UNLEASH THE UNTOLD

சுய நேசத்தில் கவனம் கொள்வோம்!

இசைக்கு மூச்சடைத்தது. ஏதோ அவள் பிறந்ததே, இந்தக் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளவும், ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கவும்தான் என்பது போலப் பேசுகிறாரே என. மாமியார் நல்லவர்தான், இவள் மேல் அன்புள்ளவர்தான். அவர்கள் பழைய காலத்து ஆட்கள் இப்படித்தான் இருப்பார்கள், கணவனிடம் பேசினால் ஒரு தீர்வு கிடைக்கும் என்று மனதைத் தேற்றிக்கொண்டாள்.

புரியாத புதிர்கள் 

குழந்தை உருவானதிலிருந்து ஆறு வாரங்களுக்கு அந்தக் குழந்தை எந்தப் பாலினம் என்று கண்டுபிடிக்க முடியாது. காரணம் ஆண்களுக்கான Y குரோமோசோம் ஆண்களுக்குத் தேவையான ஹார்மோன்களைக் குழந்தை கருவாக உருவான ஆறு வாரங்களுக்குப் பிறகுதான் சுரக்க ஆரம்பிக்கும். அப்படி ஆண்களுக்கான ஹார்மோன்களும் உடல் வளர்ச்சியும் இருந்தால்தான் அந்தக் கரு ஆண் என்று வித்தியாசப்படுத்தப்படும். ஒரு வேளை அது போன்ற சுரத்தல்கள் இல்லை என்றால் அந்தக் குழந்தை பெண் என்று அடையாளப்படுத்தப்படும். அதாவது அந்தக் கருவிற்குப் பெண்களுக்கான XX குரோமோசோம்கள்தாம் இருக்கின்றன என்று அர்த்தம்‌

நடுநிசி வேளையில்...

அவன் ஆச்சியின் குரலும் அவர் வைத்திருந்த விளக்கின் வெளிச்சமும் ஆட்டுக் கொட்டகையில் அவர் இருப்பதைக் காட்டியது.

“சம்முசுந்தரம், இங்க வா ராசா. ஆத்தா கிட்ட வாடா. உன்னய பத்திரமா கூட்டிப் போறேன். ஏட்டி அழகம்ம இந்தா உனக்கு புடிச்ச உடமணி, வந்து சாப்பிடு” என்று குழந்தையைக் கொஞ்சும் குரலில் பேசிக் கொண்டிருந்ததும் , பதிலுக்கு அவை  ‘ம்மேமே’ என்று கத்துவதும் காதில் விழுந்த போது அவனுக்குக் கோபம் வந்தது.

“பகல்லதான் ஆடே உலகம்ன்னு கெடக்குறா சரி. நடுராத்திரியில இந்த மழைக்குள்ள அதுவும் கரண்டு இல்லாத நேரம் ஆட்ட கட்டிக்கிட்டு அழலன்னு  யாரு கேட்டா?”

மீண்டும் மீண்டும் ஏன்?

ஆக, மநு சொல்படி பார்த்தால், ஒரு பெண்ணை கொடுப்பதாக வாக்கு கொடுத்தாலே திருமணம் முடிந்ததாகக் கொள்ளலாம். மற்றபடி திருமணச் சடங்குகள், மங்கள நிகழ்வுகளாகவே மேற்கொள்ளப்படுகின்றன.

பரதேவதையை மணமுடித்த முற்போக்காளர் முத்துக்குட்டி

சாதியக் கட்டுப்பாடுகளும், பெண்களுக்கான கட்டுப்பாடுகளும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே, விவாகரத்தான பெண்ணொருத்தியை திருமணம் செய்து கொண்ட முற்போக்குவாதி முத்துக்குட்டி என்ற அய்யா வைகுண்டர்.

