UNLEASH THE UNTOLD

Month: July 2024

அமெரிக்காவின் முதல் தொழில்முறைப் பெண் வானவியலாளர் மரியா மிட்செல்

மரியா மிட்செல் வாசார் கல்லூரியில் பதவி ஏற்ற பிறகு, தொழில்முறை வானியலாளராகவும் வானியல் பேராசிரியராகவும் பணிபுரிந்த முதல் சர்வதேசப் பெண்மணி. 1865ஆம் ஆண்டில் அவர்  அமெரிக்கக் கலை மற்றும் அறிவியல் அகாடமி மற்றும் அறிவியல் முன்னேற்றத்திற்கான அமெரிக்க சங்கத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி.

இசை எதைத் தேர்ந்தெடுத்தாள்?

தன்னுடைய தேவை என்ன என்கிற தெளிவும் தீர்வும்தான் இலக்கே தவிர அது தான் யோசித்த வழியில் மட்டுமே இருக்க வேண்டும் என்கிற பிடிவாதம் இல்லா நெகிழ்வுத் தன்மை, எதிரில் இருப்பவரையும் சவாலுக்குள் சேர்த்துக் கொள்ளும் அறிவுத்திறன், எந்தச் சூழ்நிலையிலும் வேலையைவிடப் போவதில்லை என்கிற திட சிந்தனையும், அதை வெளிப்படுத்தத் தயங்காத திட மனதும் எல்லாம் சேர்ந்துதான் இசையின் வெற்றிக்குக் காரணம்.

வரலாற்றில் கம்போடியா

கம்போடியாவில் 2009இல் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழாய்வு முடிவுகள், கம்போடியாவின் வரலாற்றை கற்காலத்துக்கு  எடுத்துச் சென்று, இப்பகுதியில் கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பு மட்பாண்டங்கள் தயாரித்து பயன்படுத்திய மனிதர்கள் வாழ்ந்திருக்க வேண்டும் என்று கூறுகிறது. கற்கால வேட்டைக்குழுக்கள் முதல் ஒழுங்கமைக்கப்பட்ட சமூகங்கள் வரையிலான மனித நாகரிக வளர்ச்சியின் சான்றுகள் அகழ்வாய்வின் முடிவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

சாதிக்குள் முடங்கும் பாரம்பரியக் கலை

பாரம்பரியத்தைச் சந்ததிகள் தெரிந்து கொள்ளும் வகையிலும், பொழுதுபோக்காகவும் ஆடப்பட்டு வந்த இந்த வள்ளிக் கும்மி இப்போது சாதிப் போர்வைக்குள் சிக்குண்டு கிடக்கிறது. கடந்த இரண்டு வருடங்களில்தான் இந்த வள்ளிக் கும்மி எழுச்சி பெற்றிருக்கிறது. இது பண்பாடு, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை மீட்டெடுக்கும் முயற்சி என்கிற பெயரில் இளைய தலைமுறையினர் நெஞ்சில் நஞ்சை விதைப்பதாகவே இருக்கிறது. மட்டுமன்றி சுய சாதிப் பெருமிதத்தை அவர்களிடம் ஏற்படுத்துவதே இதன் நோக்கமாக இருக்கிறது. ஏனெனில் இப்போது முகநூலில் சாதிப் பெயர், குலப் பெயர் தாங்கிய இளையோர்களின் முகநூல் கணக்குகள் பல்கிக் கிடப்பதைப் பார்க்கிறோம்.

காதல் கணக்கெடுப்பு

இதிகாசங்களில் வருவது போல் இங்கு ராமர்களும் இல்லை; சீதைகளும் இல்லை. அதுவே இயற்கையின் நியதி. யாரும் இங்கே அக்கினி பிரவேசம் செய்யவும் தேவையில்லை.



