UNLEASH THE UNTOLD

Tag: கனலி

மோதி மிதித்து விடு...

உச்சி வெயில் மண்டையில் உறைத்தது. தலையிலிருந்து வியர்வை ஊற்று ஒன்று உற்பத்தியாகி பின்னங் கழுத்தில் சிறுசிறு கிளைகளாகப் பிரிந்து வழிந்தது. அவன் தலையில் சுற்றிக் கட்டியிருந்த சாயம் போன ஈரிழைத் துண்டை அவிழ்த்து உதறி…

தீப் பறக்கும் முலைகள்

சமையலறை ஜன்னலுக்கு வெளியே செம்பருத்திப்பூ ரத்தச் சிவப்பில் நிறையப் பூத்திருந்தது. இலைகளில் தேங்கியிருக்கும் ரத்தம். பக்கத்தில் சிவப்பு ரோஜாச்செடி மட்டும் இளப்பமா என்ன? அதுவும் தன் பங்குக்கு இரத்தக் கோப்பையாகப்  பூத்துத் தள்ளியிருந்தது. சொட்டாத,…

பதுமை

சலசலத்து ஓடிக் கொண்டிருந்த கோதாவரி நதியில் வண்ணக் கோலம் தீட்டிய பானையை அமிழ்த்தி நீர் முகர்ந்தாள் அகலிகை. அப்போது பளபளத்து ஓடிய நீர் அவளது அழகிய முகத்தைப் பிரதிபலித்தது. காதளவோடிய நீள்விழிகளில் பாலில் மிதக்கும்…

நவீன காந்தாரி

அவர்கள் வேக வேகமாக நடந்து அந்த ஆலமரத்தடிக்குச் சென்றார்கள். தலையைச் சீவாமல் பரப்பிக் கொண்டு நூற்றாண்டுகள் கடந்த அந்த ஆலமரம் ‘ஹோ’வென்று நின்றிருந்தது. அங்கிருந்த சிறிய கல்மேடையில், வலது காலை மடித்து வைத்து, வலது…

காமம் செப்பாது...

திடுக்கிட்டுக் கண்விழித்தாள் கிருபா. பள்ளத்தில் விழுந்த நினைவில் கைகளால் பிடிமானத்துக்குத் தடவிப் பார்த்தாள். உடம்பு உலுக்கிப் போட்டதில் இதயம் படபடவென்று துடித்தது காதுகளில் கேட்டது. கட்டிலில் இருந்து கீழே சரிந்திருந்தாள். தொப்பலாக வியர்வையில் நனைந்திருந்தாள்….

இருளாயி

வழியெங்கும் கற்கள் சிறியதும், பெரியதுமாகச் சிதறிக் கிடந்தன. சில இடங்களில் பிடிமானமின்றி வழுக்கியது. புகை வாசனை ஏதுமின்றி, சுத்தமாக, சில்லென்று நாசியை நிரடியது மலைக் காற்று. மரங்கள் அழுக்குப் படியாத பச்சையில் நின்றிருந்தன. வீசிய…

கங்கம்மா

செய்தி வந்தவுடன் ஒவ்வொருவராக வரத் தொடங்கியிருந்தார்கள். அந்தப் பெரிய வீட்டின் வாயில் கதவை விரியத் திறந்து வைத்து விட்டார்கள். சிமெண்ட் கற்கள் பாவிய தரை ‘ஜிலோ’வென்று விரிந்து கிடந்தது. முன்னறையில் கங்கம்மா ஒரு மூலையில்…

காயத்ரியும் கருநீலச் சட்டையும்

பளாரென்று விழுந்த அறையில் கண்கள் ஒருகணம் இருண்டன. மூடிய இமைகளுக்குள் நட்சத்திரங்கள் பறந்தன. காயத்ரி சுறுசுறுவென்று எரிந்த இடது கன்னத்தைப் பிடித்துக் கொண்டாள். வலியோடு அவமானமும் சேர்ந்து கொண்டதில், மனது உடைந்து கண்கள் வழியே…

உள்ளாற எப்போதும் உல்லாலா...

ஒரு வெற்றுப் பாட்டிலில் உள்ள காற்றை வெளியேற்ற வேண்டும் என்றால் அதனுள் முதலில் தண்ணீரை ஊற்ற வேண்டும். அப்போது காற்று தானாகவே வெளியேறிவிடும். அது போல நாம் எதிர்மறை எண்ணங்களை நமக்குள்ளிருந்து அகற்ற வேண்டும் என்று நினைத்தால், முதலில் நம் மனதை நேர்மறைச் சிந்தனைகளால் நிரப்ப வேண்டும். அப்போது தானாகவே நாம் நினைத்தது நடக்கும்.