மரபியல் முதல் நிதர்சனம் வரை

இந்த உச்சக்கட்டம் அடையும் விஷயத்தைப் பற்றியும் பொய்யான உச்சக்கட்ட நடிப்பைப் பெண்கள் வெளிப்படுத்துவதைப் பற்றியும் நிறைய ஆராய்ச்சிகள் அறிவியல் வளர்ச்சியடைந்த காலகட்டத்திற்குப் பிறகு செய்யப்பட்டாலும் இது ஏதோ இன்று நேற்று நடக்கும் விஷயமல்ல. இப்போதோ, சிறிது காலத்திற்கு முன்போ பெண்கள் பின்பற்றத் தொடங்கிய ஒரு செயலுமல்ல

மரபியல் பரிணாம வளர்ச்சியின் ஆரம்ப காலகட்டங்களிலேயே, நம் மொழியில் சொன்னால், யாரும், யாருடனும் உறவு வைத்துக் கொள்ளலாம் என வாழ்ந்த காலத்திலேயே இருந்திருக்கிறது என்று நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். பரிணாம விதிகளின்படிப் பார்த்தால், பெண்கள், தாங்கள் தங்கள் கணவர்களுக்கு நான் உனக்கு உண்மையாகத்தான் இருக்கிறேன்என்பதைத்தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டிய அவசியம் அப்போதுமிருந்திருக்கிறது. இப்போதும் அந்தக் கட்டாயம் தொடர்ந்து கொண்டேதானிருக்கிறது

குறிப்பாக, குறைந்த மரபணுத் தரமும் செயல் திறனும் வாய்ந்த துணைவருக்கு அவர் மீதான ஒரு நம்பிக்கையை அவருக்கே கொடுத்துக் கொண்டேயிருக்க, ‘பொய்யான உச்சக்கட்ட வெளிப்பாடை’ ஒரு சங்கேத மொழியாகப் பெண்கள் கையாண்டிருக்கலாம்ஆரம்பகட்ட பரிணாம வளர்ச்சிக் காலகட்டத்தில், ஒரு ஆணுக்குப் பல பெண் துணைகள் இருந்தனர். அச்சமயத்தில், பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்கு ஆண்களைச் சார்ந்திருந்தனர். அதை பொறுப்புடன் நிவர்த்தி செய்யும் ஒரு ஆணைத் தேர்வு செய்த பிறகு, ஒரு பிடிப்புக்காகவும் உரிமைக்காகவும் தாங்கள் தேர்ந்தெடுத்த அந்த ஆணுடன் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினர். அதற்கு அவள் அதிக மரபணுவீரியமிக்க ஆணுடன் கூடிக் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டாள்.

இன்னும் இக்காலத்திலும் கூட, பணக்கார ஆண் ஒருவனைத் திருமணம் செய்து கொள்ளும் ஒரு பெண் உடனே அவனுடன் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினால், ‘எல்லாம் பணத்துக்காகத்தான். சொத்துல குழந்தைக்கு உரிமை இருக்குஅதுக்காகத்தானே இப்படி அவசரமா குழந்தை பெத்துக்கறா…” என்று அக்கம் பக்கம் உள்ளவர்கள் முணுமுணுப்பதற்குக் காரணம் இதுதான்

தொன்றுதொட்ட காலத்திலிருந்தே குழந்தை பெறுதலுக்கும் ஆண் துணையின் பணம் மற்றும் பாதுகாப்பை அவனது துணைவியும் அவனுக்குப் பிறந்த குழந்தைகளும் அடைவதற்கும் ஒரு நேரடித் தொடர்பு இருந்துகொண்டேதான் இருக்கிறதுஅந்தக் குழந்தை தனக்குப் பிறந்ததுதான் என்று அவன் நம்பினால்தான், அவன் அந்தக் குழந்தைக்காகப் பொருள் சேகரிப்பான். அதனால், அவனுடன் உறவு கொள்ளும் போது, அவன் தன்னை மகிழ்விக்கிறான் என்று காட்டிக்கொள்ளவும் இந்தக் கூடலின் மூலமாகத்தான் அந்த ஆணுக்குக் குழந்தை பிறக்கப்போகிறது என்பதை அவனுக்கு உணர்த்தும் வகையிலும் பெண்கள் தாங்கள் உச்சக்கட்டம் அடைவதை வெளிப்படுத்தினர்

