ஜென்னி மார்க்சின் கடிதங்கள்
எனது இதயச்சிறைக்குள் உங்கள் காதல் அமர்ந்து விட்டால்,பின்பு என்னைப் பற்றிய நினைவுடனும், காதலுடனும் எனக்கு ஆறுதலாகவும் இருப்பீர்கள்.நீங்கள் எல்லா விசயங்களிலும் மிகவும் சரியாக இருப்பதாக நான் முழுவதும் நம்புகிறேன், ஆனால் எனது நிலையையும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்,நான் சோகமான நினைவுகளில் மூழ்குவதையும்,இவற்றையெல்லாம் பற்றி யதார்த்தமாக யோசித்தால் என்னிடம் அவ்வளவு கடினமாக நடந்துகொள்ளமாட்டீர்கள்.