சமூக, உளவியல் காரணங்கள் மற்றும் சர்ச்சைகள் 

1970ல் சூசன் லைடான்’ (Susan Lydon) என்னும் எழுத்தாளர் ரேம்பர்ட்ஸ்’ (Ramparts) என்ற பத்திரிக்கையில் எழுதிய உச்சக்கட்டத்தின் அரசியல் (The Politics of Orgasm) என்ற கட்டுரையின் மூலம் ‘பொய்யான உச்சக்கட்டம்’ வெளியுலகத்திற்கு பகிரங்கமாக வெளிச்சம் போட்டுக் காண்பிக்கப்பட்டது. அப்போதிருந்துதான் இது பரவலாக நடைமுறைப் பிரயோகத்துக்கு வந்து, பேசுபொருளானது எனலாம்

சூசன் லைடான்

அதில், ‘பெண்கள் படுக்கையில் கணவர்கள் தங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கின்றனர் என்று காட்டிக் கொள்கின்றனர். அதன் மூலம் அந்த ஆண்களை சந்தோஷப்படுத்துவதற்கும் அவர்களை தங்களின் மகிழ்ச்சிக்குக் காரணகர்த்தாவான வள்ளலாக உணர வைப்பதற்காகவும்தான் பெண்கள் இவ்வாறு நடித்துக் கொண்டிருக்கின்றனர். இது மிகப்பெரிய உடல் ரீதியான சுமையாகவும் இந்த தந்திரத்தை கண்டுபிடித்துவிடாத அளவுக்கு தத்ரூபமாக நடிக்கும்போது அது உளவியல் ரீதியான அழுத்தத்தை ஆண்களுக்கு விளைவிக்கக்கூடியதாகவும் இருக்கிறது,’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார்

சூசனின் இந்த படைப்பு ஒரு மிகப் பெரிய தாக்கத்தை ஊடகங்களில் ஏற்படுத்தி, நாளிதழ்களிலும், பத்திரிக்கைகளிலும், வானொலியிலும் ஓரு பரபரப்பான பேசும் பொருளானது. ‘உடலுறவு என்பது எங்களுக்கும் மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்றாக இருப்பதற்காகத்தான் இயற்கையால் படைக்கப்பட்டது. எங்களுக்கும் அந்த உரிமை வேண்டும்…’ எனப் பெண்கள் கொந்தளிக்கத் தொடங்கினர். அதிலும் குறிப்பாக பெண்ணியவாதிகள் இதைப் பற்றித் தீவிரமாக விவாதிக்கவும், போராடவும் ஆரம்பித்தனர்

இதைத் தொடர்ந்து மற்ற வெகுஜன ஊடகங்களான சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இந்த பொய்யான உக்சக்கட்டம்காட்சிப்படுத்தப் பட்டது. ‘ஹேரி சேலியை சந்தித்த போது… ‘(When Harry met Sally) என்ற அமெரிக்கத் திரைப்படத்தில், சேலியாக நடித்திருந்த மெக் ரெயான், பொய்யான உச்சக்கட்டத்தை ஒரு கூட்டமான உணவகத்தில் தத்ரூபமாக நடித்துக் காட்டியிருப்பார்இந்தக் காட்சியைப் பற்றி விரிவாக நிழலும்நிஜமும்…’ என்ற அத்தியாயத்தில் பேசுவோம்.

பொய்யான உச்சக்கட்டம் என்பது ஒருவர் உடலுறவின் போது, உண்மையாகவே உச்சக்கட்டத்தை அடையாமல், ஆனால் தான் உச்சக்கட்டம் அடைந்து விட்டதாக நடிப்பது. பெரும்பாலும் இந்தப் பொய்யான உச்சக்கட்டவெளிப்பாடுகளைக் காட்டுவது பெண்கள்தான். இதுவரை அனைத்து காலகட்டங்களிலும் நடத்தப்பட்ட எல்லா கருத்துக் கணிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகளிலும் பொய்யான உச்சக்கட்டத்தை வெளிப்படுத்துவதில் பெண்களின் விகிதம்தான் அதிகம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது

