UNLEASH THE UNTOLD

Tag: Life

எப்போதும் பாசிட்டிவாக இருக்கலாமே?

மருத்துவத்துறையில் பிளாஸிபோஎஃபெக்ட் (Placebo effect) எனச் சொல்வார்கள். நோயாளி ஒருவர்,மருத்துவரிடம் தன்னுடைய நோய்க்காக மருந்து வாங்கச் செல்கிறார். அவர் மருத்துவரின் மீதும், மருத்துவத்தின் மீதும் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார். டாக்டர் வெறும் விட்டமின் மாத்திரைகளைத்தான் தருகிறார், ஆனாலும் நோய்குணமாகிவிடுகிறது. இதுவே பிளாஸிபோ எஃபெக்ட்.

கற்பதும் மறப்பதும் அவசியம்!

நாம் கற்றுக்கொண்ட விஷயங்கள் எதுவாக இருந்தாலும், அவை எப்போது நம்முடைய வளர்ச்சிக்குத் துணை நிற்கவில்லையோ நமது வாழ்வில் மகிழ்ச்சியைத் தரவில்லையோ அப்போதே அதை அழித்துவிடவும், புதிதாக்க் கற்றுக்கொள்ளவும் நம்மை திறந்த மனதுடன் வைத்துக்கொண்டு, என்றென்றும் வாழ்வைக் கொண்டாடலாம். வாங்க!

மாற்றங்களை வரவேற்போம்!

நாம் மாற வேண்டும் எனத் தோன்றுவது இல்லை. அடுத்தவரை மாற்ற வேண்டும், அடுத்தவர் மாற வேண்டும் என்றே தோன்றுகிறது.
மாற்றம் ஒன்றே மாறாதது எனச் சொல்லிக்கொள்வது எளிதாக இருக்கிறது. ஆனால், அதை நமக்குள் செயல்படுத்துவதுதான் கஷ்டமாக இருக்கிறது.

உங்களின் மழைக்காலம் உள்ளத்தைக் கொள்ளையடிக்கும்; எங்களின் மழைக்காலம் வாழ்க்கையைக் கொள்ளையடிக்கும்!

இன்றும் பொதுக் கழிவறைகளையும் தெரு ஓரங்களையும் பயன்படுத்தும் மக்கள் வடசென்னையில் உண்டு என்றால் நம் சமுதாய வளர்ச்சி எங்கே? இன்றும் இந்தியாவில் கழிவறைகள் இல்லாத வீடுகள் உண்டு என்றால், மங்கள்யான் செவ்வாய் கிரகத்தைச் சுற்றினால் என்ன? செவ்வாய் கிரகத்தைப் புகைப்படம் எடுத்து அனுப்பினால்தான் என்ன? முதலில் வாழும் கிரகத்தை, வாழ தகுதியான இடமாக மாற்றுவோம்.

‘வாழ்; வாழ விடு’

பொதுவாகக் கண்ணாடிப் பொருள்களை எடுக்கும்போது கீழே விட்டுவிடுவோமோ என்று பதற்றம் கொள்வோம். ஆனால், தினமும் மற்ற பொருள்களை எத்தனை முறை எடுக்கிறோம்; அப்படி எடுக்கும்போது எத்தனை முறை கீழே விட்டோம்? இப்படி யோசித்துப் பார்த்தால், கண்ணாடிப் பொருள்கள் மேல் நமக்கிருக்கும் பயம், போய்விடும்.

வாழ்க்கையின் பூரணத்துவம்!

மகிழ்ச்சிக்கான காரணங்கள் நிறைந்த வாழ்க்கையில் சில சவால்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஏனென்றால், நாம் எல்லாருமே, எல்லாருடைய வாழ்க்கையுமே perfectly imperfect. அதுவே வாழ்க்கையின் பூரணத்துவம். அதுதான் முழுமையானதும் கூட!

பாறையாக மாறிய தேவதையின் மனம்

அவர்களின் நட்பைத் தவறாகத் திரித்து அனைவரும் பேச, ஒரு நாள் அவன் எல்லை மீறினான். பார்பவர்களின் நெஞ்சம் பதைக்க, ஒரு கண்ணில் ரத்தமும் மறு கண்ணில் கண்ணீருமாக அலறிக்கொண்டே, தரைத்தளம் நோக்கி ஓடினாள். அவளை வழிமறித்து மீண்டும் அடித்தான். மயங்கிய அவளை மீட்டு மக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். உடல்நலம் தேறினாள். மீண்டும் பழைய வாழ்க்கை.

உங்களுக்காகவும் பேசுங்கள்!

மற்றவர்களுக்கான உதவிகளைச் செய்வதற்கு முன்னால், உங்களுக்கு நீங்கள் உதவி செய்யக் கற்றுக்கொள்ளுங்கள். அவரவர்களின் செயல்களுக்கான நியாயங்கள் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கும். அதைக் கருத்தில் கொள்வதற்கு முன்னால், உங்கள் நியாயங்களைக் கருத்தில் வையுங்கள்.

வடசென்னை காவியம்: பூக்காரர் குள்ளக்கா

அது என்ன பூ விற்கும் பெண்கள் குள்ளமாகத்தான் இருப்பார்களா? இல்லை, சற்றுக் குள்ளமாக உள்ள பெண்கள் பூக்காரர்களாக மாறிவிடுவார்களோ! அதுவும் நம் பூக்காரர் குள்ளக்கா என்ற அமுல்ராணி குள்ளத்திலும் குள்ளம்.

பெற்றோரைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளே குழந்தைகள்!

நம்மில் எத்தனை பேர், பெற்றோராக இருத்தல் என்பது கடினமான, அர்ப்பணிப்பு மிகுந்த, நீண்ட நாட்களுக்குத் தொடர்ந்து செய்யவேண்டிய ஒரு பொறுப்புமிக்க வேலை என்பதை உணர்ந்து அதற்கான தயாரிப்புகளோடு பெற்றோராக ஆனோம்?