இத்தனை நாள் நான் இப்படி இருந்ததில்லை… இப்பொழுது எப்படி?

ஏன் திடீரென்று குழப்பம்?

ஏன் என் எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை?

ஏன் என் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை?

சோர்வாக உணர்கிறேனே ஏன்?

இப்படி நாற்பதுக்கு மேல் நமக்குள் கேள்விகள் வரும். எனக்கு மட்டும் ஏன் இப்படி எனக் கழிவிரக்கம் வரும்.

ஆனால், எல்லாப் பெண்களுமே இந்த மாற்றத்தைத் தாண்டிதான் ஆக வேண்டும். ஒவ்வொருக்கும் ஒரு மாதிரியான சிக்கல்கள் இருக்கும். ஆனால், பெரும்பான்மையோர் இந்த மாற்றம் தாண்டியே வெளிவர வேண்டும் என்பதுதான் நிஜம்.

ஹார்மோன்கள் சுழற்சியால் உடல் மட்டுமல்ல, மனதிலும் பல மாற்றங்கள். அனைவருக்கும் தெரியும் மூட் ஸ்விங், பாலியல் ஈடுபாட்டில் மாற்றம், மனத்தளவில் மாற்றம். சில நேரம் எலும்பு, இதய சிக்கல்கள் எல்லாம் வரக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.

அதைவிட மிக முக்கியமான விஷயம், நம் கட் ஃப்ளோரோவும் பாதிக்கப்படுவதுதான். கட் ஃப்ளோரா மெனோபாஸில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களில் ஏற்படும் ஸ்ட்ரெஸ் மூலமும் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

இன்னொரு விஷயமும் சொல்ல வேண்டும். ஈஸ்ட்ரோஜன் குறைவதால் ஸ்ட்ரெஸ் மட்டும் அதிகமாவதில்லை, அது சம்பந்தமாக வயிறு சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அதாவது கேஸ்ட்ரிக், நெஞ்செரிச்சல், ஜீரணமின்மை, மலச்சிக்கல் போன்றவையும் ஏற்படும்.

உடனே இவையெல்லாம் எல்லாலோக்குமா எனில் சொல்ல முடியாது. இருப்பினும் மெனோபாஸ் நேரத்தில் இவையெல்லாம் வர வாய்ப்பு இருக்கிறது. கால் ஸ்டோன்ஸ் வர வாய்ப்பு இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

அதைவிடப் பெரிய வில்லன் ஒன்று காத்திருக்கிறது, அதுதான் உடற்பருமன். அது ஒன்றே போதும். அத்தனை ஏழரைகளையும் கூட்டிக்கொண்டு வருவதற்கு.

மெனொபாஸ் என்பது ஒரு நாளில் நடப்பதா?

ஏதாவது இழப்பு ஏற்படுகிறதா?

அப்படி எனில் என்ன?

மெனொபாஸ் என்பது ஒரு பெண்ணின் இனப்பெருக்க சக்தியை முடித்துக்கொள்கிறது. ஓவரியன் தன் செயற்பாடுகளைக் குறைத்துக்கொள்கிறது.

இதெல்லாம் ஒரு நாளில், வாரத்தில், மாதத்தில் நடப்பதில்லை. இது பல கட்டங்களில் நடைபெறும். எப்படிச் சூரியன் உதிப்பதும் மறைவதும் சட்டென இன்றி படி நிலைகளில் இருக்கிறதோ அப்படித்தான்.

இவை இனப்பெருக்க உறுப்புகளில் மட்டும் மாற்றம் கொண்டு வருவதில்லை. இனப்பெருக்கம் செய்யாத உறுப்புகளும் இணைந்துதான்.

WHO வின் பதத்தில் சொல்வதெனில் இயற்கையான மெனோபாஸ் என்பது ஸ்பாண்டனனியஸ் மெனோபாஸ் என்கிறது. அதாவது தொடரியக்கம் என்கிறார்கள். அதாவது மென்சுரேஷன், உதிரப்போக்கு முடிவுக்கு வந்து ஓவேரியன் தன் முட்டை உற்பத்தியை நிறுத்திக்கொள்கிறது.

உண்மையில் இது நடக்க ஒரு வருடம் ஆகும்.

கர்ப்பப்பை பெண் இனத்திற்குக் கொடுக்கப்பட்ட ஒரு சிறப்பு உறுப்பு. இது ஹார்மோன்கள் விளையாட்டிற்கு ஏற்ப தன் செயற்பாட்டைச் செய்யும் ஓர் உறுப்பு. இதுவும் தன் இனப்பெருக்கத்தை முடித்துக்கொள்ள ஏதுவாக மெனோபாஸ் காலம் இருக்கிறது.

இது 45 இல் இருந்து 52க்குள் பெரும்பாலும் நடந்தாலும் 40இல் இருந்து ஆரம்பிக்கிறது. இதற்கான அடுத்தடுத்த நிலைகள் பின் வருமாறு.

