UNLEASH THE UNTOLD

குட்டிப் பெண்களின் பெரிய கதைகள்

கார்த்தீஸ்வரி

“இல்ல டீச்சர்… செத்துப் போயிட்டா…” எல்லோரும் அமைதியாய் இருக்க, ஒரு குட்டி வாண்டு கத்தியது. வசந்திக்கு ஒரு கணம் மூச்சு நின்றது. என்ன நடந்தது? ஏதும் விபத்தா? விசாரித்த போது, எதையும்  மறைக்கத் தெரியாத அந்தக் குழந்தைகள் கதை கதையாகச் சொன்னதன் சாராம்சம் இதுதான்.

மல்லிகா

“சாதி கெட்ட நாய்களுக்கு எங்க சாதியில் பொண்ணு கேட்குதோ? ஒண்ணுந்தெரியாத எம்மவளை மயக்கி இழுத்துட்டுப் போகச் சொல்லிட்டு இப்ப குடும்பமா சேர்ந்து நாடகமாடறீகளோ..? வயிறெரிஞ்சி சொல்றேன்…குடும்பத்தோட நாசமாப் போயிடுவீங்க”, என சாபமிட்டு அழுதுகொண்டே போய்விட்டாள்.

சோலையம்மாள்

ஒருநாள் அவன் எண்ணிலிருந்து இவளுக்கு வாட்சப்பில் செய்தி வர ஆர்வமாய் திறந்து பார்த்தவளின் உடல்  குலுங்கியது. அன்றொருநாள் அம்மாவின் போனில் பார்த்ததுபோலவே ஆபாசமான படங்கள். ஆனால் அன்றைய அருவருப்பு இப்போது இல்லை. வாய் தன்னிச்சையாக “ச்சீய்…” என்றாலும், அந்த வயதிற்கேயுரிய ஆர்வத்துடன் திரும்பத் திரும்பப் பார்த்தாள். இதழ்களில் அவளையுமறியாமல் புன்னகை வழிந்தது. ஒரு ஹார்ட்டின் மட்டும் அனுப்பினாள். 

நளினி

“அதுசரி… படிக்கச்சொல்ல வேண்டிய டீச்சரே இப்படிச்சொன்னா வெளங்கிப்போயிடும், கோலமும் அலங்காரமும் தான் நாளைக்கு அவளுக்கு சோறு போடப்போகுதா என்ன?”



காளீஸ்வரி

When I was a baby You would hold me in your arms என்று தொடங்கிய அந்த ஆங்கிலப் பாடலை சாரதா டீச்சர் விவரித்துக் கொண்டிருக்க, கண்ணிசைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் காளீஸ்வரி. காளீஸ்வரிக்கு…

பேச்சியம்மாள்

“அவங்கப்பன் சம்பாதிக்கிற காசு டாஸ்மாக் போனது போக ‘ஒலக்கஞ்சி’ க்குக் கூட காணாது. அப்படி இப்படி நாலு காசு பார்த்தாத்தான பொட்டப்புள்ளைக்கு சேர்த்து வைக்க முடியும்?” என்று தனது அடாவடித் தனத்துக்கு, அவளுக்கு அவளே  நியாயம் சொல்லிக்கொள்வாள். அதனால் எந்த பழி பாவத்துக்கும் அஞ்சுவதில்லை.

முத்தழகி

“உன் சுயநலத்துக்காக அப்பாவி பிள்ளைகளை பலி கொடுப்பியா? இதுதான் கடைசி. அதுவும் அந்த அம்மா முகத்துக்காக செய்யறேன். இனிமேல் இப்படி வந்த… நானே போலீஸ்ல கம்ப்ளெயின்ட் பண்ணிடுவேன்”, வார்டனிடம் உறுமிய டாக்டர்,  “அட்மிஷன் போடுங்க, ஆனா ரெக்கார்ட்ஸ் எதுவும் வேணாம்”, என நர்சிடம்  மெல்லிய குரலில் சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார்.

போதும் பொண்ணு

போதும்பொண்ணுவின் மனதுக்குள் தோன்றியது. “டீச்சர் சொன்னது பொய், ஒரு நாளும் ஆம்பளயும் பொம்பளயும் சமமே கிடையாது, சமமாகவே முடியாது.”

வீரலட்சுமி

இரண்டு பேரும் ஆசை ஆசையாய் நெய் ஒழுகிக் கொண்டிருந்த கேசரியை எடுத்து வாய் கொள்ளாமல் அடக்கினார்கள். அவன் மெதுவாக அவர்கள் முன்னாலேயே பேன்ட்டை உருவி சுவரை ஒட்டி இருந்த கொடியில் போட்டான். சட்டையைக் கழற்றினான். வெறும் ஜட்டியோடு நின்றான்.

கல்பனா

கந்தகபூமியின் சிறு துண்டாய் எப்போதும் தகித்துக் கிடக்கும் அந்த கிராமம். உழைப்பைத் தவிர வேறொன்றும் அறியாத மக்கள்.