பணம்

பராசக்தியும், பணமும் ஒரே நேரத்தில் தான் திரைப்படமாகின. ஆனால், பணம் வெளியாவதற்கு முன்பே, பராசக்தி வெளியாகி விட்டது. பணம்தான் தனக்கு முதலில் கையில் பணம் தந்த திரைப்படம் எனப் பிற்காலத்தில் சிவாஜி அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

புற்றுநோயும் பெண்களும்

பெண்களைப் பாதிக்கும் மற்றொரு முக்கியமான புற்றுநோய் என்றால் அது மார்பகத்தில் ஏற்படும் புற்றுநோய்தான். இந்தப் புற்றுநோயைத் தவிர்ப்பதற்கு பேப் டெஸ்ட் போன்ற பரிசோதனைகளை மருத்துவமனைக்குச் சென்று செய்து கொள்ளும் அவசியமில்லை. வீட்டிலேயே மார்பக சுய பரிசோதனை செய்வதன் மூலம் மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்களை உணர முடியும்.‌ மார்பகத்தில் ஏற்படும் கட்டி, எலியைப் போல உருண்டோடும் breast mouse கட்டிகள், மார்பகத்தைச் சுற்றி ஏற்படும் செதில்கள், மார்பகத்தைச் சுற்றி இருக்கும் பகுதி சிவந்து இருத்தல்‌, இரு மார்பகங்களும் வழக்கத்துக்கு மாறாக ஒன்றோடு மற்றொன்று ஒப்பிட்டுப் பார்க்கையில் வித்தியாசமான அளவில் இருப்பது, மார்பு காம்புகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவை அனைத்தும் மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள்.

நினைவை விட்டு அகலாத சுற்றுலா!

மதியம் உணவு நேரம் வந்தது. சிலர் தூக்குவாளியில் சாம்பார் சாதமும் சிலர் புளிச் சாதமும் சிலர் டிபனும் மதிய உணவு எடுத்து வந்திருந்தார்கள். எங்கள் வீட்டில் எப்பவும் இலையில் பொட்டலம் கட்டிதான் கொடுத்து அனுப்புவார்கள். அனைவரும் பகிர்ந்து மதிய உணவை முடித்தோம். உண்ட களைப்பு தூக்கமும் வர ஆரம்பித்தது. ஆலமர நிழலில் அதன் காற்றின் மகிமையும் சேர்ந்து கொண்டதால்.

பெண்களும் பொருளாதாரமும்

மியூச்சுவல் ஃபண்ட் நிபுணரானவர் இவர் பெண்களுக்கான எமர்ஜென்சி ஃபண்டுக்கு இப்படி விளக்கம் தருகிறார். இது பெண்ணுக்கு ஏன் முக்கியம் என்றால் அவருக்குப் பிடிக்காத உறவு அவரைக் கொடுமைப்படுத்தும் கணவரிடம் இருந்து குடிகாரக் கணவனிடம் இருந்து அல்லது உடல் அளவு துன்புறுத்தும் உறவுகள் இடம் இருந்து பிரிந்து தன்னை நிலைப்படுத்திக் கொள்ள இந்த எமர்ஜென்சி கண்டு உதவும் என்று கூறுகிறார் இதைப் பெண்களின் பெற்றோர்கள் உணர வேண்டும்.

லிடியா

லிடியா, ”விருது முக்கியமானதுதான். இவ்விருதுக்கு என்னுடன் பயணிக்கும் நண்பர்களுக்கு உரிமையானது. விருது பெற்றபோது என்னிடம் ஆராவாரமில்லாத அமைதியான உணர்வே இருந்தது. என் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாத வார இறுதிநாட்களில் பெற்றோருடன் குப்பை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அப்போது எனக்காகக் குப்பையிலிருந்து பொம்மை எடுத்து, பத்திரப்படுத்தி, நான் செல்லும் போது கொடுப்பார்கள். அந்த சந்தோஷத்தை விட வேறு எதுவும் பெரிதில்லை” என்றார்.