ஆண்களின் உச்கக்கட்டத்திற்கும் விந்து வெளியேறுவதற்கும் நேரடித் தொடர்புள்ளதால், பெண் அந்நிகழ்வைத் தன் கண்களால் பார்த்து விடுவதால், அவனால் நடிக்க முடியாதுநடிக்க வேண்டிய அவசியமும் பெரும்பாலும் அவனுக்கு ஏற்படுவதில்லை. ஒரு ஆண் இருட்டறையில் தன் துணையுடன் உறவு கொள்ளும்போது, அவளால் தெளிவாகப் பார்க்க முடியாத வெளிச்சத்தில், மிக மிக அரிதாக பொய்யான உச்சக்கட்ட நடிப்பில் ஈடுபடுவான்

அவனுக்கு விறைப்புத்தன்மையில் பிரச்சினை, மனைவிக்கு உடலுறவில் விருப்பம் இல்லாமலிருப்பதைப் போல் உணர்தல் அல்லது அந்த நேரத்தில் அவன் மனைவி, அவனது மனநிலையைக் கெடுக்கும்படி ஏதாவது பேசி வெறுப்பேற்றினால் ஆண் இந்த சூழலுக்குத் தள்ளப்படுவான். அந்த உறவை சரியாக நகர்த்திக் கொண்டு செல்ல முடியாதபடி அவன் உணர்வுகளில் சிக்கல் ஏற்பட்டாலோ, குழந்தை பெற்றுக்கொள்வதைத் தள்ளிப்போட விரும்புபவராயிருந்தால் எங்கே குழந்தை வந்து விடுமோ என்ற பயத்திலோ, அல்லது ஆணுறை அணிய மறந்து விட்டாலோ இது நேரும். ஏதாவது ஒரு காரணத்தினால் அந்த உறவை அன்று அத்துடன் முடித்துக் கொள்ளவோ அல்லது நிரந்தரமாகவே நிறுத்திக் கொள்ள வேண்டுமென்றோ அவன் மனதிற்குப் பட்டுவிட்டால் அவன் அவ்வாறு நடந்துகொள்ளக்கூடும்.

மனைவியுடன் கருத்து வேறுபாடுகள், அவளது வெளித்தோற்றம் அல்லது வாசைனை, உடை இப்படி ஏதாவது ஒன்று அவனுக்கு எப்போதுமோ அல்லது அன்று மட்டுமோ பிடிக்காமலிருத்தல், பலவந்தமாக அவன் மனைவி உறவிற்கழைத்தல், வேறு பெண்களுடன் உறவை முடித்துவிட்டு அவன் வந்திருக்கும் நிலை, இன்னொரு பெண்ணுடன் மனரீதியான அதீத பிணைப்பிலிருத்தல் அல்லது நிரந்தரமாக இந்தத் திருமணப்பந்தத்திலிருந்து பிரிந்து தன் மனைவியை விவாகரத்து செய்து விடும் திட்டத்திலிருத்தல் இப்படி பல கராணங்களுக்காக அவன் தான் உச்சக்கட்டம் அடைந்து விட்டதாகத் தன் துணையிடம் பொய் சொல்லி அந்த உறவை நிறுத்திக் கொள்வான்

அத்தகைய சமயங்களில் கூட, அவன், தான் உச்சக்கட்டம் அடைந்து விட்டதான ஒரு நொடி பொய்யில் அந்த நிகழ்வை நிறுத்திக் கொண்டு எழுந்து சென்று விடுவானேயன்றி, தொடர்ந்து பல நிமிடங்கள் நடிக்க வேண்டிய அவசியமிருக்காதுஆனால், பெண்களின் நிலைமை அப்படியில்லை. சில, பல நிமிடங்களுக்கு அவள் தொடர்ந்து நடித்தாக வேண்டிய நிர்பந்தத்திலிருக்கிறாள்.

தனக்கு அந்த உறவில் துளியும் விருப்பமில்லாவிட்டாலும், அவனது உடல் இயக்கத்தில் அவளுக்கு மகிழ்ச்சியூட்டக்கூடிய, கிளர்ச்சியூட்டக்கூடிய விஷயங்கள் எதுவுமே இல்லாவிட்டாலும் அவள் நடிக்கத்தான் வேண்டும். சில சமயம் அசௌகர்யம் மிகுந்ததாகவும் வலி நிறைந்ததாகவும் இருந்தாலும் கூட, குறைந்த பட்சம் கணவன் தன் தேவையைத் தீர்த்துக் கொள்ளும் வரைக்காவது அவள் அந்த பொய்யான உச்சகட்ட நடிப்பு வேலையைச் செய்ய வேண்டியதாகிறது

