UNLEASH THE UNTOLD

Year: 2023

"நம் வீடு பற்றி எரிகிறது..."

உலக அளவில் இளைஞர்களிடையே காலநிலை செயல்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் க்ரெட்டாவின் பங்கு முக்கியமானது. அவரது செயல்பாடுகளால் உந்தப்பட்டு 150 நாடுகளில் உள்ள பதின்பருவத்தினர் காலநிலை செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். க்ரெட்டாவைப் பார்த்து ஊக்கம் பெற்று இவ்வாறு இளைஞர்கள் களத்தில் இறங்குவது ‘Greta Effect’ என்று அழைக்கப்படுகிறது. சமகால சூழல் வரலாற்றில் க்ரெட்டா ஏற்படுத்தியிருக்கும் சலசலப்பு மிகவும் முக்கியமானது, அவசியமானதும்கூட.

மகிழ்ச்சிப் பள்ளத்தாக்கில் அசத்தும் ஹன்ஸா பெண்கள்!

நீண்ட ஆயுளும் அழகும் மட்டுமே ஹன்சாக்களின் பண்புகள் அல்ல. அவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தை மதிப்பது போல் தங்கள் மன ஆரோக்கியத்தையும் மதிக்கின்றனர். குறைந்தபட்சம் 95 சதவீதம் மக்கள் கல்வியறிவு பெற்றவர்கள். லட்சக்கணக்கில் பெண் குழந்தைகளுக்குக் கல்வி மறுக்கப்படும் ஒரு நாட்டில், எல்லோருக்கும் கல்வியை வழங்கும் ஹன்சா பள்ளத்தாக்கை, ‘கல்வியின் சோலை’ என்று அழைப்பதில் எந்த ஐயமும் இல்லை.

காடுகளுக்குள் மறைந்த பொலன்னறுவை ராஜ்ஜியம்

பத்தாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இலங்கை மீது படையெடுத்து வெற்றிகண்ட ராஜராஜ சோழன், அதுவரை தலைநகரமாக இருந்த அநுராதபுரத்தைக் கைவிட்டு, அதற்கு தென்கிழக்கில் இருந்த பொலன்னறுவையை முதன்முதலில் தலைநகரமாகத் தேர்வு செய்தான். 1017 இல் ராஜேந்திரச் சோழன் மீண்டும் இலங்கை மீது படையெடுத்து, இலங்கை முழுவதையும் சோழப் பேரரசின்கீழ் கொண்டுவந்தபோதும், பொலன்னறுவையைத் தலைநகரமாகக் கொண்டே ஆட்சி செய்திருக்கிறான். இப்படியாகக் கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக சோழர்களின் தலைநகராக, ‘பொலன்னறுவை ராஜ்ஜியமாக’ கோலோச்சியிருக்கிறது இந்தப் பகுதி.

பேரைச் சொல்லவா, அது நியாயமாகுமா?

போதும் பொண்ணு, மங்களம், பூர்ணம், போதும் மணி, வேண்டா வரம், வேண்டாமிர்தம், வேம்பு இவையெல்லாம் பெண் குழந்தைகள் போதும் என்று நினைப்பவர்கள் வைக்கும் பெயர்கள். அந்த ஊரில் இருக்கும் வரை இது சரி. வெளியூருக்கு படிக்கச் செல்லும் போது, பணிக்குச் செல்லும் போது அவர்கள் எப்படியெல்லாம் கேலிக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று இத்தகைய பெயர் வைப்பவர்கள் நினைத்துப் பார்ப்பார்களா?.

உயிரைப் பணயம் வைக்க வேண்டுமா?

முன்பு அக்கம் பக்கத்தினரும் உறவினர்களும்தாம் தங்களின் பேறுகால அனுபவத்தைக் கூறி குழப்பி அடித்து, பீதியை உருவாக்கினார்கள் என்றால், இன்று அதனை இணையம் எடுத்துக் கொண்டுள்ளது. தேவை இல்லாததை கூகுள் செய்து கண்டதையும் கற்பனை செய்துகொண்டு, சின்ன விஷயங்களுக்குப் பூதாகரமாக பயந்து, மன நலம் தொலைத்து, யூ டியூபில் அரைகுறை வைத்தியர்கள் கூறும் ஆலோசனைகளை, டிப்ஸ்களைப் பின்பற்றுகிறேன் என உடல் நலத்தைக் கெடுத்துக்கொள்கின்றனர். அவர்களுக்கு நான் கூற வருவது ஒன்றே தான், உங்கள் உடல்நிலை குறித்து கூகுளிலில் விடை தேட முயற்சிக்காதீர்கள். நல்ல கைனாகாலஜிஸ்டிடம் சரணடைந்து விடுங்கள். அவர்கள் சொல்வதை முழுமையாகப் பின்பற்றுங்கள்.

