும்போது முட்டைகளை உருவாக்க நிறைய ஆற்றல் தேவை என்பதால் உயிரணுக்களைத் தருகிற ஆணாக இருப்பதையே விரும்புகின்றன.

குழந்தைகளைக் கருவில் சுமக்கும் தந்தை!

ஆண் கடற்குதிரையின் பேறுகாலத்தின்போது இயங்கும் எல்லா மரபணுக்கூறுகளுமே பொதுவாகப் பெண் விலங்குகளில் மட்டுமே காணப்படுபவை!

ஜெல்லி, ப்ரெட் மற்றும் பல்லாயிரம் சேவகிகள்

கூட்டுப்புழுவிலிருந்து ராணித்தேனீ வெளிவந்த உடனே, தனக்குப் போட்டியாக வேறு ராணிகள் கூட்டில் இருக்கின்றனவா என்று பார்க்கும். ராணித்தேனீக்களுக்கே உரித்தான, தனித்துவமான ஒரு ஒலியை எழுப்பும். மற்ற ராணிகள் பதில் ஒலி எழுப்ப, இது அந்த ராணிகளின் அறைக்குப் போய் சண்டை பிடிக்கும். சண்டையில் யார் வெற்றிபெறுகிறார்களோ அதுவே புதிய ராணி!

சமூக மாறுதல்களால் பால்மாறும் கோமாளி மீன்கள்

ஒரு கூட்டத்தில், தலைமைப் பெண் மீன் வேட்டையாடப்பட்டு இறந்துவிட்டால், சில நாட்களில், தலைமை ஆண்மீனின் உடலில் மாறுதல் தென்படும். அது பெண் மீனாக மாறும்!