பெரும்பாலானோருக்கு இதில் ஒரு சந்தேகமும் குழப்பமும் எப்போதும் எழுவதுண்டு. உடல் உறவின் போது பெண்கள் எழுப்பும் முனங்கல்களுக்கும் (Moaning) அவர்களது பொய்யான உச்சக்கட்ட நடிப்புக்கும்வித்தியாசம் தெரியாமல் இரண்டையும் குழப்பிக் கொள்கிறார்கள்சாதாரண மக்கள் மட்டுமின்றி, சில ஆராய்ச்சியாளர்களுமே தங்கள் ஆராய்ச்சிகளின் முடிவில், இந்த ஆரம்ப நிலை சிணுங்கல்களுக்கும் பொய்யான உச்சக்கட்ட நடிப்புக்கும் உள்ள நுணுக்கமான, மெல்லிய வேறுபாட்டில் எதைத் தங்கள் ஆராய்ச்சியில் பங்கேற்றவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் என்ற புரிதல் இல்லாமல்தான் முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அந்த வேறுபாட்டை சரியாக வகைப்படுத்தி, அவர்களது பங்கேற்பாளர்களுக்கு அவர்கள் புரியவைக்கவில்லை என்பதைப் பல ஆய்வு முடிவுகளைக் கூர்மையாகப் படித்துப் பார்க்கும்போது நாம் உணரலாம்.

பொதுவாக உறவின் ஆரம்ப நிலையில் பெண்கள் வெளிப்படுத்தும் சிணுங்கல்கள் அல்லது முனங்கல்கள் அவர்களது தேவைகள் என்ன என்பதைத் தங்களது துணைவர்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் இருக்கும். தங்களுக்கு தங்கள் உடலின் எந்த பாகத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதைத் தன் துணைவர்களுக்கு உணர்த்தும் வகையில், அந்த முனங்கல்களுக்கேற்றவாறு தங்களது உடல் பாகங்களை நகர்த்தியோ அல்லது அவனது கைகளை அங்கே வைத்தோ தங்களது எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்துவார்கள். அவ்வாறு வெளிப்படுத்தினால்கூட தங்கள் துணைவர்கள் அவற்றைக் கொஞ்சம்கூட கண்டு கொள்ளாமல், தங்கள் விந்து வெளியேற்றத்தில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் பல பெண்கள் குறிப்பிடுகின்றனர்

இப்படி அவள் வெளிப்படுத்தியும் அவன் அவளது தேவைகளைப் புரிந்து கொள்ளாமல் அல்லது கண்டுகொள்ளாமல் தன் வேலையை முடிப்பதிலேயே கவனமாயிருப்பதால், சில சமயங்களில் பெண்ணுறுப்புப் பாதையின் சரியான இடத்தில் நுழையாமல், அவள் அசௌகரியமாய் உணரும் வகையிலும் வலி மிகுந்ததாகவும் அவனது ஊடுருவல்’ (Penetration) இருக்கிறது. அவள் வெறுத்துப் போய் எனக்கு உச்சக்கட்டம் வந்து விட்டது, தயவு செய்து சீக்கிரம் முடித்துக் கொண்டு நகர்ந்து தொலை…’ என ஒரு விரக்தியில் வேண்டாவெறுப்பில், தான் உச்சக்கட்டம் அடைந்துவிட்டதைப் போல் நடிக்கத் தொடங்குகிறாள்

ஒரு எதிர்பார்ப்பிலும், கணவனை சரியாக உறவு கொள்ளத் தூண்டும் வகையிலும், அவனை சிறப்பாக செயல்பட உற்சாகப்படுத்தும் விதத்திலும் அவள் முனங்கும்போதும், சிணுங்கும்போதும் அதில் ஒரு உண்மைத்தன்மை இருக்கும். ஆண் ஒரு பெண்ணிடம் உறவு கொள்ள ஆசைப்படுவதையும் தூண்டப்படுவதையும் நிர்ணயிக்கும் காரணிகளில் மிக முக்கியமானவை அவளுடைய முனங்கல், சிணுங்கல்களுடன் கூடிய கிளர்ச்சியூட்டக்கூடிய குரலும் (Husky voice) அவளுடைய முக பாவனைகளும்தான் (Expressions). அதற்கடுத்த இடம்தான் மார்பகங்களுக்கு எனப் பல ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.

