UNLEASH THE UNTOLD

Month: January 2023

மீண்டும் ஒருமுறை...

இந்த மனிதன் வேண்டுமென்றேதான் இப்படிச் செய்வார் போலிருக்கிறது. உள்ளே விடுப்பை ரத்து செய்யச் சொல்லியவுடன் மனம் கதறியது. திங்கள், செவ்வாய் விடுப்பு எடுக்கலாமென்றால் கூடாது. அடுத்த சனிக்கிழமைதான் விடுப்பு. சென்ற முறை போலல்லாது இம்முறை மிகுந்த ஏமாற்றம். சென்ற வருடம் பிரிவுத் துயர். இவ்வருடம் பிரிவு அறுவடைநாள். அதை விட்டுக் கொடுக்க என்னால் சற்றும் இயலவில்லை. சரியான காரணம் என்று மூவருக்கு விடுமுறை உறுதியாயிற்று, எனக்கு முடிந்தவரை வேண்டும் என்று கேட்டாயிற்று. ‘சாரி மதி’ என்ற ஒற்றைப் பதிலைக் கேட்டு, கலங்கியபடி பார்க்கையில், ‘நீ செல்லலாம்’ என்று அஃதரின் வாய் சொன்னது. உண்மையில் இம்முறை என்னால் இயலவில்லை, மீண்டும் ஒருமுறை தனியே சென்று கேட்டேன்.

சினிமாவுக்குப் போகலாமா?

தலை விண்விண்ணென்று வலித்தது. இன்று வேண்டாம், இன்னொரு நாள் படத்துக்குப் போகலாம் என்று சொல்லலாமா என்று யோசித்தான். மனம் வரவில்லை. ஆதியே அத்திப் பூத்தாற் போலத்தான் இவனுடன் வெளியில் வர உற்சாகம் காட்டுவாள்; மற்றபடி தோழிகள்தாம் அவளது உலகம், ஊர் சுற்றல் எல்லாம் அவர்களுடன்தான் பெரும்பாலும்.

'ஒட்டகச்சிவிங்கி' பெண்கள்

படவுங் (கயான் லாவி) கயான் இனத்தைச் சேர்ந்த பெண்கள் இரண்டு வயதிலிருந்தே கழுத்து வளையச் சுருள்களை அணியத் தொடங்குகிறார்கள். சுருளின் நீளம் படிப்படியாக இருபது திருப்பங்களாக அதிகரிக்கப்படுகிறது. வளையங்களின் மொத்த எடை ஐந்து கிலோ இருக்கும். சுருள்களின் எடை இறுதியில் கழுத்துப்பட்டை எலும்பின் மீது போதுமான அழுத்தத்தை ஏற்படுத்தும், இதனால் அவை நீண்ட கழுத்து போன்ற தோற்றத்தை உருவாக்கும்.

சிநேகம்

சங்கருடன் ஏன் செல்லவில்லை என்று கேட்டதும் தானே பொங்கிவிட்டாள். சரிதான் ஆனால், அந்தக் குரல் அதிலிருந்த கோபம், அதிலிருந்த வாதம், அதன் தீர்க்கம் உண்மையில் என்னை ஒன்றும் பேச இயலாததாக்கிவிட்டது. அது ஒரு வெட்டிப் பேச்சோ இல்லை மேடைப்பேச்சோ நிச்சயமாக இல்லை. அது ஒரு பெண்ணின் உரிமையும் உணர்வும் கலந்த நிதர்சனம்.

<strong>வந்தியத்தேவன் வழித்தடத்தில் தொண்டைமானாறு</strong>

முந்நூறு வருஷத்துக்கு முன்னால் இளவரசனாகிய மானவர்மன் காஞ்சிபுரத்தில் வந்து சரண் புகுந்திருந்தான். அவனுக்கு ராஜ்ஜியத்தை மீட்டுத் தருவதற்காக மாமல்ல சக்கரவர்த்தி ஒரு பெரும்படையை அனுப்பினார். அவர் அனுப்பிய படைகள் இந்தப் பிரதேசத்தில்தான் வந்து இறங்கின. அச்சமயம் தொண்டைமான் ஆறு உள்ள இடத்தில் ஒரு சிறிய ஓடைதான் இருந்தது. கப்பல்கள் வந்து நிற்பதற்கும், படைகள் இறங்குவதற்கும் சௌகரியமாவதற்கு அந்த ஓடையை வெட்டி ஆழமாகவும் பெரிதாகவும் ஆக்கினார்கள். பிறகு அந்த ஒடை தொண்டைமானாறு என்று பெயர் பெற்றது.

அன்புடன் 'அவன்' அந்தரங்கம்...