ஒருவேளை உண்மையாகவே அப்பெண்கள் தங்கள் துணைவரால் உச்சக்கட்டம் அடையவில்லையென்றாலும், பொய்யான உச்சக்கட்டத்தை நடித்து வெளிப்படுத்தினர்பெண்கள் அதிக உச்சக்கட்டம் பெறும் கலவியின் மூலமாக மட்டுமே குழந்தை உண்டாகிறது என்ற கூற்று இப்போதும் பல இடங்களில் நம்பப்படுவதற்கான உளவியல் காரணம் இந்த மரபியல் ஆழ்பதிவினால்தான்

பெண்கள் உண்மையான உச்சக்கட்டத்தை அடையவில்லையென்றாலும் கூட அவர்களால் குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும். ஆனால், பெண்கள் உண்மையான உச்சக்கட்டம் அடையும்போது அவர்களது கருப்பைக்குள் சென்றடையும் விந்தணுக்களின் எண்ணிக்கையும், அவை நீந்திச் செல்லும் வேகமும் அதிகரிக்கின்றன.

தன்மீது நம்பிக்கை இல்லாத, குறைந்த மரபணுவீரியம் வாய்ந்த ஒரு ஆணுக்கு உண்மையிலேயே, அவனுக்குப் பிறக்கும் குழந்தையையே, அவனுக்குத்தான் பிறந்தது என்று நம்ப வைக்க ஒரு பெண்ணின் உச்சக்கட்ட வெளிப்பாடு தேவைப்படுகிறது. உண்மையிலேயே அது நிகழாவிட்டாலும்கூட, அவளது நடிப்பாவது அங்கு அவசியமாகிறது

பலரும் தலையைப் பிய்த்துக் கொள்ளும் வகையில் ஒரு உண்மையைப் போட்டு உடைக்கின்றன சில ஆராய்ச்சி முடிவுகள்அது என்ன தெரியுமா…? எந்த அளவுக்கு உடலுறவில் திருப்தியடையாமல் ஒரு பெண் இருக்கிறாளோ எந்த அளவுக்கு ஒரு ஆண் கலவியியல் திறமையற்றவனாக இருக்கிறானோ, அந்த அளவுக்கு அதிகமாக ஒரு பெண் அவனால் திருப்தி அடைந்தது போல் நடிக்கிறாள் என்பதுதான் அது.

இதை இன்னும் எளிதான ஒரு எடுத்துக்காட்டுடன் சொன்னால், உங்களுக்கு தெளிவாகப் புரியும்நன்றாக சம்பாதித்து பொருளாதார ரீதியாகத் தன் மனைவியை சிறப்பாகக் கவனித்து, அவளிடம் அன்பாகவும் அனுசரணையாகவும் பேசி, நடந்து, அவளுக்குப் பிடித்த விஷயங்களை செய்து, குழந்தைகளை நன்றாக பொறுப்புடன் வளர்த்துஇப்படி எல்லா விஷயங்களிலும் மிகச் சரியாக இருக்கும் ஒரு ஆணுக்கு அவன் மீதே அவனுக்கு நம்பிக்கை இருக்கும். சுய சந்தேகம் (Self doubt) இருக்காது

அதனால், அவனது மனைவி அவனிடம் தினமும் போய், ‘உங்களுக்குத் திறமை இருக்கிறது, நீங்கள் நன்றாக சம்பாதிக்கிறீர்கள். என்னையும் நம் குழந்தைகளையும் நன்றாகப் பார்த்துக் கொள்கிறீர்கள். நீங்கள் என்னிடம் அன்பாக நடந்து கொள்கிறீர்கள், நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன்’ என்றெல்லாம் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டிய அவசியமில்லை

