UNLEASH THE UNTOLD

Tag: caste

சமத்துவத்துக்காகப் போராடும் பிரியா

கல்வியும்  ஓரளவு   அரசியலும்  இருக்கும்  நானும் மக்களுக்காக  இயங்கவில்லை  என்றால்  கல்வியையும் அரசியலையும்  நுகரமுடியாத  விளிம்புநிலை  மக்களை  எப்படி  எழுச்சிப் பெறச்  செய்வது?  ஆதலால்  இயங்குகிறேன்  என்கிறார்  பிரியா. 

அடையாளத்தில் பெருமை இருக்கிறதா, இல்லையா?

பொதுவில், சுயமாக உழைத்து தனக்கென ஓர் அடையாளத்தைச் சம்பாதிக்க திராணி இல்லாதவர்கள்தாம், பிறப்பு அடிப்படையில் சமூகம் சூட்டும் அடையாளங்கள் மூலம் பெருமையைத் தேடிக்கொள்கிறார்கள். இவ்வகை பெருமைகள், சமூகத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை அப்படியே தொடர வைக்கின்றன. மாறாக, ஒருவர் சொந்த முயற்சியினால் ஒப்பீட்டு அளவில் ஒரு சின்ன சாதனை செய்தால்கூட மற்றவரின் பெரிய சாதனைக்குச் சற்றும் சிறுமை ஆகாது. இங்கு நேர்மையாக உழைத்து, சுயமாக உருவாக்கப்படும் ஒவ்வோர் அடையாளமும் சமமே. எனவே, நம் சொந்த முயற்சியால் நம்மால் நமக்காக உருவாக்க முடிந்த அடையாளங்களைக் கொண்டு பெருமைப்பட்டுக் கொள்வோம்.

பெண்ணுடலும் சாதியும்

ஒரு பெண் தன்னை நம்பிவிட்டால், தன்னையே சார்ந்து இயங்கிவிட்டால், தன்னுடைய தேவைக்காக மட்டும் பயன்படுத்துகிறவர்களாக ஏன் இச்சமூகம் மாறிப்போனது? உண்மையில் பெண்ணிடம் சர்வமும் அடங்கியிருக்கிறது. அவளுக்குள் அறிவு, ஆளுமை, அனுபவம், அன்பு, உழைப்பு, துணிச்சல் என்ற அனைத்தையும் வைத்திருக்கிறாள். தனக்குள்ளே சுமந்து புறத்தில் அதை வெளிக்காட்டாமல் அடக்கமாக வைத்திருப்பதை இவர்கள் என்றுதான் உணர்வார்களோ? அவளிடமும் சொல்வதற்கும் கேட்பதற்கும் பல கதைகள் இருக்கிறதென்பதை எப்போதுதான் அறிவார்களோ?

சாதி - பெண் - சூழல்

உணவு, உடை, உறைவிடம், நீர் போன்ற அன்றாட, அடிப்படைத் தேவைகள் நிறைவேறுகின்றனவா, அவற்றின் தரம் என்ன என்பதையெல்லாம் தங்களுடைய சாதிதான் தீர்மானிக்கிறது என்பதால், கிராமங்களைச் சேர்ந்த தலித் பெண்கள் உச்சபட்ச ஒடுக்குமுறைக்கு ஆளாகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயக் கூலிகளாக இருப்பவர்கள், இவர்களது பணிச்சூழலிலும் சாதி மற்றும் பாலின வன்முறை மிக அதிகமாக இருக்கிறது. சாதி, பால், வர்க்கம் ஆகிய மூன்றுவிதமான படிநிலைகளிலும் இவர்கள் ஒடுக்குமுறையையும் சுரண்டலையும் எதிர்கொள்கிறார்கள்.

சாதி வேற்றுமைக்கு நிறம் காரணமா?

இந்தியாவில், உண்மையில் நிறம் அடிப்படையில் சாதியப் பிரிவினை தோன்றவில்லை. அனைத்து சாதிய படிநிலையிலும் மக்கள் அனைத்து நிறத் தோற்றத்தில் இருப்பதை எளிதில் காணமுடியும். இருப்பினும் இந்தக் கண்ணோட்டம் எப்படித் தோன்றியது?

இனவாதமும் சாதியமும்

காதலிப்பவரிடம் வெட்கப்பட்டுக் கூனிக்குறுகி முத்தம் கேட்பது போல் சாதி கேட்பதை மாற்றியதால் வெளிப்படையாகப் பிறரைச் சாதி ரீதியாகப் பாகுபாடு காட்டி ஒடுக்குவது போன்ற செயல்கள் தமிழ் மண்ணில் பெரும்பாலும் நடப்பதில்லை.

’யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால்...’

‘தன்னை உயர்ந்தவனாகவும் மற்றவர்களைத் தாழ்ந்தவனாகவும் நினைப்பவன் மனநோயாளி’ என்றார் அண்ணல் அம்பேத்கர். அப்படியெனில் இங்கு வாழும் மனிதர்கள் பலரும் மனநோயாளிகள் தாம்.