பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பை உறுதி செய்ய இயலாதது ஏன்?
10% எண்ணிக்கையுள்ளவை தான் ஊடகங்களின் வழியாக வெளியே வருகின்றன. 90% வன்முறைகள் வெளியே தெரியாமலேயே மறைக்கப்பட்டு விடுகின்றன. அல்லது மறக்கப்படுகின்றன.
10% எண்ணிக்கையுள்ளவை தான் ஊடகங்களின் வழியாக வெளியே வருகின்றன. 90% வன்முறைகள் வெளியே தெரியாமலேயே மறைக்கப்பட்டு விடுகின்றன. அல்லது மறக்கப்படுகின்றன.
வாழ்க்கையில் இலக்குகள் மிகவும் அவசியம். ஆனால், அந்த இலக்குகளை அடைவதை மட்டும் உங்கள் மகிழ்ச்சிக்கான காரணமாக வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் இலக்குகளை நோக்கிய பயணமும் மகிழ்ச்சியே.
பெண்கல்வியைப் பள்ளிக் கல்வியில் 100% சேர்க்கை என்று உறுதி செய்தாலும் உயர்கல்வியில் சேர்க்கை பாதியைக்கூட எட்ட முடியாத வகையிலேயே இருக்கிறது. இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் முக்கியக் காரணம், பொருளாதாரப் பிரச்சனைதான்.
ஒவ்வோர் இந்திய வீட்டிலும் மனுஸ்மிருதி இல்லாமல் இருக்கலாம். ஆனால், வாய்மொழியாகவும் வாழ்வியல் வழியாகவும் சமூக உரையாடல்கள் வழியாகவும் இன்றும் மனுஸ்மிருதி புழக்கத்தில்தான் இருக்கிறது. இதுமட்டும் அல்லாமல் பெரும்பான்மையான இந்தியப் பெண்கள் சனாதன தர்மத்தில் உள்ள ‘வர்ணாஷ்ரம தர்ம’ சாதி அமைப்பால் ஒடுக்கப்படுகிறார்கள்.
பொருளாதாரமும் உறவுகளும் அல்லது சொத்து சுகங்களும் உங்களுக்கு இழப்பதற்கான ஒரு விஷயமாக இருந்தால், ஒன்றை நினைவில்கொள்ளுங்கள், எந்த நேரமும் அந்த விஷயங்களைப் பன்மடங்காக உங்களால் உருவாக்கிக்கொள்ள முடியும்.
இணையதளங்களிலும் ஊடகங்களிலும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை ஏன் அரசு பள்ளிகளில் சேர்ப்பதில்லை என்ற குரல்கள் வந்துகொண்டே இருக்கும். அதற்கு ஆசிரியர்களின் குரல்களில் இந்தக் கழிப்பறைப் பிரச்னை மிக முக்கியமான பதிலாக இருக்கிறது.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். யாருக்கு நடனம் பிடிக்கிறதோ, அவர்கள்தானே நடனம் கற்றுக்கொள்ள வேண்டும். எதற்காக அவருடைய குழந்தையைக் கற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும்? அவருக்குக் கால்கள் நன்றாகவே இருக்கின்றன. வயது ஒரு தடையே அல்ல. பொதுவாக நம் கடந்துபோன கனவுகளை, இப்படித்தான் குழந்தைகளிடம் சுமத்திக்கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாடு போல் மற்ற மாநிலங்கள் திராவிட-ஆரிய கலாச்சாரப் போர் குறித்த புரிதலோடு தீவிரமாக அந்த ஒடுக்குமுறைகளை எதிர்ப்பதில்லை. அதனால் தான் ‘தமிழர்களின் உரிமை’ என்று பேசப்படுவது போல் ‘தெலுங்கர்களின் உரிமை’ அல்லது ‘இந்தி பேசுபவர்களின் உரிமை’ என்று பேசப்படுவதில்லை. அதுமட்டுமில்லாமல், தமிழர்களின் உரிமைகள் பறிபோகிறது என்று பேசினால் பிரிவினைவாதிகள் என்ற முத்திரை குத்தப்படும். ஒடுக்குமுறையை எதிர்த்து மிகச் சரியான கேள்வியைக் கேட்போரைத் தேசத் துரோகி என்றும் பிரிவினைவாதி என்றும் ஆளும் வர்க்கம் அடையாளப்படுத்துகிறது.
அன்புக்கும் (love) ஆடம்பரச் சலுகைக்கும் (pampering) வித்தியாசம் உண்டு. அந்த வித்தியாசத்தை உணர்ந்து, குழந்தைகளுக்கு அன்பை மட்டுமே கொடுங்கள். ஆடம்பரச் சலுகைகளை அல்ல.
சூழ்நிலைகளால் கனவுகள் நொறுங்கி , குடும்பத்திற்காகத் தங்களை மெழுகுவர்த்திகளாக மாற்றிக்கொள்ளும் பெண் குழந்தைகள் நிரம்பிய சமூகம் இது. குறிப்பாகக் கிராமங்களில் இன்னும் பெண்களுக்கு விருப்பம் சார்ந்த படிப்பு கிடைப்பதில்லை.