உலகம் அனைவருக்குமானது
அமெரிக்காவில் இவ்வாறு பலவிதமான வசதிகளும் இருப்பதால் பெரும்பான்மையான மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்வினால் சிரமப் படுபவர்கள் தனியாக செயல்பட முடிகிறது.
அமெரிக்காவில் இவ்வாறு பலவிதமான வசதிகளும் இருப்பதால் பெரும்பான்மையான மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்வினால் சிரமப் படுபவர்கள் தனியாக செயல்பட முடிகிறது.
ஆண் மேலாண்மைச் சமூகம் பெண்ணை அடிமைப்படுத்த கண்டுபிடித்த ஆயுதங்களிலே அதி அற்புதமானது தாய்மை என்பது தான்.
தாஜ்மஹாலைப் பற்றி அறிய ஒரு விக்கிபீடியா பதிவு போதும். என் பயணக்கதை தேவையில்லை. ஆனால் என் கண்களின் வழியாக தாஜ்மஹாலின் அழகை ரசித்ததை என்றாவது ஒரு நாள் என் வாழ்வில் பதிவு செய்வேன் என்று சொல்லிக் கொண்டேன்.
வழக்கு தொடுத்து, கல்குவாரியில் வேலை செய்யும் பெண்களே அதை எடுத்து நடத்தும்படி ஏற்பாடு செய்தோம். நெடுவாசல் கிராமத்தில் சாராய ஒழிப்பு இயக்கம் நடத்தி வெற்றி கண்டோம்
போருக்குப் பின் இங்கிலாந்து திரும்பிய ஃப்ளாரன்ஸுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் விரும்பாவிட்டாலும் விக்டோரியா ராணிக்கு இணையான புகழ் பரவியிருந்தது.
சிறு வயதிலேயே ஆண் பெண் பேதமில்லாமல் பழகுபவர்களிடம் புரிதல்கள் மேம்படும். காதலிக்கும்போதோ, மணமான பின்னரோ உண்டாகும் பல வித ஏமாற்றங்களை தவிர்க்கலாம்.
“கனடாவில் இயற்கையால் விளையும் அசெளகரியத்தைப் பொறுத்துக்கொள்ளவும் ரசிக்கவும் நம்மால் முடியும் என்பதுதான் உண்மை.”
ஏதோ காரணங்களால் திருமணமே ஆகாத சிலர் நம்மோடு வாழ்கிறார்கள். அது அவர்களது தெரிவு. சுதந்திரம். அந்த அடிப்படை நாகரீகம் நம் சமூகத்திடமில்லை. அவர்களைப் பற்றி முதுகுக்குப் பின்னால் உலவும் கதைகளில் அவர்கள் பாலுறவுக்குத் தகுதியற்றவர்கள் என்பது, அது ”கையடிக்கும் கேஸ்” என்று கேலி செய்வதுமெல்லாம் மிக எளிய விசயங்களாக இருப்பதைக் காணுகிறோம். கேட்கிறோம். உலகிலேயே அவர்கள் மட்டும்தான் சுய இன்பம் காணுவதுபோலவும் மற்றவர்களெல்லாம் தங்கள் பாலுறுப்புகளைத் தீண்டா புனித கரங்களைக் கொண்டவர்களைப் போலவும் பேசிக் கொண்டிருப்பார்கள்.
முன் அறிவிப்பு இல்லாமல் எந்த சொந்தக்காரர்கள் வீட்டுக்காவது போனோம், அவ்வளவு தான். உலகத்தில் இருக்கும் சாபங்கள் அனைத்தும் விருந்தினருக்கே சமர்ப்பணம். அது யார் இந்த காலத்தில் வீட்டில் வந்து தங்கிப் போகும் விருந்தினர், என்று நீங்கள் கேட்கலாம். மாமியாரும், மாமனாரும் விருந்தினர் பட்டியலில் சேர்க்கப்பட்டு வெகு காலம் ஆயிற்று. மாமியார் மாமனாராகட்டும், மருமகளாகட்டும் இவர்களின் மனநிலையில் மாற்றம் உண்டாகி பலவருடங்கள் கடந்துவிட்டது. மாற்றத்துக்கு தகுந்தாற்போல தங்களை மாற்றிக்கொள்ள இயலாதவர்கள் அந்த வீட்டுக்கு அடுத்த தடவை செல்லும் தகுதியை இழந்தவர்களாகி விடுகின்றனர்.
“நாங்கள் புடவை கட்டிக் கொண்டுதானே இத்தனை வருடமாக செய்கிறோம், எங்களுக்கு ஒன்றும் கஷ்டமாக இல்லையே”, என்று மூத்த பெண்கள் சொல்லலாம். நீங்கள் புடவையை பழக்கப்படுத்திக் கொண்டு விட்டீர்கள், அதனால் உங்களுக்கு சிரமமாகத் தெரியவில்லை, தோழியரே ! எல்லாப் பெண்களுக்கும் இது பொருந்தாது. அடித்தட்டுப் பெண்கள், புடவையினால் அதிகம் சிரமப்படுகிறார்கள். வயல் வேலை, கட்டிட வேலை செய்யும் பெண்களெல்லாம், புடவை வசதியாக இல்லை என்பதால், மேலே ஆண்களின் ஷர்ட் ஒன்றை அணிந்து கொள்கிறார்கள், முந்தானையை சரி செய்யும் தொல்லையிலிருந்து தப்பிக்க. ஆனால், ‘மொபிலிட்டி’ எனப்படும் சரளமாக விரைந்து நடக்கும், ஓடும் தன்மையை, புடவையும், உள்பாவாடையும் தடை செய்கின்றன.