உலகெங்கும் உழைக்கும் மகளிர்!
மேலும் படிக்க… பசுந்தட்டில் ஒரு புத்தர் முத்தங்களுடன் பயணிப்பவள் மூவர் உணவும் பாலின சமத்துவமும் Powered by YARPP.
மேலும் படிக்க… பசுந்தட்டில் ஒரு புத்தர் முத்தங்களுடன் பயணிப்பவள் மூவர் உணவும் பாலின சமத்துவமும் Powered by YARPP.
நீ முஸ்லீம்களை தீவிரவாதி என்பாய். நான் நட்புடன் பழகுவேன்.
நீ கிறிஸ்தவர்களை அயோக்கியன் என்பாய். நான் அன்பு காட்டுவேன்.
நீ இந்து என்று சொல்லிக்கொண்டே இந்துக்களையும் உன் சாதியச்சாக்கடையால் பிரிப்பாய். நான் சாதியத்தை கடந்து நேசம் கொள்வேன். எனக்குத் தேவை மனிதம் மட்டுமே.
உணர்ச்சிகளை கையாளும் விதத்தில் தான், நம்ம வாழ்க்கையில் நமக்கும், நம்மை சுற்றியிருக்கும் மற்ற மனிதர்களுக்கும் நன்மையோ தீமையோ செய்கிறோம்.
தலித்திய சிந்தனை என்பது இறக்குமதி செய்யப்படுவதில்லை. நான் ஒரு தலித். அதைவிட வேறென்ன வேண்டும். நான் பிறந்ததிலிருந்து என்னோட ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒடுக்கப்பட்டுதான் வருகிறேன். நான் படித்து வேலை பார்க்கிறேன் என்பதாலேயே எனக்கு விடுதலை கிடைத்துவிடவில்லை. எல்லோரும் சமம் என்று சொல்லித்தான் நான் வளர்க்கப்பட்டிருக்கிறேன்.
ஒருவேளை பாண்டியன் நெடுஞ்செழியன் நீதியை நிலைநாட்ட உயிரைத் துறந்த பின்னும் அவன் மன்னிக்கப்படவில்லை என்றால் மதுரையில் பாண்டி கோயில் என்ற ஒன்று தோன்றியிருக்குமா? செய்த குற்றத்தை எண்ணி அதற்குப் பொறுப்பேற்று உயிரைவிட்டவுடன் அவன் தெய்வமாக்கப்பட்டான்.
தேவரடியார் என்றாலும் கடவுளுக்கு சேவை செய்த உயரிய அர்ப்பணிப்புக் கொண்ட பெண்களைப் பற்றிய நினைவுதான் வரவேண்டும். அடியார் என்ற சொல் அடி என்ற வேர்ச் சொல்லில் இருந்து வந்ததாகும். அடி என்றால் பணிதல், தொழுதல் என்று பொருள்.
ஒவியர்: ரம்யா சதாசிவம் மேலும் படிக்க… ஒரு வண்ணத்துப்பூச்சியின் கதை சோளக் கடவுள் ஒரு மனுஷி ஒரு வீடு ஓர் உலகம்-6 பெண் ஓவியம் Powered by YARPP.
“அம்மா… பாரும்மா நந்து இன்னும் தூங்குறான்…” என்று பெரியவன் குரல் கொடுக்க, “நந்து… நந்துக்குட்டி எழுந்து வா…” என்று சமையலறையிலிருந்து எட்டிப்பார்த்து பெயருக்குக் குரல் கொடுத்துவிட்டு, சமையலைத் தொடர்ந்தேன். அவனிடம் போனால் வேலை முடியாது,…
சில மணி நேரம் வரை அப்படியே நிர்வாணமாய் இருந்து குளித்துவிட்டு, வீட்டின் அறைகளில் கூட அப்படியே திரிவாராம். வளருக்கு முதலில் சங்கடமாக இருந்தது போகப்போக, மாமியாரின் மனநிலை புரிந்து அவர் மீது இரக்கம் தான் தோன்றியதாம். ‘உடம்ப, ஒத்த அறை மட்டும் இருக்குற வீடு மாதிரியே வச்சுக்கிட்டுத்தான் செத்துப் போப்போறேன். ஜெயில்ல இருக்குற மாதிரி. நீயாவது அப்படியெல்லாம் இருக்காத’, என்று அடிக்கடி சொல்வார் என்றாலும் மகன் முன்னால் வளரிடம் ஒரு சொட்டுக் கூட அன்பு காட்டியதில்லை.
தனக்கு வசப்படாத பெண்ணை, தனக்கு அடங்காத பெண்ணை, தன்னைவிட திறமையான பெண்ணை எப்படி அடக்குவது எனும்போது அவர்கள் உபயோகிக்கும் தார்க்குச்சிதான் அவதூறு.