UNLEASH THE UNTOLD

Tag: couples

உனக்குத் துரோகம் பண்ணுவேனா?

சமையல் கட்டுக்குச் சென்று லைட்டைப் போட்டாள். வழக்கமாக ஓர் இண்டு இடுக்கு விடாமல் சமையற்கட்டைத் துடைத்து விட்டுத்தான் படுக்கப் போவான் சிபி. இன்று போட்டது போட்டபடி எல்லாம் கிடந்த நிலையில் விபரீதத்தை உணர முடிந்தது. ஏதேதோ சிந்தனையில் வெகு நேரம் உறக்கம் பிடிக்காமல் அப்படியே சோபாவில் கிடந்து ஆதி உறங்கத் தொடங்கிய போது மணி மூன்றிருக்கும்.

பிறந்தநாள் கொண்டாட்டம்!

வெடித்துக் கிளம்பிய சிரிப்புக்கிடையில் ட்ரே நிறைய தின்பண்டங்களும் தனது ஸ்பெஷல் சிக்கன் கறியும் முக்கியமாக முகம் பூத்த புன்முறுவலுமாக வந்தான் சிபி. முதுகுப்புறம் டிஷர்ட் குப்பென்று வியர்த்திருந்தது; மாற்றிக்கொள்ள மறந்துவிட்டான். ஆதி பார்த்தால் திட்டுவாளே என்ற எண்ணவோட்டத்தை ‘ஹாப்பி பர்த்டே’ கூக்குரல்கள் இடைமறித்தன.

எதிர்பார்ப்பற்ற உறவொன்றில்லை!

இன்னும் சொன்னால் உறவில் அழகானதே, ஒவ்வொருவரினதும் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை அடையாளம் காண்பதுதான். யதார்த்தமான ஆரோக்கிய உறவின் முதல் படியே இங்கிருந்துதான் தொடங்குகிறது. அடுத்த கட்டம் எது யதார்த்தமானது, எது இல்லை என்பதை அடையாளம் காண்பது.

ஒரு கூட்டுக் கிளியாக வாழ...

ல் நிதியைக் கையாளும் ஒரு முறைமையை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு மாதமும் குறைந்தது இரண்டு முறை ஆறஅமர்ந்து பேசி முடிவுகள் எடுக்கிறோம். குடும்பத்தில், நட்பில் எங்களை நம்பி இருப்போருக்குப் பணம் அனுப்புவது, நண்பர்களுக்கு அன்பளிப்பு வாங்குவது, பணத்தைக் கடன் கொடுப்பது அல்லது நிலுவைகள் இருப்பின் செலுத்துவது என்று எல்லாமே பேசுகிறோம். பண விடயத்தில் சந்தேகமோ கேள்வியோ வராத அல்லது கேள்வி கேட்பதற்குத் தயங்குகின்ற சூழ்நிலைகளை முற்றாக உடைத்து நாங்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற கூட்டுத் தீர்மானம், கூட்டு நிதிப் பயன்பாடு என்கின்ற கட்டமைப்பு எங்களை எங்களுக்கே பொறுப்புக்கூறும் நபர்களாகவும் ஆக்கியிருக்கிறது. எங்கள் இருவருக்கிடையிலான பிணைப்பை இறுக்கமாக்கியிருக்கிறது. நம்பிக்கையை வலுப்படுத்தியிருக்கிறது. கனவுகள் மீது பற்றுக் கூடியிருக்கிறது.

அறையில் யானை

ஒவ்வோர் இணையரினதும் நிதி இலக்குகளும் பார்வையும் நிச்சயமாக மாறுபடும். இருப்பினும், இணையர்கள் ஒருவருக்கொருவர் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருப்பதற்குக் கடமைப்பட்டவர்கள். நிதி நிலைமை அல்லது கடன் குவிப்பு என்று சங்கடமாக இருந்தாலும், துணையுடன் நேர்மையாக இருப்பது நிச்சயமாகச் சிறந்த கொள்கை என்பதில் சந்தேகமில்லை.

உன்னுடையது அல்ல; என்னுடையது அல்ல ; எங்களுடையது!

திருமணத்திற்கு முன்பு, அல்லது இணைந்து வாழத் தீர்மானிப்பதற்கு முன்பு இருவரும் எவ்வளவு சம்பாதித்தார்கள், எப்படிச் செலவு செய்தார்கள் என்கின்ற ஆராய்ச்சி அவசியமில்லாதிருக்கலாம். ஆனால், ஒன்றாக இணைந்து வாழ்வதென்று கைகோத்த பின்பு, ஒருவரிடம் இன்னொருவர் வெளிப்படைத்தன்மையை எல்லா நிலையிலும் பேணுவதே நேர்மையான செயல்.

செகண்ட் ஹனிமூன்

திருமணம் ஆனதும் முதல் ஒரு வருடத்திற்கு இணையரிடையே ஏற்படும் பிணைப்பே பின்னாட்களில் அவர்களிடையே ஏற்படும் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கிறது என்பது உளவியல் ரீதியான உண்மை.

செவன் இயர் இட்ச்...

தம்பதியினர் சலிப்புற்றிருந்தாலும் ஒருவருக்கு மட்டும் ஈர்ப்பு குறைந்திருப்பதாகத் தோன்றினாலும் ‘ஈகோ’வைக் கைவிட்டு இருவரும் மனம்விட்டுப் பேசுங்கள். அது தீர்க்காத பிரச்னைகளே இல்லை.