அவனுக்கே இவையெல்லாம் தெரியும் என்பதால், இதெல்லாம் அங்கே ஒரு பெரிய பேசுபொருளாயிருக்காது. அவன் தன் மனதளவில் திருப்தியுடனும் நம்பிக்கையுடனும் இருப்பதால் மனைவியிடமும் குழந்தைகளிடமும் அமைதியாகவும் நிதானமுமாகத்தானிருப்பான் அவள் ஏதாவதொரு பிரச்னையைப் பற்றிப் பேசினால், அதைக் காது கொடுத்துக் கேட்டு அந்தப் பிரச்னையை எவ்வாறு சரி செய்யவேண்டும் என யோசிப்பான். அவளுடன் கலந்து பேசி அதைப் பற்றி விவாதிப்பான்அந்தப் பிரச்னையை சரி செய்ய ஒருவேளை பணம் தேவைப்பட்டால், அவனிடம்தான் போதுமான அளவு பணமிருக்கிறதேஅதனால், எந்தக் கவலையும் படாமல், எந்தப் பொருளைப் பழுது பார்த்து சரி செய்ய வேண்டுமோ அதைச் செய்து முடிப்பான்

இதே சூழலில், இன்னொரு விதமான நபரை எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்வோம். அவனால் குடும்பத் தேவைக்கேற்றவாறு சம்பாதிக்க முடியவில்லை, அல்லது அவனுக்கு அவனது வரவை மீறி செலவு செய்யும் மனோபாவமிருக்கிறது… மனைவி செய்யும் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொண்டு, அவளிடமும் குழந்தைகளிடமும் அன்பாக நடந்து கொள்ளும்படி அவன் வளர்க்கப்படவில்லை, சோம்பேறிஎன்று வைத்துக் கொள்வோம். நிச்சயமாய் அவன் மனைவியால் நிம்மதியாயிருக்க முடியாது. 

இந்நிலையில், திடீரென வீட்டிலுள்ள ஏதோ ஒரு பொருள் பழுதாகிவிட்டது என்று வைத்துக் கொள்வோம்… அவள் மனைவி அதை அவனிடம் முறையிட்டால் அவன் அவள் மீது கோபப்படுவான். அதைச் சரி செய்யத் தன்னிடம் பணம் இல்லாத தன் இயலாமையை அவன் ஒப்புக் கொள்ளவே மாட்டான். மாறாக, எப்படியெல்லாம் அந்தப் பிரச்னையை, தன் இயலாமையை, தனது பொறுப்பற்றத்தனத்தை திசை திருப்ப வேண்டுமோ அப்படியெல்லாம் திசை திருப்புவான்

அந்தப் பொருளை சரியாகக் கையாள, பாதுகாப்பாக வைத்துக் கொள்ளத் தன் மனைவிக்குத் தெரியவில்லை என்பதில் ஆரம்பித்து, பல வருடங்களுக்கு முன் நடந்த அவர்களது திருமண விருந்தில் உப்பு குறைச்சலாயிருந்தது என்ற பஞ்சாயத்து வரை பேசுவான்காரணமில்லாமல் தன் மனைவிகுழந்தைகள் , சொந்த பந்தம், பக்கத்து வீட்டுக்காரர், சாலையில் நடந்து செல்பவர் என அனைவர் மீதும் எரிந்து விழுவான். மனைவி தன்னை எதிர்த்துப் பேசிவிடாதவாறும் தன்னுடன் விவாதத்தில் ஈடுபட்டு அவள் பக்க நியாயங்களை சொல்லி விடாதவாறும் செய்ய தனது குரலை உயர்த்துவான். ஆண்கள் இப்படி தங்கள் மேல் தவறிருக்கும் சமயத்திலெல்லாம் வேண்டுமென்றே தங்களது குரலை உயர்த்திக் கத்துவென்பது அவர்கள் பின்பற்றும் ஒரு வித தந்திரம்தான்

இப்படி செய்யும் ஆண்கள் வாயில் விழாமலிருக்கவே பல பெண்கள் அவனிடம் குடும்ப பிரச்சினைகள் எதையுமே சொல்லாமல் அவற்றைத் தாங்களாகவே சமாளிக்க பிரயத்தனப்பட்டு பல சமயங்களில் பெரும் சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்கள். இவர்கள் தங்கள் கணவனின் இயலாமையை எடுத்துச் சொல்லி வேற்றுஆணிடம் உதவி கேட்கும்படியான சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.

அப்போது அந்தப் பிற ஆண்கள் அப்பெண்களைத் தவறாக, தங்கள் சுயநலத்திற்காகவும் உடல் இச்சையைத் தீர்ப்பதற்கும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அது மட்டுமின்றி, இன்னும் வேறு விதமான குற்றச் செயல்களில் ஈடுபடுத்தவும் தொடங்குகிறார்கள்… இன்னும் சில சமயங்களில் அந்தத் தொடர்பு, திருமணம் தாண்டிய உறவுகளில்கூட சென்று முடிகிறது.