Peri menopause: இது மெனோபாஸ் ஆரம்பிக்கும் நிலைக்குச் சற்று முன். மெனோபாஸ் ஆரம்பம் வரை நீடிக்கும். இங்குதான் அறிகுறிகள் லேசாக ஆரம்பிக்கும். நமக்கு ஏதாவது புது அறிகுறிகள் தோன்றும். இது ஒரு அழைப்பு மணிபோல். வருகிறது என்று என்று அறிவிக்கும் இடம்.

Menopausal Transition: இந்த இடத்தில் உதிரப்போக்கில் மாற்றம் வரும் நேரம். நம் மாத நாட்களிலும் மாற்றம் வரும். மெனோபாஸ் முன்புக்குப் பின் நம்மை மெனோபாஸ் நோக்கி அழைத்துச் செல்லும் காலக்கட்டம். சில நேரம் மாதவிடாய் அதன் உச்சத்தை அடையும் காலமாகவும் இருக்கலாம்.

Climacteric: இதுதான் மாற்றத்துக்கான மிக முக்கியமான நிலை. அதாவது இனப்பெருக்க நிலையில் இருந்து இனப்பெருக்கம் நிறுத்தும் நிலைக்குச் செல்வது. ஆங்கிலத்தில் Non reproductive stage. ஏஜிங் எனப்படும் வயதாவது இந்தக் காலக்கட்டத்தில் நடக்கும்.

Pre Menopause: பலர் ப்ரி மெனோபாஸ் அறிகுறிகள் எனச் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கலாம். இது இனப்பெருக்கக் காலக்கட்டத்தின் கடைசி இரு வருடங்களைக் குறிக்கும். Non re productive நிலைக்குச் செல்லும் முன் அதாவது இனப்பெருக்கக் காலக்கட்டம் நிறுத்தும் முன் காலத்தை இப்படிக் குறிப்பிடுகிறார்கள். பெரும்பாலும் மருத்துவப் பதத்தில் பல வருடங்கள் மெனோபாஸ் நோக்கிச் செல்லும் காலக்கட்டம் Peri Menopause எனவும், நாம் மெனோபாஸ்க்கு முந்தைய காலக்கட்டத்தை Pre Menopause எனவும் அழைப்போம்.

Induced Menopause: மருத்துவக் காரணங்களால் சிலருக்கு இரண்டு ஓவரிகளும் எடுக்கப்படும். இதில் கர்ப்பப்பை எடுப்பதும் நடக்கும். சிலருக்குக் கர்ப்பப்பை இருக்கும். சிலருக்கு கீமோதெரபி, ரேடியஷன்களால் ஓவரியின் இனப்பெருக்கம் தடைப்படும் வாய்ப்பும் இருக்கிறது. இதன் பக்க விளைவுகள் அதிகம். திடீரென்று ஈஸ்ட்ரோஜன சுரப்பு தடைப்படுவதால் இவர்களுக்கு அதிக பாதிப்பு இருப்பதாகத் தெரிகிறது. இது இயற்கை மெனோபாஸ் அல்ல. மருத்துவ ரீதியில் வருவது.

Natural Menopause or Spontaneous Menopause: கொஞ்ம் கொஞ்சமாகத் தன் செயற்பாடுகளை ஓவரி நிறுத்துகிறது. இது மாதவிடாய் உதிரப்போக்கு முடியும் காலம், இது 12 மாதங்கள் மாதவிடாய் முடிந்தபின் முடிவுக்கு வரும். இது எக்காரணத்திலும் வராது இயற்கையாகப் படிப்படியாக நடக்கும்

Post Menopause: இந்தக் காலம் மெனோபாஸ் நேரத்தில் முடியும் கடைசி மாதவிடாயுடன் ஆரம்பிக்கும். இது இயற்கையாகவும் இருக்கும் அல்லது ஏதாவது காரணத்திலோ இருக்கும். சிலருக்கு நாற்பதுக்கு முன்பேகூட ஏற்படும். அது புகைப்பிடித்தல், உடல் பருமன் போன்ற காரணங்களாலும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதற்கும் அறிகுறிகள் உண்டு.

மெனோபாஸ் நேரத்தில் பெண் உடலில் என்ன நடக்கும்?

(பார்ப்போம்…)

படைப்பாளர்:

கிர்த்திகா தரன்

இணையத்தில் தொடர்ந்து பல வருடங்களாக இயங்கி வருகிறார். இரண்டு டயட் புத்தகங்கள் உள்பட மூன்று புத்தகங்களை வெளியிட்டு உள்ளார். பெண்ணியப் பார்வையில் தொடர்ந்து எழுதி வருகிறார். ‘ஹெப்டா சென்ஸ்’ என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். உணவும் மன நலமும் உட்பட்ட நியூட்ரிஷியன் சைக்காலஜி துறையில் ஈடுபட்டு வருகிறார். சமூகப் பணியாக ‘அட்கனக்ட்’ என்ற அமைப்பும் ‘வுமன் எண்டர்பிரனர் இந்தியா’ என்ற அமைப்பையும் நண்பர்களுடன் நடத்தி வருகிறார். என் எல் பி பயின்று நான்கு வருடங்களாக zenlp trainer ஆக கார்பரேட் டிரைனிங் செய்கிறார். பல்வேறு இதழ்களிலும் எழுதி வருகிறார்.