UNLEASH THE UNTOLD

Tag: Kanali

எடை குறைப்பு அறுவை சிகிச்சை தேவையா?

இந்தியாவில் உடல் பருமன் பிரச்னை 2010லிருந்து 2040 வரை மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று ஒரு கணக்கெடுப்பில் மதிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தக் காலகட்டத்தில், அதிக எடை கொண்ட 20 முதல் 69 வயதுடைய மக்களில் இந்தப் பிரச்னை இரட்டிப்பாகும். 

வாழ்வது ஒருமுறை...

எந்தக் கல்வி அமைப்புகளும் தற்கொலை எண்ணம் ஏற்படாமல் வாழ்க்கையை எவ்வாறு கையாளுவதென்று சொல்லித் தருவதில்லை. சமூக அமைப்பும் மனச் சோர்வுக்கு ஆளானவர்களுக்கு எதிராகத் தான் இருக்கிறது.  பள்ளி, கல்லூரி மாணவர்கள் தற்கொலை தற்போது அதிகரித்துள்ளது. படிப்பு தரும் அழுத்தங்கள், மதிப்பெண் கிடைக்காமை, பதின்பருவ எதிர்பால் ஈர்ப்புகள், இணைய விளையாட்டுகளால் நிகழும் விபரீதங்கள், நட்பு முறிவு, மொழிப்பிரச்னை, சாதி வேறுபாடுகள், ஆசிரியர்கள் காட்டும் பாகுபாடு போன்ற காரணங்களால் மாணவர்கள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொள்கின்றனர்.

ஷவர்மாவுக்கு வந்த சோதனை!

எந்த வகை உணவாக இருந்தாலும் அவ்வப்போது தயாரித்து உண்ண வேண்டும். உணவகங்களும் கொஞ்சம் மனசாட்சிப்படி நடந்துகொண்டு உணவைத் தயாரிக்க வேண்டும். மூலப்பொருட்களை முறையாகப் பாதுகாத்து வைப்பதில் உணவகங்கள் கவனம் செலுத்த வேண்டும். அரசியல் கட்சிகள் இதற்கு அரசியல் சாயம் பூசாமல் இருக்க வேண்டும். மதங்களும் இந்த விஷயத்தைக் கவனமாகக் கையாள வேண்டும். அரசாங்கம் பொது ஊடகங்களில் வரும் உணவு அரசியலில் கவனம் செலுத்தாது, முறையாக ஆய்வுகள் மேற்கொண்டு சரியான நடவடிக்கைகள் எடுப்பதொன்றே இதற்கு தீர்வு.

இளமை திரும்புதே...

தாமரை இலைத் தண்ணீர் போல எதிலும் அதிகப் பற்றுடன் இல்லாமல் இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும். இன்பம், துன்பம், நல்லது, கெட்டது என்று எல்லாவற்றையும் சமமாக எடுத்துக்கொள்வது மனரீதியாக நல்லது. மனதில் படும் விஷயங்களை அப்படியே வெளியே அனுப்பிவிட வேண்டும். அதை மூளைக்கு எடுத்துச் சென்று அவதிப்படக் கூடாது. முகத்தில் புன்னகையைப் படர விட்டுக்கொண்டால் முதுமை அதைத் தாண்டி நம்மிடம் வரவே வராது.

36-24-36...

திரைப்படங்களில் நகைச்சுவை என்ற பெயரில் பருமனான உடல்வாகு கொண்ட பெண்கள் அசிங்கமாக உருவக்கேலி செய்யப்படுகிறார்கள். இதை யாரும் கேள்வி கேட்பதில்லை. மாறாகச் சிரித்து இன்னும் அவர்களை அவமானப்படுத்துகிறார்கள். ஆண்களைவிடப் பெண்களே அதிக அளவில் உடல்ரீதியான கேலிக்கு உள்ளாகிறார்கள். ஆண்களைக் கவரும் விதத்தில் உடலை வைத்துக்கொள்ள அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அதுவும் அவர்கள் குடும்பத்தாராலேயே நிகழ்கிறது.

டிஜிட்டல் இந்தியாவின் கழிப்பறைகள்

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான திறந்த வெளியில் மலம் கழிக்கும் மக்கள் (சுமார் 62 கோடி பேர்) இந்தியாவில் இருப்பதாக, குறிப்பாக இந்தியக் கிராமங்களில் இருப்பதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் நடத்திய கணக்கெடுப்பின் அடிப்படையில், நவம்பர் 2019இல் வெளியான தேசியப் புள்ளிவிவர அறிக்கை கிராமப்புறங்களில் 29.7 % குடும்பங்கள் கழிப்பறை வசதியின்றி இருப்பதாகக் கூறுகிறது.

பயணம் போகும் பாதையில்...

பயணம் என்பது பெண்களுக்கும் பொது. இதை யாரும் புரிந்துகொள்ள முன்வருவதில்லை. பெண்களின் பாதுகாப்பு முக்கியம் என்று முனகினாலும், அருகே இருக்கும் இடத்திற்குச் சிறு பயணத்தையாவது தனியே மேற்கொள்ளப் பழக்க வேண்டும். அப்போது தான் பயணிக்கும் பாதையின் குறுக்கே வரும் இன்னல்களும் அவற்றைத் தீர்க்கும் வழிமுறைகளும் அவர்களுக்கும் கைவரப்பெறும்.

முத்தம் போதாதே...

நெற்றியில் இடும் முத்தம் ஆறுதலை அளிக்கிறது. கண்களில் இடுவது பிரியத்தைத் தெளிக்கிறது. கையில் தரப்படும் முத்தம் மரியாதையைக் குறிக்கிறது. உதட்டில் தருவது அளவற்ற காதலைக் குறிக்கிறது.

மறுமணம்

இங்கே ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி. அந்தப் பெண் தன் கணவனை இழந்த பின்பு படித்து வேலைக்குச் சென்று குழந்தைகளைக் காப்பாற்றுகிறார். வயதான ஆண் துணை தேடுவது அனுதாபமாகப் பார்க்கப்படுகிறது.

சொல்லிக் கொடுத்த சொல்லும் கட்டிக் கொடுத்த சோறும்

வளரிளம் பருவக் குழந்தைகளுக்கு எப்போதுமே தங்களை ஒரு ‘சூப்பர் கேரக்டர்’ ஆகத் தங்கள் நண்பர்களிடம் வெளிப்படுத்திக் கொள்ளும் எண்ணம் இருக்கும்.