கற்றுக் கொடுக்கும் செயலிகள்

மனித மூளை அபார ஆற்றல் உடையது. மூளையின் பத்து சதவீதத்தைதான் நாம் பயன்படுத்துகிறோம் என்றொரு கருத்தும் உண்டு. நினைவுத்திறன், கணிதம், மொழி என தினமும் கொஞ்சம் பயிற்சி கொடுத்தால் இன்னும் கூர்மையாக வேலை செய்யும் என்கிறார்கள் சிலர். உடற்பயிற்சி போல மூளைக்கும் பயிற்சி கொடுக்கலாம்.

இனிமே நான் உனக்கு வேண்டாமா, நிலா?

வருண் மௌனமாக அவள் விட்டெறிந்த பிரஷ்ஷை எடுத்து அதிலிருந்த முடிக்கற்றைகளைக் குப்பைத் தொட்டியில் போட்டான்.

“இல்ல, வர வர என்னை நீ ரொம்ப இக்னோர் பண்ற மாதிரி இருக்கு.”

“ஆரம்பிச்சிட்டியா? எனக்கு இன்னிக்கு நிறைய வேலை இருக்கு. டார்ச்சர் பண்ணாதே” என்று அவசரமாகக் கிளம்பத் தொடங்கினாள். சிரித்துக்கொண்டிருந்த முகத்தில் லேசான எரிச்சல்.

வருணுக்கு அழுகை வந்தது. தன் உணர்வுகளை மதிக்கவே மாட்டேன் என்கிறாளே. இவளுக்காகப் பார்த்துப் பார்த்து எல்லாம் செய்தும் அலட்சியப்படுத்துகிறாளே.

சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் பைபிள்

தடை செய்யப்பட்டாலும் அப்போதைய பயன்பாட்டின் நச்சு எதிரொலி இன்று வரை தொடர்கிறது என்பதையே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டிடிடி பயன்பாடு அதிகமாக இருந்த நாற்பதுகளில் குழந்தைகளாக இருந்தவர்களிடம் ஆரம்பித்த பாதிப்பு, அவர்களது மூன்றாம் தலைமுறை வரை தொடர்கிறதாம். “நான் குறிப்பாகப் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பைத் தெரிந்துகொள்ள விரும்பினேன். 40களில் குழந்தைகளாக இருந்தவர்களின் மூன்றாம் தலைமுறை, அதாவது அந்தப் பாட்டிகளின் பேத்திகளை ஆராய்ந்து வருகிறேன். இவர்களுக்கு மார்பகப் புற்றுநோய், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நாளமில்லா சுரப்பிகளின் பாதிப்பு ஆகியவை அதிகமாக இருக்கின்றன” என்று கூறுகிறார் ஆராய்ச்சியாளர் பார்பரா கோன்.

குடும்பங்கள் கொண்டாடும் படம்?

டிரைவர் ஜமுனா, ராங்கி, செம்பி போன்ற படங்கள் மாஸ் ஹீரோக்களின் படத்தை ஒப்பிடுகையில் நல்ல கதை அம்சத்தைக் கொண்ட படங்களே. இன்னும் பொதுச்சமூகம் ஏன் கதாநாயக பிம்பத்தையே கொண்டாடிக் கொண்டிருக்கிறது. பெண்ணுக்குப் பிரச்னைனாலும் அங்கு மீட்பராக கதாநாயகனைத்தான் தேடுகிறது. பெண்ணே அவளுக்கான நீதியைக் கேட்கும்போது ஆண் மனம் அதை ஏற்கத் துணிவதில்லை.

தேமாக்காதல்

பத்து நாள்களாகவும் வேம்பின் தலையணையும் விஜியின் தலையணையும் ஒன்றாக ஆகியிருந்தது. இரவில் மொட்டை மாடியில் படுத்தபடியே நட்சத்திரங்களை இணைத்து வேண்டுமானதை வரைந்துகொண்டார்கள் இருவரும். தனது இருபத்தி நான்கு வருடக் கதையையும் வேம்பிடம் சொல்லியிருந்தாள் விஜி.