UNLEASH THE UNTOLD

Tag: Chitra Rangarajan

தீராத தொற்று நோய்

என் மகன் என் அருகில் வந்தான். செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்க வந்திருக்கிறான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

“அம்மா, எழுந்திரு. எனக்குப் பசியாக இருக்கு. பாஸ்தா செஞ்சு கொடு” என்று எனக்கு உத்தரவிட்டுவிட்டு ஒரு பந்தை எடுத்துக் கொண்டு நண்பர்களுடன் விளையாட ஓடிவிட்டான்.

நான் செய்வதறியாது நின்றேன்.

‘லைக்’ செய்துதான் பாருங்களேன்!

என்னைப் பரவசப்படுத்தும் வகையில் எனது நெருங்கிய தோழியிடமிருந்து, ‘சூப்பர் டா, நச்சுன்னு இருக்கு கட்டுரை, தொடர்ந்து எழுது’ என்கிற கமெண்டுடன் என் பதிவிற்கு ஒரு லைக் இருந்தது!

ப்ராண்டுகளின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா...

பெரும்பாலான நேரத்தில் நம்மை நாம் நம்புவதைவிட, நம் வாழ்க்கையின் எல்லா அற்புதங்களையும் நிகழ்த்த நாம் உடைகளிடம் சரணடைந்துவிடுகிறோம். வெளிப்படையாகச் சொன்னால் ப்ராண்டுகளிடம்!

சுயம்வரப் பெண்ணரசிகள்!

சஹாராவின் வறண்ட பகுதிக்கு மழை கொண்டு வரும் வளத்தைக் கொண்டாடும் நோக்கத்துடன் வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் ஜெர்வோல் திருவிழாவில், வோடாபே ஆண் நாடோடிகள் ஒரு துணையை ஈர்க்கும் முயற்சியில் திணறும் வெயிலில் மணிக்கணக்கில் ஆடுகிறார்கள். இதற்காகத் தங்களை அழகு படுத்திக்கொள்ள பல மணி நேரம் செலவிடுகிறார்கள்.

துருவக் கலைமான் மேய்ப்பர்கள்

சாமி பழங்குடியினர் ‘அரை நாடோடிகள்’, அதாவது அவர்கள் ஆண்டு முழுவதும் ஒரே இடத்தில் இருப்பதில்லை. சாமி மேய்ப்பர்கள் பருவக் காலங்களில் தங்கள் துருவக் கலைமான்களுடன் இடம்பெயர்ந்து, குளிர்காலத்திற்காக மலைகளுக்குச் சென்று, கோடையில் சமூகத்துடன் திரும்பி வருகிறார்கள். பயணத்தில், சாமி மேய்ப்பர்கள் லாவ்வோ எனப்படும் பாரம்பரியக் கூடாரத்தில் முகாமிடுவார்கள்.

முர்சி பெண்களுக்கு வாய் ரொம்பவே நீளம்!

முர்சி பழங்குடியினப் பெண்கள், கீழ் உதட்டில் வைக்கப்படும் களிமண் தட்டுகளுக்குப் பிரபலமானவர்கள். ஒரு பெண் 14 வயதாக இருக்கும்போது, அவளுடைய நான்கு கீழ் பற்கள் அகற்றப்படுகின்றன. மேலும் அவள் 15 வயதை அடையும் போது, அவள் கீழ் உதடு கீறப்படுகிறது. உதட்டில் வைக்கப்படும் தட்டு என்பது ஒரு பெண் பருவத்திற்குள் நுழைவதைக் குறிக்கிறது.

பிஷ்னாய் சுற்றுச்சூழல் போராளிகள்!

அமிர்தா தேவி மரத்தைக் காப்பாற்ற, அதைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். கட்டுக்கடங்காத மனிதர்கள் மரத்தை வெட்டுவதற்காக அவரது உடலைத் துண்டித்தனர். அவரது மூன்று மகள்கள், தங்கள் தாயின் துண்டிக்கப்பட்ட தலையைக் கண்டு முற்றிலும் அதிர்ச்சியடைந்தாலும், தைரியமாக அவரது அடிச்சுவடுகளைப் பின்தொடர்ந்து, மரங்களைக் கட்டிப்பிடித்து அதே முடிவைச் சந்தித்தனர்.

மரணத்துக்கும் அஞ்சாத டஹோமி பெண்கள்

டஹோமி ராஜ்ஜியம் அடிமை வர்த்தகத்தின் மூலம் அதன் செல்வத்தின் பெரும் பகுதியைக் குவித்தது. அதன் அண்டை மாகாணங்களுடன் அடிக்கடி போரில் ஈடுபட்டது. டஹோமி அமேசான்களால் சிறைபிடிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் அடிமைகளாக விற்கப்பட்டனர்.

தாய்வழி வந்த தங்கங்கள்

“பூமியில் இருந்துதான் நீராவிகள் பிறந்து மேகங்களாக எழுந்து மழையாக விழுகின்றன, அவை மீண்டும் பூமிக்கு வருகின்றன. எல்லா விலங்குகளின் குட்டிகளும் பசி அல்லது ஆபத்தில் இருக்கும்போது அழுது, தங்கள் தாய்களிடமே ஓடுகின்றன. எனவே, விதை எங்கிருந்து வந்தாலும், குழந்தைகள் அவளுக்கு உரிமையானவர்கள். குழந்தைகள் அவளுடைய பெயர், மரபு, குலத்தை மரபுரிமையாகப் பெறுவது அவளது உரிமை. அவளுக்கு நாம் அளிக்கும் பெருமை” என்பது காசி பழங்குடி மக்களின் உயரிய கோட்பாடு.

செயென் வீர மங்கைகள் !

எவ்வளவு துணிச்சலான வீரர்களிருந்தாலும் எவ்வளவு வலிமையான ஆயுதங்கள் இருந்தாலும் ஒரு தேசம் போரில் எப்போது வீழும் தெரியுமா? அந்தத் தேசத்துப் பெண்களின் இதயங்கள் நிலத்தின் மேல் விழும்போதுதான்!