பாலின உணர்திறனை ஊக்குவிக்கும் வகையில் ஊடகங்களுக்கு வழங்கப்படும் (Laadli Media Award for gender sensitivity under the Category: Social Media Campaigns for Her Stories) விருதைப் பெற்றிருக்கிறார் நிவேதிதா லூயிஸ். ஹெர்ஸ்டோரீஸில் அவர் தொடர்ச்சியாக நிகழ்த்திய கலந்துரையாடலுக்காக இந்த விருது!

ஹெர்ஸ்டோரீஸ் ஃபேஸ்புக், இணையதளம் தொடங்கப்பட்ட ஓராண்டுக்குள் இந்த விருது கிடைத்திருக்கிறது என்பது நாம் சரியான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. இது நம் ஒவ்வொருவருக்கும் கிடைத்த அங்கீகாரம். ஹெர்ஸ்டோரீஸ் எழுத்தாளர்கள், வாசகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம். தொடர்ந்து பயணிப்போம்!