UNLEASH THE UNTOLD

Month: November 2022

பெண்ணுடலை நேசிக்க விடுவோம்!

நம் உடல்வாகு மரபியல்படி நம்ம பாட்டி, அம்மாவுக்கு எப்படி இருக்கோ அப்படித்தான் நமக்கும் இருக்கும். அதுக்கெல்லாம் கவலைப்படக் கூடாது. இது நம் உடல், இயற்கை படைத்திருக்கு. சிறப்பா வைச்சுக்கணும்ன்னு நெனக்கணும். ஒருபோதும் நம் உடலை நாம் வெறுக்காம லவ் பண்ணணும்.

அவள்... அவன்... அவர்கள்...

அஃதர் அவளருகில் சென்று சில வார்த்தைகள் பேசிடத் தவித்தான். அவளின் மகிழ்ந்த முகம் அவனை ஆர்ப்பரிக்கச் செய்தது. ஆயினும் தன்னைக் கண்டதும் அவள் மகிழ்ச்சி தடம் தெரியாமல் போய்விடுமோ என்ற பயம் கவ்வவே சில மணித்துளிகள் அவளின் அன்பு முகத்தைப் படம்பிடித்துவிட்டு, காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான். அவன் இதயம் முழுதும் கனமாக, ஏக்கமாக, இன்று சற்று மகிழ்ச்சியாக மதி மட்டுமே நிறைந்திருந்தாள்.

எப்போதும் பாசிட்டிவாக இருக்கலாமே?

மருத்துவத்துறையில் பிளாஸிபோஎஃபெக்ட் (Placebo effect) எனச் சொல்வார்கள். நோயாளி ஒருவர்,மருத்துவரிடம் தன்னுடைய நோய்க்காக மருந்து வாங்கச் செல்கிறார். அவர் மருத்துவரின் மீதும், மருத்துவத்தின் மீதும் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார். டாக்டர் வெறும் விட்டமின் மாத்திரைகளைத்தான் தருகிறார், ஆனாலும் நோய்குணமாகிவிடுகிறது. இதுவே பிளாஸிபோ எஃபெக்ட்.

வந்தியத்தேவனின் வழித்தடத்தில் மாதோட்டம்!

அன்றொரு நாள், மாதோட்டத்தின் பொற்காலத்தில் பதினோராம் நூற்றாண்டுக்கு முன்னதான இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் மட்டுமின்றி தென்னிந்திய கடல் வணிகர்கள் தங்கள் சரக்குகளை சீனாவுக்குக் கொண்டு செல்லும்போதும் இடைப்பட்டுத் தங்கிச் செல்லும் துறைமுகமாகத்தான் மாதோட்டம் விளங்கியது. மிகச் சிறந்த வர்த்தக நகரமாக உருவெடுத்தது. ஈழத்து உணவு வகைகள், முத்து பவளம், நவரத்தினங்கள், யானை, யானைத் தந்தம், மயில் தோகை, மிளகு, கறுவாய், ஏலம் போன்ற பொருள்கள் மாதோட்ட துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. கப்பல் கட்டும் தொழில் நடந்திருக்கிறது. பல நாடுகளிலிருந்தும் வர்த்தகர்கள் இங்கு வந்துகூடினர், உலகின் பல பாகங்களிலிருந்தும் பண்டங்கள் மாதோட்டத்தில் வந்து குவிந்தன. செல்வம் பெருகியது, மக்கள் வளமான வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்கிறார் கிரேக்க அறிஞர் கொஸ்மன் இண்டிக்கோ பிளஸ்தேஸ் தனது நூலில்.

சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு…!

சட்டென்று எல்லா வேதனைகளும் மறந்து முகம் மலர்ந்தான் சிபி.
ஆயிரம் கஷ்டங்கள் திருமண வாழ்க்கையில் இருந்தாலும் மாமனார், மாமியார் கொடுமைகளைத் தினசரி சகித்தாலும் குடிகாரியாக இருந்தாலும் ஆதி ஏகபதிவிரதை; தன் மீது உயிரையே வைத்திருக்கிறாள் என்பதை ஐஸ்க்ரீமின் சுவையில் உணர்ந்தான் சிபி. பசித்தது, சாப்பிட வேறு இல்லை அல்லவா?