ஒரு ஆண், எதற்கெடுத்தாலும் ஒரு பெண்ணிடம் காரணமில்லாமல் அல்லது ஏதாவது காரணங்களை அவனாகவே கற்பித்துக்கொண்டு கத்தி சண்டையிடுகிறான் என்றால், அவன் அவள் முன் தன்னை மிகவும் தாழ்ந்தவனாகவும் நம்பிக்கையற்றும் உணர்கிறான் என்று பொருள். அந்தக் கையாலாகாத்தனத்தை, தன் இயலாமையை மறைக்கத்தான் ‘கத்தும் யுக்தி’. 

சாதாரண சிறிய விஷயங்களிலேயே இப்படியென்றால், உடலுறவு விஷயத்தில் ஒரு பெண் இப்படிப்பட்ட குணாதிசயங்கள் நிறைந்த தனது கணவனின் குறைகளை அவனிடம் அவ்வளவு எளிதாக சுட்டிக்காட்டி விட முடியுமா என்ன…? 

இத்தகைய அவநம்பிக்கையுள்ள ஆண்கள் படுக்கையறையிலும் இதே தந்திரத்தைத்தான் தங்கள் மனைவியிடம் பின்பற்றுவார்களேயொழிய, எந்த விதத்திலும் தன் துணையைத் திருப்தியடைய வைக்க முயற்சி செய்யமாட்டார்கள். இதில் கொடுமை என்னவென்றால், இப்படி தன் இயலாமையை மறைக்க கத்தும் ஆண்களை சமாதானப்படுத்தி, அவன் வாழ்க்கையில் வெற்றி பெறவும் படுக்கையறையில் சிறப்பாக செயல்படவும் அவனை ஊக்குவிக்க (!?) வேண்டிய வேலையையும் அந்த மனைவியேதான் செய்ய வேண்டிருக்கிறது

இதே லாஜிக்தான் இந்தப் பொய்யான உச்சக்கட்ட நடிப்பு விஷயத்திலும்இப்போது உங்களுக்குத் தெளிவாகப் புரியும் என்று நினைக்கிறேன்

இதேபோல்தான், மரபணுவீரியம் குறைந்த தன் கணவனுடன் பொருளாதார பாதுகாப்புக்காகவோ, சமூகப் பிரச்னைகளிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ளவோ பெண் அவனைச் சார்ந்திருக்க வேண்டியதாயிருந்தது. சில சமயங்களில் இந்த ஒரு பிரச்னையைத் தவிர, மற்ற விஷயங்களிலெல்லாம் அவன் நல்லவனாயிருப்பதால் அவனைப் பிரிய மனமில்லாமலோ அல்லது குழந்தைகளின் நலன் கருதியோ அவள் அந்த உறவைத் தக்க வைத்துக் கொள்ளவேண்டிய கட்டாயத்திலிருந்தாள். அப்படிப்பட்ட சூழலில் அவள், தான் உச்சக் கட்டம் அடைந்து விட்டதைப் போலவும் அவனுக்கு எந்தக் குறையுமில்லை என்று நம்ப வைத்து அவனை நிம்மதியாக வாழவைப்பதற்காவும் பொய்யாக நடிக்கவேண்டியதாயிற்று!

மரபியல் வளர்ச்சியின் ஆரம்ப காலகட்டத்தில் ஒரு பெண், தான் உச்சக்கட்டத்தை அடைந்து விட்டதைப் போல் ஒரு ஆணிடம் வெளிப்படுத்திய போதெல்லாம், ‘தான் தான் அந்த தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்என்ற கிளர்ச்சியை எப்படி அவன் அடைந்தானோ, அதே போல்தான் இப்போதும் அவனது மனமும் மூளையும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது

அது, எந்த ஆணுடனும் எந்தப் பெண்ணும் உறவு வைத்துக் கொள்ளலாம் என்ற காலம்… இப்போது திருமணம் என்ற உறவின் மூலம் இவள் என் மனைவியாகிவிட்டாள், இந்த உறவிற்கு ஒரு பாதுகாப்பு வேலியுள்ளது என்ற நிதர்சன உண்மையை அவனது மனமும், மூளையும் மறந்து விடுகின்றன. ஒரு கட்டத்தில், தன் துணையுடன் உடலுறவு கொள்ளும் விஷயத்தில் தன் திறமை எந்த நிலையிலிருக்கிறது என்பதன் உண்மைத்தன்மையை உணர்ந்திருந்த ஆண்களுக்கு, தன் மனைவி உச்சக்கட்டம் அடைந்தவாறு காட்டிக் கொள்ளும் போதெல்லாம் மிகப் பெரிய சந்தேகம் தலை தூக்கியது

