UNLEASH THE UNTOLD

கொழுந்தன் கல்யாணம்...

புது ஆண் ஒருவனைத் தன் பழகிய அறைக்குள் எதிர்பார்த்திருந்தாள் லதா. தள்ளியிருத்தலே பெருமதிப்பு என்றும் முடிவெடுத்திருந்தாள். ஆனாலும் தன் உடல் அப்படிச் சொல்லுமா என்பதில் அவளுக்கும் சந்தேகம் இருந்தது. மணப்பந்தலில் அவன் வாசம் அவளைத் துளைத்தபடியே இருந்தது. உடல் ஒரு போக்காகவும் அவள் ஒரு போக்காகவும் போய்க்கொண்டிருந்தார்கள்.

நீங்க ரொம்ப பிஸியா?

எப்போதும் நேரமே இல்லை என்று புலம்புபவர்கள் எந்த வேலையையும் சரியாகச் செய்ய முடிவதில்லை. ஏனென்றால் மனம் செய்கிற வேலையில் இல்லாமல், அடுத்து என்ன என்பதிலேயே முனைப்போடு இருக்கும். மனம் எப்போதும் ஒரு பரபரப்பில், பதற்றத்தில் இருக்கும். எந்தத் துறையில் வெற்றி பெற்றவர்களாக இருந்தாலும், அவர்களுக்குள் உள்ள பொதுவான அம்சம் சிறப்பான நேர மேலாண்மை.

கணவன் வாங்கிய சொத்தில் மனைவிக்கும் சம உரிமை

தீர்ப்பின்படி, சொத்து கணவனின் பெயரில் அல்லது மனைவியின் பெயரில் வாங்கப்பட்டிருந்தாலும், அது கணவன், மனைவி இருவரும் சேர்ந்து உழைத்து வாங்கியது என்றே கருதப்படும். இல்லத்தரசி நேரம் பார்க்காமல் பல பணிகளைச் செய்கிறார். அவர்களுக்கு நிர்வாகம் செய்யும் பண்பு, சமைக்கும் திறன், பொருளாதாரம், கணித அறிவு எல்லாம் அவசியமாகிறது. வீட்டைப் பார்த்துக்கொள்ளுதல் என்பதில் அடிப்படை மருத்துவமும் அடங்கி இருக்கிறது. அதனால் மனைவியின் இந்தப் பங்கை ஒன்றுமில்லாதது எனக் கூற முடியாது. கணவன் சம்பாதித்த சொத்தில் சம உரிமை மனைவிக்கு உள்ளது. மனைவி இல்லாமல் அதை அவர் சம்பாதித்து இருக்க முடியாது. பெண்கள் குடும்பத்திற்காக அனைத்தையும் செய்யும்போது இறுதியில் அவர்களுக்கு எதுவும் இல்லை எனக் கூற முடியாது. நீதிமன்றங்களும் பெண்கள் தன் தியாகத்துக்குச் சரியான பரிசு பெறுகிறார்கள் என்பதை அங்கீகரிக்க வேண்டும்.

ப்ளீஸ், பார்வையாளர்களை அனுமதிக்காதீர்கள்...

எந்த அறுவை சிகிச்சை செய்துகொண்டாலும் வீட்டுக்குப் பார்க்க வருபவர்கள் மூலம் கிருமி தொற்றும் வாய்ப்பு அதிகம் என்பதால், யாரையும் பார்க்க அனுமதிக்காமல் இருப்பதே நல்லது. இதில் கறாராக இருப்பதில் தவறு ஒன்றும் இல்லை.

இயற்கையும் பெண் உடலியலும்

தன்னுடைய உணர்ச்சி வற்றி விடுவதற்குள், தன் வேலையை முடித்து விடவேண்டும் என்ற சுயநலத்துடன் அவளை ஆக்ரமித்து செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது ஏற்படும் மரண வலியில் எப்படி அவளுக்கு அந்த ஆணின் மீது காதலும் கூடலி ல் ஆர்வமும் ஏற்படும்..? 

ப்ராண்டுகளின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா...