மூன்று விதமான குணாதிசயங்கள்

எப்போதும் அடிபணிந்து கொண்டிருப்பவர் தன் வாழ்வின் மீதே பெரும் கசப்பில் இருப்பார்கள். அது மெல்ல மெல்ல தனது வாழ்க்கையை ரசித்து மனம் போல் வாழ்பவரின் மேல் பொறாமையாக மாறும். பொறாமை கொண்ட மனதில் அமைதி ஏது? எப்போதும் உணர்வுகள் கொந்தளிப்பில்தான் இருக்கும். மிகச்சிறந்த உதாரணம் மாமியாரும், மருமகளும். இன்றைய மாமியார்கள் பலர் தங்கள் வாழ்வு முழுதும் தனக்கென ஏதும் யோசிக்காமல் கணவர், குழந்தைகள், வீட்டுப் பெரியவர்கள், ஒரு வேளை பொருளீட்ட பணிக்குப் போனால் அந்தச் சுமை என அத்தனை பொறுப்பையும் சுமந்தவர்கள். குடும்பச் சுமை மொத்தமும் தலையில் இருந்தாலும், தான் சுயமாகச் சம்பாதித்தாலும் பொருளாதார சுதந்திரம் இல்லாதவர்கள். தனக்கான சின்ன சின்ன தேவைக்குக்கூட கணவனையோ வீட்டுப் பெரியவர்களையோ கேட்க வேண்டிய நிலையில் இருந்தவர்கள்.

ஓர் ஒற்றைப் பெற்றோரின் மகள்

பொதுவாகக் குழந்தைகள் சுதந்திரமாகவும் தன்னுடைய செயலுக்குப் பொறுப்பு ஏற்கும் தன்மையுடனும் வளர வேண்டும்; வளர்க்கப்பட வேண்டும். குழந்தைகள் சிறிய வயதில் இருக்கும் போது பெற்றோர் ஏன் கண்டிக்கிறார்கள் என்று நினைப்பார்கள். அது சிறிது வளர வளரப் புரியும். நல்ல பெற்றோருக்குத் தெரியும் ‘எவ்வளவு அன்பு செலுத்த வேண்டும் எப்போது கண்டிக்க வேண்டும்’ என்று.

   பாராட்டக் கற்றுக் கொள்வோம்...

உண்மையாகப் பாராட்ட வேண்டும். பொய்யான புகழ்ச்சி வெகு விரைவில் எல்லாருக்கும் புரிந்துவிடும். நம்பகத்தன்மை மறைந்துவிடும். ஆனால் தயக்கமின்றிப் பாராட்டுதல் இரு சாராருக்கும் மனமகிழ்ச்சி தரும். வெறுமனே பாராட்டாமல் அவர்கள் செயலில் ஒரு சிறு பகுதியைக் குறிப்பிட்டு பாராட்டினால் இன்னும் நன்றாக இருக்கும். குழந்தைகளைப் பாராட்டும் போது அவர்கள் இன்னும் உற்சாகமாகி, நிறைய நல்லவற்றைக் கற்றுக் கொள்வார்கள். மட்டுமின்றி அவர்களும் பிறரைப் பாராட்டும் நல்ல பழக்கத்தைக் கற்றுக் கொள்கிறார்கள். இது அவர்களை வாழ்க்கையில் பன்மடங்கு உயர்த்தும். இணையரைப் பாராட்டும் போது வாழ்க்கை மிக இனிதாக மாறும். அக்கம் பக்கத்தினரைப் பாராட்டினால் இணக்கமும், பாதுகாப்பும் கிடைக்கும். உறவுகள், நட்புகளைப் பாராட்டும் போது அவை நல்லதாகத் தொடரும். தன்னிடம் பணிபுரிபவர்களைப் பாராட்டும் போது இருதரப்புமே மகிழ்ச்சி அடையும். வேலையும் சிறப்பாக நடக்கும்.

இதுதான் காதல் என்பதா!

அவன் வருத்தத்தைப் போக்கும் விதமாக அவள் இதழ்களில் சிறு புன்னகை எட்டிப் பார்த்தது. அவன் சற்று ஆசுவாசமடைந்தான்.
கடல் அரிப்பைத் தடுக்க போட்டிருந்த கற்பாறை மேல் அமர்ந்தாள். அருகிலிருந்த பாறை மேல் அவனும் அமர்ந்தான்.  
கடல் அவனைப் போல் ஓய்வின்றி பேசியது, எதையும் பேசாமல் அதை அமைதியாகக்  கேட்டு கொண்டு இருக்கும் கரையாக அவள்.

14. பலதரப்பட்ட குடும்ப நாவல்கள் 

இந்த எழுத்தாளர்கள் அனைவரும் இணையத்தில்தான் தங்கள் எழுத்துப் பயணத்தைத் தொடங்கினார்கள். கள ஆய்வுகள் செய்து எழுதப்படும் அபுனைவுகள் அல்லது இலக்கியத்தரமான நாவல்களுடன் குடும்ப நாவல்களால் போட்டி போட முடியாது. போட்டி போடவும் தேவையில்லை. வெகுஜன வாசிப்பு என்பது இதுதான். இதில் எதார்த்தம் குறைவாகவும் கற்பனை கூடுதலாகவே இருக்கும்.