UNLEASH THE UNTOLD

தொடர்வோம்

ஒளியேற்றிய சிறு தீக்குச்சி

இவரைச் சாமானியர் எனச் சொன்னால் கள்ளிகுளம் ஊரே கொந்தளித்து விடும். அவ்வளவு  நல்மதிப்பைப் பெற்றவர். ஒரு ஆசிரியராகத் தன் வாழ்வைத் தொடங்கியவர்,  எப்படி ஆயிரக்கணக்கானவர் மதிப்பைப் பெற்றார் என்பதே இப்பதிவு.  பணியில் இருக்கும் போது…

நள்ளிரவிலொரு தனிப்பயணம்

பேருந்தில் திருச்சிக்குச் செல்வதற்காகக் கிளாம்பாக்கம் போனபோதே பேரனுபவம் தொடங்கிவிட்டது. அதிலிருந்து ஒரு விள்ளலை மட்டும் இங்கு பகிர்கிறேன். அன்று காலை 7 மணிக்குக் கிளம்பியவள், மாலை 5 மணிக்குத் திருச்சி சேர்ந்தேன். அரசுப்பேருந்தில் திண்டிவனம்,…

பேதமின்றி ஒலிக்கிறது ஒலிபெருக்கி

ஏரலில் கணிசமான அளவு முஸ்லிம்கள் வாழ்கின்றனர். ஏரல் பஜாரில் முஸ்லிம் வணிகர்களும் அன்றிலிருந்து இன்றுவரை வெற்றிகரமாகத் தொழில் புரிந்து வருகின்றனர். சுற்றியுள்ள ஊர்களிலிருந்து ஜவுளிக்கும் பாத்திரத்துக்கும் நகைக்கும் ஏரலுக்கு வந்து செல்லும் மக்களும், அவர்கள்…

நினைவோடைகள்

வாழை மனதின் நினைவோடைகளை இப்படி எழுதுவது ஒரு சின்ன ஆசுவாசத்தைத் தருகிறது. வங்கோடையில் நீண்ட நெடும்பாதையில் நடந்துகொண்டே இருக்கையில், எதிர்ப்படும் ஒரு பெரிய ஆலமரத்தின்கீழ் இளைப்பாறுவதுபோல. முகநூல் முழுதும் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்த ‘வாழை’ படத்தைப்…

எஞ்ஞான்றும் மாப்பெரிது : சிமோன் பைல்ஸ்

கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் தி டைம் – GOAT – என்கிற பட்டத்துக்கு முற்றிலும் தகுதியானவர் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீரர் சிமோன் பைல்ஸ். ஒலிம்பிக் பதக்கங்களே பத்துக்கும் மேலே. முப்பதுக்கும் மேற்பட்ட உலகளாவிய பதங்கங்கள்….

'முருங்கை அரசி' பொன்னரசி 

‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என்பது போல முருங்கையைக்  கொண்டே தனது வாழ்வை இன்னொரு கட்டத்திற்கு எடுத்துச் சென்ற ஒரு பெண்ணின் கதை இது. பெயர் பொன்னரசி. கடந்த பத்தாண்டுகளாக இயற்கை வேளாண்மை செய்கிறார். பாட்டன்…

நிமிர்ந்த நன்னடை

4000 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஆர்க்கியா என்னும் கடுஞ்சூழல் வாழ் பாக்டீரியாக்கள்தான் முதன் முதலில் தோன்றிய உயிர்வாழும் செல்கள். அவை எரிமலை லாவாவின் சாம்பல், அதீத வெப்பம்,  ஆழ்கடலின் அதிக உப்பு, அதீத அழுத்தம்…

கிளை பிரியும் சொற்கள்

தமிழ் இலக்கியத் தொண்டர்கள் தமிழ் இலக்கியம் படித்தவர்களை விடவும் பிற துறைகளில் பணியாற்றியவர்கள், தமிழ் மொழிக்கும் இலக்கியத்துக்கும் செய்த தொண்டுகள் அதிகமென்று கேள்விப்பட்டிருக்கிறேன். வீடு அடுக்கும்போது கிடைத்த சில பழைய நூல்களைப் புரட்டியபோது சில…

நேசமணி பாட்டியும் சிறு வியாபாரிகளும்

இது எங்கள் பகுதியில் சிறு வணிகம் செய்த பெண்களைக் குறித்தப் பதிவு என்றாலும் அவர்களுள் எனக்கு நன்கு தெரிந்தவர்; எதிர்வீட்டு நேசமணி பாட்டி என்பதால் அவர்கள் பெயரைத் தலைப்பாகக் கொடுத்துள்ளேன். இவர் எங்கள் தெருவின்…

பூக்கள் பூத்த தருணம்

உலகம் முழுக்க உயிர்கள் நிரம்பியிருக்கவும் வீடு முழுக்க மகிழ்ச்சி நிரம்பியிருக்கவும் அவசியமானது யாராவது சோறு ஆக்கிவைத்திருத்தல்.  வீட்டில் ஒருவர் சமைத்து வைத்திருப்பார் என்றால் தைரியமாக கால தாமதமாக வீடு வந்து சேரலாம். அதுபோலத்தான் விலங்கினங்கள்…