UNLEASH THE UNTOLD

யாமினி

உணர்வுசார் நுண்ணறிவு என்றால் என்ன?

நமது மொத்த நாளையும் உருப்படியாகக் கழிக்கப் போகிறோமா அல்லது வீண் மன வருத்தத்தில் கழிக்கப் போகிறோமா என்பது நமது ‘மூட்’ எனும் உணர்வு நிலையைப் பொறுத்துதான். அதையும் அந்த மூடைக் கெடுப்பது காலை உணவான உப்புமா, அலுவலகத்தில் பிழிந்தெடுக்கும் மேலாளர், சரியான சில்லறைத் தராத பேருந்து நடத்துநர், இன்னும் சுத்தம் செய்யப்படாத அலுவலக அறை, காலையில் நேரத்திற்கு எழாத பிள்ளைகள் என்று எளிதான காரணங்கள் போதும். இன்று உங்களுக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கலாம், அது உங்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அளவுக்கு முக்கியமானதாக இருக்கலாம், இந்த அற்ப காரணங்களுக்காக அதைக் கெடுத்துக் கொள்ளலாமா?

மற்றவர் நிலையில் இருந்து பார்த்தீர்களா?

நாமும் அப்படியே ஒன்று யாரையும் புரிந்து கொள்ளாமல் கோபப்படுவோம், பொறாமைப்படுவோம், அவரோடு விரோதம் பாராட்டுவோம், இல்லாவிடில் அவருக்கு ஏதோ பிரச்னை நாம் உதவி புரிவோம் என்றெண்ணி அவரைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் உதவி என்கிற பெயரில் ஓர் ஏழரையைக் கூட்டி, பின்னர் நான் நல்லதுதானே நினைத்தேன் என்று மருகுவோம். ஒன்று அடுத்தவருக்கு வேதனை, அடுத்தது அவரோடு நமக்கும் வேதனை.

தனிமையில் நேரம் செலவிடுகிறீர்களா?

நாம் உணர்வின் பிடியில் இருக்கும் போது, பொதுவாகக் கடந்த காலப் பாதிப்புகளோ, எதிர்காலப் பயங்களோதான் அதிகம் மனதை ஆக்கிரமித்திருக்கும். இதனால் நிகழ்காலம் என்ற ஒன்றிருப்பது நினைவில் இருக்காது. அது போக நிகழ்காலத்தில் செய்யும் சரியான செயல்களால் எதிர்காலப் பயங்களை இல்லாமல் செய்யவோ, எதிர்கொள்ளவோ முடியும் என்றும் யோசிக்க முடியாது. இன்று செய்யும் தவறான செயல்கள் எதிர்காலத்தை இல்லாமல் ஆக்கக்கூடும் என்பதும் புரியாது.

சிந்தித்துச் செயல்படுவோமா?

இன்றைய அவசர உலகில் அனைவருமே ஏதோ ஒன்றை நோக்கி ஓடுகிறோம். அதில் வெற்றி பெற முடியாவிடில் மற்றொன்றை நோக்கி ஓடுகிறோம். ஏன் வெற்றி பெற முடியாமல் போனதென்று யோசித்து சரி செய்ய நமக்கு நாம் நேரமே கொடுப்பது இல்லை.

லட்சியத்தை அடையும் வழிமுறைகள்

நாம் யாரும் இயந்திரமல்ல, நிச்சயம் இதிலிருந்து அவ்வப்போது விலகுவோம். ஆனாலும் பாதைத் தெளிவாக இருந்தால்தான், விலகுகிறோம் என்பதே புரியும். இல்லாவிடில் வெகுதூரம் வந்த பின்தான் பாதை மாறியதே தெரியும். சரி செய்ய நீண்ட காலம் பிடிக்கலாம் அல்லது சரி செய்ய முடியாமலே போகலாம்.

நோக்கம் கண்டுகொண்டால் வாழ்வே பரிசாகும்!

ஒவ்வொரு நாளும் விழிக்கும் போதும், இந்த நாளில் நாம் என்ன செய்யப் போகிறோம், ஏன் செய்யப் போகிறோம் என்கிற தெளிவுடன் எழுபவருக்கு, எதைச் செய்யக் கூடாது என்கிற தெளிவும் இருக்கும்.

உன்னை அறிந்தால்... நீ உன்னை அறிந்தால்...

தேடலைத் தனக்குள் ஆரம்பிக்கும் பயிற்சி கைவந்துவிட்டால் வானமே உங்கள் வசம்தான். மனம் உணர்வு கொந்தளிப்பில் இருக்கும் போதெல்லாம், உணர்வை விட்டுவிட்டு நாம் நம்மில் மூழ்கி விட ஆரம்பிப்போம்.

உடலும் மனமும் கொடுக்கும் சிக்னலைப் புரிந்துகொள்வது எப்படி?

சில சமயம் கணவர், பிள்ளைகளுக்கும் அது நீண்ட களைப்பான நாளாக இருந்திருக்கலாம். நீங்கள் திறந்த மனதுடன் பேச முன்வரும்போது அவர்களுக்கான பிரச்னையும் புரியும். அதற்கேற்றபடி அந்த வேலைகளைப் பிரித்துக் கொள்ளும் போது, அனைவருமே ஒரு நல்ல மனநிலையில் இருக்க முடியும். இங்கு மட்டுமல்ல எப்போதுமே செய்யும் வேலை முக்கியமல்ல, வேலை செய்யும் போது நம் மன நிலைதான் முக்கியம்.

நமது உணர்வுகளைத் தெளிவாகப் புரிந்துகொள்வது எப்படி?

நாம் கனவு காணும் சமமான சமுதாயத்தில் இது இல்லாமல் போகும்.  சிக்கலான மனம் இரு பாலருக்கும் ஒன்றுதான். மனம் சிக்கலானது எனில் அதில் பிறக்கும் உணர்வுகளும், அதனால் நமக்குள் எழும் மாற்றங்களும்கூட அப்படித்தான். ஒரே நிகழ்விற்கு வெவ்வேறு நபர்களிடம் நாம் வெவ்வேறு விதமாக நடந்து கொள்ளலாம், வெவ்வேறு நேரத்தில் ஒரே நபரிடம்கூட நாம் அதே விதமாக நடந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. ஏனெனில் “அது போன வாரம், இது இந்த வாரம்.“

புத்திசாலித்தனம் என்பது என்ன?

பொதுவாக ஒருவரை அறிவாளி, புத்திசாலி என்று புகழும்போது நாம் குறிப்பிடுவது அவரது அறிவு கூர்மையை மட்டுமே. எத்தனையோ பெற்றோர் மொழிப் பாடத்தில் அதிக மதிப்பெண் வாங்கினாலும் கணக்கிலும், அறிவியலிலும் முழு மதிப்பெண் வாங்காத குழந்தையை அறிவாளி என்று ஒத்துக்கொள்வது இல்லை.