பெரும்பாலான நேரத்தில் நம்மை நாம் நம்புவதைவிட, நம் வாழ்க்கையின் எல்லா அற்புதங்களையும் நிகழ்த்த நாம் உடைகளிடம் சரணடைந்துவிடுகிறோம். வெளிப்படையாகச் சொன்னால் ப்ராண்டுகளிடம்!

சமூக வலைத்தளமும் பெண்களும்

நாம் என்ன விஷயங்களைப் பகிர்ந்தாலும், நம்பிக்கையானவர்களிடம் சுயநினைவோடுதான் கூறுகிறோமா என்பதை நமக்குள்ளாக உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். சில நேரம் ஏதோ ஒரு நெகிழ்ச்சியான தருணத்தில், உணர்வு வயப்பட்ட நிலையில் நெருக்கமாக உரையாடி இருக்கலாம், அல்லது பொதுவில் பகிர முடியாத சொந்த விஷயங்களைப் பகிர்ந்து இருக்கலாம். பின்னர் அந்த நபருடன் பிணக்கு ஏற்பட்டு பிரிந்து இருக்கலாம், அல்லது அந்த நபரின் செயல் ஏதோ ஒன்றின் காரணமாக அவரைப் பிடிக்காமல்கூடப் போகலாம். அப்படிப்பட்ட நேரத்தில் நேர்மையாக அவர்களிடம் கூறி விலகிவிடுவது நல்லது. விலகிய பின் அவர்களைப் பற்றிப் பேசாமலும், அவர்களைப் பின்தொடராமலும் இருப்பது அதைவிட நல்லது.

அசோக் குமார் - அசோகாவதானம்

தியாகராஜ பாகவதரை எனக்கு அறிமுகப்படுத்தியவர் என் ஐயா (அப்பாவின் அப்பா). ஐயா எங்களை வெறுப்பேற்றும் அளவிற்கு தியாகராஜ பாகவதரின் தீவிர ரசிகர். பாகவதர் பாட்டு போடு என சொல்லிவிட்டாலே அன்று நாள் முழுவதும் முடிந்துவிடும். வேறு பாடல்களை மறந்துவிட வேண்டியதுதான். அப்போது மெலோடிஸ் ம்யூசிக் சவுண்ட் சென்டர், டேரா துபாய் என்கிற விளம்பரத்துடன் பாட்டு கேசட்டுகள் வரும். எங்கள் அப்பா பிரபலமான அனைத்து தியாகராஜ பாகவதர் பாடல்களையும் பதிந்து கொண்டு வந்திருந்தார்கள்.

பெண்ணுடலும் சாதியும்

ஒரு பெண் தன்னை நம்பிவிட்டால், தன்னையே சார்ந்து இயங்கிவிட்டால், தன்னுடைய தேவைக்காக மட்டும் பயன்படுத்துகிறவர்களாக ஏன் இச்சமூகம் மாறிப்போனது? உண்மையில் பெண்ணிடம் சர்வமும் அடங்கியிருக்கிறது. அவளுக்குள் அறிவு, ஆளுமை, அனுபவம், அன்பு, உழைப்பு, துணிச்சல் என்ற அனைத்தையும் வைத்திருக்கிறாள். தனக்குள்ளே சுமந்து புறத்தில் அதை வெளிக்காட்டாமல் அடக்கமாக வைத்திருப்பதை இவர்கள் என்றுதான் உணர்வார்களோ? அவளிடமும் சொல்வதற்கும் கேட்பதற்கும் பல கதைகள் இருக்கிறதென்பதை எப்போதுதான் அறிவார்களோ?

கவிதை என்னும் காலநதி

அந்த ரகசியம் பிறருக்குத் தெரிய பல வருடங்கள் ஆனது. ஒரு காலகட்டத்தில் அவள் கண்முன் கண்ட அனைத்தையும் கவிதையாகக் கண்டாள். காலையின் முதல் கதிர் தொடங்கி இரவின் நட்சத்திரக் கூட்டம் வரை இயற்கையின்அனைத்து அதிசயங்களும் அவள் வார்த்தைகளின் தூரிகையில் அழகு கவிதைகளாகப் பிறந்தன.