UNLEASH THE UNTOLD

மூவர்

சில மணி நேரம் வரை அப்படியே நிர்வாணமாய் இருந்து குளித்துவிட்டு, வீட்டின் அறைகளில் கூட அப்படியே திரிவாராம். வளருக்கு முதலில் சங்கடமாக இருந்தது போகப்போக, மாமியாரின் மனநிலை புரிந்து அவர் மீது இரக்கம் தான் தோன்றியதாம். ‘உடம்ப, ஒத்த அறை மட்டும் இருக்குற வீடு மாதிரியே வச்சுக்கிட்டுத்தான் செத்துப் போப்போறேன். ஜெயில்ல இருக்குற மாதிரி. நீயாவது அப்படியெல்லாம் இருக்காத’, என்று அடிக்கடி சொல்வார் என்றாலும் மகன் முன்னால் வளரிடம் ஒரு சொட்டுக் கூட அன்பு காட்டியதில்லை.

வதம்

தனக்கு வசப்படாத பெண்ணை, தனக்கு அடங்காத பெண்ணை, தன்னைவிட திறமையான பெண்ணை எப்படி அடக்குவது எனும்போது அவர்கள் உபயோகிக்கும் தார்க்குச்சிதான் அவதூறு.

பெரியாச்சி

திடீரென ஏதோ நினைத்துக்கொண்ட ஆத்தா மருமகளிடம் *பல்லுக்கொழுக்கட்ட செஞ்சு கெங்கய நெனச்சி தண்ணியள்ளி ஊத்து” என்றாள். சோகமா என்றெல்லாம் புலப்படவில்லை அந்த முகத்தில். அது என்ன எல்லாத்தயும் விட்டுட்டு பல்லு கொழுக்கட்ட படையலு? தோன்றிய கேள்வியை மனசுக்குள்ளேயே புதைத்தாள்.

ஊஞ்சலாடும் நினைவலைகள்

ஊஞ்சல் கம்பியில் தொத்தி ஏறி, ஒரு கைவிட்டு ஒரு கை பிடித்து நகர்ந்து அடுத்த கம்பியின் வழியாக இறங்கிவரும் சாகசக்காட்சிகள் வீட்டில் புகார்க்காட்சிகள் ஆக்கப்பட்டன

பாறையில் படிந்த ஆதித்தடங்கள்

பொதுவுடமை சித்தாந்தத்தில் ஈடுபாடுகொண்ட மணலூர் மணியம்மை என்னை வெகுவாக பிரமிக்க வைத்த சென்ற நூற்றாண்டுப் போராளிப் பெண்ணாக ஒளிர்கிறார். பால்ய விதவையான மணியம்மா சிலம்பம் பயின்று, சைக்கிள் ஓட்டக் கற்று, தன் முடியை ‘கிராப்’ வெட்டிக்கொண்டதோடு நில்லாமல், வேட்டி, அரைக்கை வைத்த கதர் சட்டை, சிவப்புத் துண்டோடு வலம் வந்திருக்கிறார் மக்களுக்காக.

ஒளி ஓவியங்கள்

கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்; சொல்லுங்கேலி பொறுத்திடு வான்; – எனைஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும்ஆறுதல் செய்திடுவான்; – என்றன்நாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்றுநான்சொல்லும் முன்னுணர் வான்; – அன்பர்கூட்டத்தி லேயிந்தக் கண்ணனைப் போலன்புகொண்டவர் வேறுள…

பெண்களும் அரசியலும்

சமூகநீதிக்காகவும் பாலின சமத்துவத்துக்காகவும் போராடிய அம்பேத்கர் பெரியார் வழியில் பெண்கள் அரசியல்படுவது ஒன்று தான் பெண்கள் அரசியலில் வலிமையான இடங்களுக்கு முன்னேறுவதற்கும், ஒட்டு மொத்த பெண்களுக்கான விடிவு ஏற்படுவதற்கும் ஒரே வழி.

சிறகு முளைத்த பெண்கள்

இந்தச்சமூகம் முன்னேறிவிட்டதாக, பெண்கள் எல்லோரும் கல்வியில் தேர்ந்தவர்களாகவும் பொதுவெளியில் தங்கள் அறிவையும் ஆற்றலையும் தடையேதுமின்றி வெளிப்படுத்துகிற சூழல் நிலவுவதாகவும் நாம் சொல்லிக்கொண்டிருந்தாலும், உண்மை நிலை வேறாகத்தான் இருக்கிறது. பெண்கள் பலரும் பாலின அடிப்படையில் தாங்கள் திறமையற்றவர்களாக மதிப்பிடப்படுகிற அவமதிப்பை பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

ஒளி ஓவியங்கள்

12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் வெண்குறிஞ்சி மற்றும் நீலக்குறிஞ்சி மலர்கள், படம் எடுத்த இடம்- அட்டுவம்பட்டி, கொடைக்கானல், 2018 தென்னிந்தியா, இலங்கையில் அதிகம் காணப்படும் மஞ்சள் புருவ கொண்டைக்குருவி (Yellow headed bulbul),…

உன் சின்ன உலகத்தைத் தாறுமாறாகத்தான் புணர்ந்திருக்கிறாய்

சில நாட்கள் இது நடக்கும் அதிகாலையிலிருந்தே அந்த நாள் உனக்கெதிராகச் சதி செய்வதாக ஒவ்வொரு நிமிடமும் உன்னை முறைத்துப் பார்த்துவிட்டு நகர்வதாக ஒவ்வொரு பார்வையும் உன் கழுத்தை நெறிக்கப் போவதாக உன் கைகளும் கால்களுமே…