இவ உண்மையாத்தான் திருப்தியாகிறாளாஇல்ல, வேணும்னே நடிக்கறாளா…? பாதகத்திஒரு மண்ணும் நமக்கு புரிஞ்சு தொலைய மாட்டேங்குதே…” என்று மண்டையைப் பிய்த்துக் கொண்ட ஆண்களுக்கு இந்த சந்தேகமும் குழப்பமுமே பெரும் தலைவலியானது

உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம்நானும் யார்கிட்டேயும் போகலநீயும் யார்கிட்டேயும் போகாதஉனக்கு நான்எனக்கு நீரெண்டு பேருமே ஒருத்தருக்கொருத்தர் உண்மையா இருந்துப்போம்என்று வழிக்கு வந்து, ‘ஒருவனுக்கு ஒருத்திஎன்ற கோட்பாட்டைக் கொண்டு வந்து அதற்கு, ‘திருமணம்என்று பெயரும் வைத்தனர்.

திருமணம் என்ற பந்தமே, கோட்பாடே ஒரு ஆணின் பலவீனமான, சுய சந்தேகம் மிக்க மனதுக்கான பாதுகாப்பு வளையமாகத்தான் உருவானது. குறிப்பாக இந்த உச்சக்கட்டப் பிரச்சினையின் உண்மைத் தன்மையைத் தினமும் அலசி ஆராய்ந்து, புடம்போட்டுப் பார்ப்பதற்குத் திராணியற்ற ஆண்களின் மன நிம்மதிக்காகத்தான் கொண்டு வரப்பட்டதேயன்றி, பெண்களின் நலனையும் பாதுகாப்பையும் மனதில் வைத்துக் கொண்டெல்லாம் இந்த திருமணக் கலாச்சாரம்என்பது உருவாகவில்லை

ஆக, ஆண்களே, ‘உனக்கு வாழ்க்கை கொடுக்கறதுக்காகத்தான் , உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறேன்…’ என்ற கம்பி கட்டும் கதையெல்லாம் சொல்லவேண்டாம். இந்த இடத்தில், திருமணம் என்ற விஷயத்தில், ‘தாங்கள் வாழஅல்லது ‘தாங்களும் வாழ…’ என்ற மனநிலை கொஞ்சம் கூட இல்லாமல், ‘ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை கொடுப்பதற்காகத்தான்’ (!?) திருமணம் என்ற பொய்யானதொரு மனப்போக்கில் இன்னும் பல ஆண்கள் இருக்கிறார்கள் என்பதை நான் அப்பட்டமாகப் பார்த்துணர்ந்த, ஆச்சர்யமும் அதிர்ச்சியுமடைந்த ஒரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

சில வருடங்களுக்கு முன்னால், ஒரு மணப்பெண் தேவைவரி விளம்பரப் பகுதியில் ஒரு ஆண் வெளியிட்டிருந்த அந்த வரி விளம்பரம் என்னைப் புருவம் உயர்த்த வைத்தது

அந்த உலகப் புகழ் பெற்ற வரிகள் இதோ… 

‘அழகான, சிவப்பான, அரசு வேலை பார்க்கும் வசதியான குடும்பத்துப் பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கத் தயாராயுள்ளேன்விதவைகள்விவாகரத்தானவர்களும் அணுகலாம். வீட்டோடு மாப்பிள்ளையாயிருக்கவும் தயார்…” 

