கருவறையும் அரசியலும்
2021இல் வெளியான இந்தியக் கருக்கலைப்பு சட்டத்தின் திருத்தத்தில் கருக்கலைப்பு செய்வதற்கான கால வரையறை 20 வாரங்களிலிருந்து 24 வாரங்களாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது. சில குறைபாடுகளை 20 வாரங்களுக்குள் கண்டறிய முடியாது என்பதால் இச்சட்டம் திருத்தப்பட்டிருக்கிறது. அது மட்டுமன்றி தாயின் உயிருக்கு ஆபத்திருக்கும் நிலையில் எப்போது வேண்டுமானாலும் கருக்கலைப்புச் செய்யலாம். இங்கு தாயா, சேயா என்று பார்த்தால் தாயின் நலத்திற்குதான் முதலுரிமை.