உங்களுக்கு என்ன வேண்டும்?
இளைஞர்கள், “கல்யாணம் முடிந்ததும் எனது சுதந்திரம் பறிபோய்விடும். ஆயிரம் சிக்கல்கள்”, எனச் சொல்லும் உங்கள் மனதிடம் கேளுங்கள், ‘உண்மையில் உனக்கு என்ன வேண்டும்?’
இளைஞர்கள், “கல்யாணம் முடிந்ததும் எனது சுதந்திரம் பறிபோய்விடும். ஆயிரம் சிக்கல்கள்”, எனச் சொல்லும் உங்கள் மனதிடம் கேளுங்கள், ‘உண்மையில் உனக்கு என்ன வேண்டும்?’
தைரியமில்லாத ஆண்களும் உண்டு, வலிமையான பெண்களும் உண்டு. பொதுஇடத்தில் பெண்ணுக்கு ஏதேனும் பிரச்னை என்றால், ஆண்தான் தட்டிக் கேட்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. கேட்க தைரியமில்லாத ஆணை ’நீயெல்லாம் ஒரு ஆம்பளையா?’ என்று ஏசுவார்கள். கண்ணீர் வடிக்கும் ஆணிடம், ’ஏண்டா பொம்பள மாதிரி அழுதுட்டு இருக்கே?’ என்பார்கள். துக்கத்தை வெளிக்காட்டுவது இருபாலருக்கும் பொதுவானது. ஆனால், ஆண் தனது துக்கத்தை, இயலாமையை வெளிக்காட்டக் கூடாது என்று பொதுப்புத்தி எதிர்பார்க்கிறது.
அவளுடைய சின்ன ஆர்வம், அதற்கு உருவம் கொடுத்த லட்சுமி டீச்சர்… இந்தக் காரணங்களால் இன்று ரோகிணி தனது சொந்தக் காலில் நிற்கிறாள்.
கிராமத்தில் அது போன்று முடிவெடுக்க தனி தைரியமும் பல சிக்கல்களைச் சந்திக்கும் துணிவும் அவள் பெற்றோருக்குத் தேவைப்பட்டது.
தாய்நாட்டின் சொந்த உணவுகளை, சமையல் முறைகளை இறுகப் பற்றியிருக்கும் ஈழத்தமிழர்கள், அந்த உணவுகளுக்குள் தம் உறவுகளை, நண்பர்களை, தத்தம் ஊரை, நட்பை, அந்த உணவு குறித்த நினைவுகளை தினம் தினம் மீட்டெடுக்கிறார்கள்.
உலகத்தின் மொத்த அசையா சொத்துக்களில் 20%க்கும் குறைவாகவே பெண்களின் பெயரில் இருப்பதாக கணக்கெடுப்புகள் கூறுகின்றன. பினாமியாக வாங்கப்படும் சொத்துக்களும் சேர்த்தே இந்த லட்சணம்தான்.
மணமகள் செல்வம் தரும் பழக்கம் ஆப்பிரிக்க இனக்குழுக்கள் மத்தியில் மட்டும் அல்லாமல், தமிழ்நாட்டில் உள்ள விவசாயம் மற்றும் கால் நடை சமூகங்கள் மத்தியிலும் பரிசம் போடுதல் என்ற பெயரில் காணப்படுகிறது.
திரைப்படங்களில் நகைச்சுவை என்ற பெயரில் பருமனான உடல்வாகு கொண்ட பெண்கள் அசிங்கமாக உருவக்கேலி செய்யப்படுகிறார்கள். இதை யாரும் கேள்வி கேட்பதில்லை. மாறாகச் சிரித்து இன்னும் அவர்களை அவமானப்படுத்துகிறார்கள். ஆண்களைவிடப் பெண்களே அதிக அளவில் உடல்ரீதியான கேலிக்கு உள்ளாகிறார்கள். ஆண்களைக் கவரும் விதத்தில் உடலை வைத்துக்கொள்ள அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அதுவும் அவர்கள் குடும்பத்தாராலேயே நிகழ்கிறது.
உஸ்மானுக்கு ஒரு நீதியும் ரவிக்கு ஒரு நீதியும் வழங்கும் சமூகத்தில் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம். இதுபோன்ற எழுதப்படாத சமூக விதிகள் சாமானிய மக்களுக்கு, பெண்களுக்கு எதிராக இருப்பின் உரக்கக் கூறுவோம் ’பிரேக் த ரூல்ஸ்’ என்று.
இன்றைக்கும் மார்பகப் புற்றுநோய், தைராய்டு, கருப்பைக் கட்டி போன்ற நோய்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு மருத்துவம் பார்க்காமல் பேயோட்டிக்கொண்டிருப்பதால் மடிந்துகொண்டிருக்கின்றனர்.