இந்த விளம்பரத்தைப் படித்து விட்டு குடும்பத்தோடு விழுந்து, விழுந்து சிரித்துக் கொண்டிருந்தோம். இந்த விளம்பரத்தைக் கொடுத்த அந்த ஆணின் சட்டையைப் பிடித்து இரண்டு, மூன்று கேள்விகள் கேட்க என் வாய் துறுதுறுத்தது. இது ஏதோ சிரிப்புத் துணுக்காகவோ அல்லது கதையாகவோ ஒரு ஆண் எழுதியிருந்தால் கூட, சரிஅவன் படைப்பு சுவாரஸ்யத்துக்காக இப்படி எழுதியிருக்கலாம். உண்மையில் அவன் அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லைஎன்று மனதில் நினைத்துக் கொண்டு, அந்த கற்பனை எழுத்துக்களின் நகைச்சுவைத்தன்மையை மட்டும் எடுத்துக் கொண்டு, ஒரு சிறிய புன்னகையுடன் கடந்து போயிருப்பேன்

ஆனால், காசு கொடுத்து ஒரு நபர் விளம்பரம் செய்கிறார் எனில் உண்மையிலேயே அவரது மனநிலையும் எதிர்பார்ப்பும் அப்படி உள்ளது என்றுதானே பொருள்? குறிப்பிட்ட இந்த ஒரு ஆணுக்கு ஒருவேளை, அவனை நேரில் தெரிந்தவர்கள் பெண்தரத் தயாராயில்லாமல் இருக்கலாம். அல்லது இவனைப் பரிந்துரைக்கக் கூட அவர்கள் பயப்படுவார்களாய் இருக்கும்.

ஒருவேளை, வாயால் வடை சுடும் சுற்றமும் நட்புமிருக்கும் ஒரு ஆண்மகனுக்கு என்ன நிகழ்ந்திருக்கும்? அவன் சார்பாக இந்த விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ள அத்தனை அம்சங்களுமுள்ள ஒரு பெண்ணை அணுகியிருப்பார்கள். அவளுக்கு வாழ்க்கை கொடுக்க (?) ஒரு சிறந்த ஆண் உள்ளதாக மூளைச்சலவை செய்து, அவளை நம்பவைத்து , ஒரு பலியாடு போல் அவள் கழுத்தில் மாலையிட்டு திருமணம் என்ற பெயரில் பலிகொடுத்திருப்பார்கள். பெண் எவ்வளவு வசதியாக, அழகாகதிறமைகளுடனும் பொறுப்போடுமிருந்தாலும்அவள் தனக்குக் கீழேயுள்ள ஒரு பொருள், என்ற மனநிலையிலுள்ள ஒருவனுடன் சேர்த்து வைத்திருப்பார்கள். இப்படி அவளை ஒரு பாழுங்கிணற்றில், ‘பாதுகாப்புஎன்ற பெயரில் தள்ளி விட ஒரு சமூகமே அல்லவா காத்துக் கொண்டிருக்கும்..? 

இந்த மனநிலையிலுள்ள ஆண்களுக்கேற்றவாறு, அவர்கள் அப்படி நடந்து கொள்வதுதான் சரி, பெண்கள்தான் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து நடந்து கொள்ள வேண்டும் என்று மூளைச்சலவை செய்யப்பட்ட சிலருக்கு அது ஓர் எதார்த்த மனப்போக்காகக் கூடத் தோன்றலாம். அது அவனது நிதர்சன வெளிப்பாடு என்று கூட நினைக்கலாம்ஆனால், திருமணம் முடித்த பின் அந்த ஆணை சமாளிக்கும் போதுதான் அவனது அனைத்து குறைபாடுகளையும் அந்தப் பெண் உணரத் தொடங்குவாள், குறிப்பாக படுக்கையறையில்… 

அப்போது உணர்ந்து எந்தப் பயனுமில்லை. வாழ்க்கை மீண்டும் ஒரு பெரிய அதல பாதாளத்தை, சூன்யத்தைத்தான் அவள் கண்முன் காட்டும். திருமணம் என்பதன் இந்தப் பின்னணியை, இன்னும் பல ஆழ்ந்த விஷயங்களை ஒரு பெண் கற்றுக் கொள்ள, கற்றுக் கொள்ளத்தான், தவறான ஆண்களிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளத் தொடங்குவாள்அவர்களிடமிருந்து தள்ளி நின்று, சரியான நபர்களைத் தேர்ந்தெடுப்பாள்தன் துணைவரால் ஏற்படும் பிரச்னைகளை, குறிப்பாகக் கலவியல் சார்ந்த பிரச்னைகளை நூதனமாக, மன முதிர்ச்சியுடன் கையாள, ஆரோக்கியமான மனநிலையுடன் வாழ தன்னைத் தயார்படுத்திக் கொள்வாள். இதைத்தான் புத்திக் கூர்மைஎன்று சொல்வார்கள்