என் மனைவி வீட்டிலேயே இருப்பதில்லை. எப்போதும் வேலை வேலை என்று ஏதோ ஓர் அழுத்ததிலேயே இருக்கிறார். விடுமுறை நாட்களிலும் தோழிகளுடன் ஊர் சுற்றக் கிளம்பிவிடுகிறார். வீட்டிலிருக்கும் போதும் எப்போதும் புத்தகம், இசை என்று தனக்குள் மூழ்கிவிடுகிறார். என் மனைவியின் கவனத்தையும் அன்பையும் பெறுவது எப்படி?

உங்கள் டிஜிட்டல் ஆரோக்கியத்தைக் கவனிக்கிறீர்களா?

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தம் திறன்களை வளர்ப்பதும் முன்னேறுவதும் மிகச் சிலர் மட்டுமே. பலர் வேலை நேரத்திலும் சமூக வலைத்தளங்கள், மெசேஜிங் செயலிகள் எனப் பயன்படுத்தி நேரத்தை வீணடிக்கிறார்கள். இதனால் அலுவலகத்தில் படைப்புத்திறன் குறைகிறது. வீட்டில் உறவுச் சிக்கல்கள் ஏற்படுகிறது. டிஜிட்டல் ஆரோக்கியத்தை மேம்படுத்த செயலிகள், ஆன்ட்ராய்ட், ஐஓஎஸ் இன்பில்ட் வாய்ப்புகள் எனப் பல உள்ளன. தொழில்நுட்பத்தை முறையாகப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய மற்றொரு தொழில்நுட்பம்தான் கைகொடுக்கிறது. இது ஒரு நகைமுரண்.

<strong>காடு யாருக்குச் சொந்தம்?</strong>

கிராமப்புற ஏழை எளிய மக்கள் சூழலையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார்கள் என்ற உலகளாவிய பொது புத்தியையும் சிப்கோ இயக்கம் மாற்றியமைத்தது. வளங்கள் மற்றும் சூழலைப் பாதுகாப்பதற்கான மக்களின் இயக்கம் வெற்றி பெறும் என்பதற்கு சிப்கோ இயக்கம் உலகளாவிய முன்னுதாரணமாக விளங்கியது. சுற்றுச்சூழல் பிரச்னைகளைக் கையிலெடுத்துப் போராடுவது பணம் படைத்தவர்களின் பொழுதுபோக்காக இருந்த காலட்டத்தில், சூழலைப் பாதுகாப்பது ஏழைகளின் வாழ்வாதாரத்தை மீட்டுத் தரும் என்ற ஒரு புரிதலை சிப்கோ இயக்கம் ஏற்படுத்தியது. உலகளாவிய சூழல் லட்சியங்களில் சிப்கோவுக்கு இருந்த தாக்கம் அளப்பரியது.

மூடநம்பிக்கைகளும் மகப்பேறும்

‘கொடி சுற்றிப் பிறத்தல்’. தாய்க்கும் சேய்க்கும் தொடர்பைக் கொடுப்பது இந்தத் தொப்புள்கொடி. இந்தத் தொப்புள்கொடி வழியாகத்தான் கர்ப்பப்பையில் உள்ள குழந்தைக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்கிறது. தாயிடம் இருந்து நல்ல ரத்தத்தை வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும், வயிற்றில் இருக்கும் குழந்தையின் கெட்ட ரத்தத்தை தாயிடமும் சென்று சேர்க்கும் ஓர் உறவுப்பாலம்தான் தொப்புள்கொடி. பனிக்குட நீரில் ஒரு நாணல் தண்டு போல் இக்கொடி வளைந்து நெளிந்து மிதக்கும். குழந்தை பிறக்கும்போது குழந்தையின் தொப்புள்கொடி குழந்தையின் கழுத்தைச் சுற்றி இருந்தால் அது குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. கழுத்தை இறுக்கும்போது அது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. சுவாசக்குழாயை இறுக்குவதால் சுவாசம் தடைபடுகிறது. இதனால் குழந்தைக்குத்தான் பிரச்னை வருமே தவிர, தாய்மாமாவுக்கு வராது.

குங் ஃபூ பௌத்த பிக்குணிகள்

காத்மாண்டுவில் உள்ள துருக் கவா கில்வா மடத்தில் பௌத்த பிக்குணிகளுக்கு குங் ஃபூ தற்காப்புக் கலைகள் கற்பிக்கப்பட்டன. குங் ஃபூ , தற்காப்புக்காகவும் அவர்களது உள் மற்றும் வெளிப்புற வலிமையை வளர்ப்பதற்காகவும், தியானத்தில் கவனம் செலுத்தவும், வலுவாக இருக்கவும், மற்றவர்களுக்காகக் கடினமாக உழைக்கவும் உதவியது.