வேண்டாத அறிவுரைகள்
‘குழந்தைக்கு ஆறு மாசம் இருக்கும்ல… குப்புற விழுந்துட்டாளா இல்லையா.. ஒரு வயசு முடிஞ்சிருச்சு இன்னும் எழுந்து நடக்கலையா… இரண்டு வயசு ஆகப்போகுது இன்னும் பேசலையா?’ ஒரு குழந்தை தன் வளர்ச்சியில் இந்த மாதத்தில் இதைச்…
‘குழந்தைக்கு ஆறு மாசம் இருக்கும்ல… குப்புற விழுந்துட்டாளா இல்லையா.. ஒரு வயசு முடிஞ்சிருச்சு இன்னும் எழுந்து நடக்கலையா… இரண்டு வயசு ஆகப்போகுது இன்னும் பேசலையா?’ ஒரு குழந்தை தன் வளர்ச்சியில் இந்த மாதத்தில் இதைச்…
வழக்கம்போல் காலையில் எழுந்தும் பால் கொடுத்துவிட்டு, இட்லி ஊற்ற சமையல் அறைக்குச் சென்றேன். சில நிமிடங்களிலேயே அறையில் இருந்து ஒரு சத்தம். “சீக்கிரம் இங்க வா.. பாப்பாவ பாரு” என்று கணவர் பதற்றமாக அழைத்தார்….
என்ன செய்து கொண்டிருப்பாள் இப்போது? கையில் எடுக்கும் பொருளை வாயில் வைக்கப் பழகி விட்டாள். யாராவது ஒருவர் அருகிலேயே இருக்க வேண்டும். கொஞ்சம் அசந்தாலும் கிடைக்கும் பொருளை வாயில் போட்டுவிடுவாள். காலையில் இருந்து மதியம்…
சூரிய உதயத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றேன். ஆனால், அப்படி வெகு நேரம் நிம்மதியாக இருக்க முடியவில்லை. இரண்டு பெரும் சிந்தனைகள். இன்று வேலையின் முதல் நாள்.. கடந்த சில மாதங்களாக வெறும் அம்மாவாக…
கல்யாண விருந்திற்குச் செல்லத் தயாரானேன். குழந்தை பிறந்து ஐந்தாவது மாதத்தில் திருமண விழாவில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. நேற்றைய வரவேற்பில் அத்தையும் மாமாவும் கலந்து கொண்டாயிற்று. நெருங்கிய சொந்தம் என்பதால் காலையில் திருமண விழாவில்…
“இப்போதான் தூங்குனேன்… இன்னொரு பத்து நிமிஷம் தூங்குறனே…” “பாப்பா அழறா பாரு.. எழுந்து பால் கொடு.” படுத்தே உடனே குழந்தை அழுதாலும் மீண்டும் எழுந்து அமர்ந்து தாய்ப்பால் கொடுத்துதான் ஆக வேண்டும். பிறந்த குழந்தைக்கு…
பெற்றோர் தங்களுக்குள் ஒரு சுய அலசல் செய்து கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் சர்வாதிகாரம் செய்யும் பெற்றோரா?, நடுநிலையுடன் நடந்து கொள்ளும் பெற்றோரா?, நட்புடன் பழகும் பெற்றோரா?, எதையும் கண்டுகொள்ளாத பொறுப்பற்ற பெற்றோரா? இதில் நாம் எந்த வகை என்று எந்தவித சமரசமும் இன்றி ஒப்புக் கொள்ள வேண்டும்.
எங்களது (அ) நாங்கள் பரிந்துரைக்கும் பிரசவ மையங்களில் சேர்ந்தால் வலிக்காமல் பிள்ளை பெற்றுக்கொள்ளலாம். நாங்கள் நடத்தும் கர்ப்பகால வகுப்புகளில் கலந்து கொண்டால் வயிற்றிலேயே குழந்தையை ஐன்ஸ்டைன் ஆக்கிவிடலாம் என்றெல்லாம் அளந்துவிட்டு, அதன் மூலம் தொழிலைப் பெருக்கிப் பெரும் வருமானம் ஈட்டுகின்றனர்.
மரியாதை என்பது மனதிலும் ஒருவரை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள் என்பதிலும்தான் இருக்கிறது; அவரவர் அவர் பெயர்களுக்குப் பின்னாடி ‘அக்கா, அண்ணா’ என்று அழைப்பதில் இல்லை; அப்படி உங்களை யாராவது கூப்பிட வேண்டும் என்று நினைத்தால் அது உங்களின் விருப்பம்; அதேபோல அப்படிக் கூப்பிட விரும்பாதவர்களைக் கட்டாயப்படுத்தத் தேவையில்லை.
ஆணும் பெண்ணும் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் பெண்ணை மட்டும் குற்றவாளியாக நிற்க வைத்துவிடுகிறது இந்தச் சமுதாயம். எத்தனையோ தடவை சொல்லி இருப்பேன், எத்தனையோ குழந்தைகள் ஆதரவின்றி பெற்றோராக ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர் அவர்களைத் தத்து எடுத்துக்கொள் என்று. ஆனால், மனிதர்களின் மனம் தத்து எடுத்துக் கொள்ளும் கருத்தை ஏற்றுக்கொள்ளவதில்லை.குழந்தை பெற்றுக் கொண்டால் மட்டுமே பெண் என்பவள் பூரணப்படுகிறாள், குழந்தை பெற்றால் மட்டுமே அவள் தாய்மை என்னும் உணர்வு அடைவதாகக் கற்பனைகளைப் புகுத்திவிட்டது பெண்ணின் மனதில்.