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதுஎன்பது போல, படித்து நிறைய பட்டங்கள் பெறுவதோ அல்லது பல கலைகளைத் தெரிந்து வைத்திருப்பதோ புத்திக் கூர்மை கிடையாது. அவையெல்லாம் தனித் திறமைகள்தான்(Skills). ஒரு விஷயத்தில் முழு கவனம் செலுத்தி, அதில் பயிற்சி எடுத்துக் கொள்ள 20,000 மணி நேரங்கள் செலவிட்டால் போதும், எந்த ஒரு புதிய கலையையும் கற்றுக் கொண்டு விடலாம். எல்லாக் கலைகளையும் தெரிந்து வைத்துக் கொண்டு, புத்திக் கூர்மை இல்லா விட்டால், ஒரு பெண்ணின் நிலைமை அதோகதிதான். ஆனால், எந்தத் தனித்திறமைகளும் இல்லாவிட்டாலும் கூட அவள் புத்திக் கூர்மையுடனும் விழிப்புணர்வுடனும் மனதைக் கையாளும் திறனுடனும் ஞானத்துடனுமிருந்தால் அவள் சுயமரியாதையுடனும் ஆரோக்கியமாகவும் வாழ்க்கையைக் கடந்து விடலாம்

சரி, மீண்டும் உச்சக்கட்ட விஷயத்திற்கு வருவோம். சில சமயங்களில், தாங்கள் இந்த உறவில் உண்மைத்தன்மையுடனும், ‘நான் உனக்கு மட்டும்தான்என்ற மனத்திண்மையுடனுமிருக்கிறேன் என்பதைத் தங்கள் கணவர்களிடம் பறைசாற்றிக் கொள்ளும் அன்பின் வெளிப்பாடாகக்கூட பெண்கள் உச்சக்கட்டம் அடைந்து விட்டதைப் போல் காட்டிக் கொள்கிறார்கள்

சில ஆராய்ச்சிகளில் நடந்த வேடிக்கையான உண்மை என்ன தெரியுமா…? என் மனைவி ஒருபோதும் பொய்யான உச்சக்கட்டம் அடைந்ததில்லை என்றுஆண்கள் சொல்ல, அவர்களின் மனைவியரோ 100% நான் பொய்யாக மட்டுமே நடித்திருக்கிறேன். ஒருமுறை கூட உண்மையான உச்சக்கட்டம் அடைந்ததே இல்லை என்று உச்சக்கட்ட உண்மைகளைப்பெண்கள் போட்டு உடைத்ததுதான். அதைக் கேட்டு அந்த கணவர்கள் வெலவெலத்து அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டார்களாம்பெண்கள் இப்படி எல்லா விஷயத்திலும் நடிக்கத் தொடங்கிவிட்டால்…?

இன்னும் பேசுவோம்…

படைப்பு:

செலின் ராய்

காட்சித்தகவலியல் (Visual communication) துறையில் இளங்கலையும்இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் (Mass communication & Journalism) உளவியல் (Psychology) இவையிரண்டிலும் முதுகலைப் பட்டமும் அழகியலில் (Advance Diploma in Beautician) அட்வான்ஸ்டு டிப்ளமோ பட்டமும் பெற்றவர்விரிவுரையாளருக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று (UGC – NET) பல கல்லூரிகளில் துறைத்தலைவராகப் பணியாற்றியவர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடுமுறையில் எழுதத் தொடங்கிதமிழில் பல முன்னணி இதழ்களில் எழுதியவர். புத்தகங்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் எழுதியுள்ளார். பிரபல பெண்கள் பத்திரிக்கைக்கு 21 வயதிலேயே ஆசிரியரான போது, ‘ The Youngest Editor of Tamilnadu’ என ‘The Hindu’ பத்திரிக்கை செய்தி வெளியிட்டது53 ஆடியோ மற்றும் வீடியோ சிடிக்களை பல தலைப்புகளிலும் வெளிட்டுள்ள இவர் எழுதுவதுடன் உறவுச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான பல பயிலரங்குகளை தமிழகமெங்கும் நடத்தி வருகிறார்இவருக்கு மனித உரிமைக் கழகம் மனித நேயத்துக்கான விருது வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.