உன்னுடையது அல்ல; என்னுடையது அல்ல ; எங்களுடையது!

திருமணத்திற்கு முன்பு, அல்லது இணைந்து வாழத் தீர்மானிப்பதற்கு முன்பு இருவரும் எவ்வளவு சம்பாதித்தார்கள், எப்படிச் செலவு செய்தார்கள் என்கின்ற ஆராய்ச்சி அவசியமில்லாதிருக்கலாம். ஆனால், ஒன்றாக இணைந்து வாழ்வதென்று கைகோத்த பின்பு, ஒருவரிடம் இன்னொருவர் வெளிப்படைத்தன்மையை எல்லா நிலையிலும் பேணுவதே நேர்மையான செயல்.

புலிக்குட்டி விற்பதற்கு அல்ல வாட்ஸ்அப் பிஸினஸ்!

உங்கள் தொழில் சம்பந்தமான பிஸினஸ் ப்ரபைலை உருவாக்க முடியும் என்பது முதல் வசதி. வாட்ஸ்அப் பிஸினஸ் ஆப்பை நிறுவிய பிறகு, வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளைத் தொட்டால் வரும் பிஸினஸ் டூல்ஸை அழுத்தினால் பிஸினஸ் ப்ரபைல் ஆப்ஷனைக் காண்பிக்கும். இதில் தொழில் பெயர், முகவரி, மேப், தொலைபேசி எண், வேலை நேரம் போன்ற அடிப்படை தகவல்களைப் பதிவு செய்துகொள்ளலாம். வாடிக்கையாளருக்குத் தேவைப்படும் எல்லா அடிப்படைத் தகவல்களும் எளிமையாகக் கிடைக்க இது ஒரு சிறந்த வழி.

கருப்பைவாய் புற்றுநோய் எனும் ஆபத்து...

கருப்பைவாய் பகுதியில் உள்ள செல்கள் இயல்பு நிலையை மீறி கட்டுப்பாடற்ற ஒழுங்கற்ற முறையில் பெருகுவதையே கருப்பைவாய் புற்றுநோய் என்கிறோம். ஆரம்ப நிலையில் இதைக் கண்டறிந்தால் முற்றிலும் குணம் அடைய முடியும். ஆரம்ப நிலையில் தவறவிட்டுவிட்டால் இந்நோய் நாளடைவில் முற்றி அதனைச் சுற்றியுள்ள மற்ற உறுப்புகளுக்கும் பரவும். இதனால் உறுப்புகள் செயலிழந்து இறப்பை ஏற்படுத்தும்.

கற்பதும் மறப்பதும் அவசியம்!

நாம் கற்றுக்கொண்ட விஷயங்கள் எதுவாக இருந்தாலும், அவை எப்போது நம்முடைய வளர்ச்சிக்குத் துணை நிற்கவில்லையோ நமது வாழ்வில் மகிழ்ச்சியைத் தரவில்லையோ அப்போதே அதை அழித்துவிடவும், புதிதாக்க் கற்றுக்கொள்ளவும் நம்மை திறந்த மனதுடன் வைத்துக்கொண்டு, என்றென்றும் வாழ்வைக் கொண்டாடலாம். வாங்க!

திருமணத்துக்குப் பிறகும் வேலை செய்வாயா சுரேஷ்?

“சாரி, எங்கள் கம்பெனியில் பல ஆண்களும் இப்படித்தான் திருமணமானதும் பொறுப்பின்றி வேலையை விட்டுவிடுகிறார்கள். We have least attrition rate with women… அதனால் இந்தப் பதவிக்கு நாங்கள் ஒரு பெண்ணைத்தான் தேர்வு செய்ய இருக்கிறோம். Very sorry!”