சில பெண்களின் அத்தகைய உணர்ச்சியூட்டக்கூடிய, கிளர்ச்சியூட்டும் குரல்களை சாம்பிளாகஎடுத்துக்கொண்டு சில ஆண்களிடம் பரிசோதனை செய்தபோது, இத்தகையக் குரல்களால் தங்கள் உணர்வுகள் வெகுவாகத் தூண்டப்படுவதாகவும் இதற்கு மேல் தன்னால் இந்த ஒலிகளைக் கேட்க முடியாதென்று காதுகளைப் பொத்தி ஒலிப்பேழையை நிறைய ஆண்கள் நிறுத்திவிட்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் அந்தப் பெண்களின் முகங்கள் எதுவும் காட்டப்படாமல், வெறும் குரல்களை மட்டுமே ஒலிக்கச் செய்து , செய்யப்பட்ட ஆய்வு இது.

பாலியல் தொழிலாளர்களிடம் செல்லும் ஆண்கள்கூட இவ்வாறான முனங்கல் ஒலிகளைக் கேட்க விருப்புவதாகவும் அவ்வாறு செய்யுமாறும் அவர்களைத் தூண்டி முனங்க வைத்து அதன் மூலம் இன்பமடைகிறார்கள். அதேபோல், அவ்வொலிகளினூடே அவர்கள் காண விரும்பும் முக பாவனைகளையும் வெளிப்படுத்தச் சொல்கிறார்கள்எனவே, தன் துணையுடன் உறவு கொள்ளும்போது, ஒரு ஆணுக்கு இவையெல்லாம் பிடிக்கும்… இந்த சிணுங்கல்களும், முனங்கல்களும் அவனது உணர்வுகளை இன்னும் தூண்டிவிட்டு, அவனை மேலும் சிறப்பாகத் தங்களுடன் உறவு கொள்ளவைக்கும் என்பதை அறிந்துள்ள பெண்கள், அல்லது தன் கணவன் இவற்றை விரும்புவதைப் பார்த்து உணர்ந்த பெண்கள் அத்தகைய ஒலிகளை எழுப்பி, அந்த உணர்ச்சிகளுக்கேற்றவாறு முகபாவங்களை வெளிப்படுத்துகின்றனர்

சிலர் வேண்டுமென்று செய்யலாம்சில மென்மையான, அதீத கூச்ச உணர்வோ அல்லது மெல்லிய தோலோ (Sensitive skin) உடைய பெண்களுக்கு, லேசான தொடுகையே கூச்சத்தையும் கிளர்ச்சியையும் ஏற்படுத்தும். அவர்கள் இயல்பாகவே அப்படிக் குரலெழுப்பி, தன்னிச்சையாகவே கிளர்ச்சியான முகபாவனைகளை வெளிப்படுத்தலாம்

எனவே, இதையும் பொய்யான உச்சக்கட்ட நடிப்பையும்போட்டுக் குழுப்பிக் கொள்ளாதீர்கள். இயல்பான முனங்கல்கள், சிணூங்கல்களில் பொய்த்தன்மை இருக்காது. மனதளவில் எந்த விதத் திட்டமிடுதலோ அல்லது நிர்பந்தமோ , மன அழுத்தமோவெல்லாம் இருக்காதுசொல்லப்போனால், தன் துணை என்ன நினைப்பார் என்ற எண்ணமோ , சிந்தனையோகூட பெரும்பாலும் அவர்களுக்கு இருக்காது.

தன்னை மறந்து, லயித்த நிலையில் அல்லது ஏதோ ஒரு எதிர்பார்ப்பில், ஆர்வத்தில் பெண்கள் மூழ்கியிருக்கும் நேரமது

ஆனால், இந்தப் பொய்யான உச்சக்கட்ட நடிப்பில்மேற்சொன்னவை எதுவுமிருக்காது. அதில் ஒரு விதப் பொய்த் தன்மையிருக்கும், மன அழுத்தமிருக்கும். தன் துணைவர் மனதில் இப்போது என்ன ஓடும் என்ற கேள்வி இருக்கும். இதற்கு மேல் இவனிடமிருந்து நமக்கு சுகம் ஒன்றும் தேறாது என்ற விரக்தி இருக்கும். அலுப்பும் சலிப்புமிருக்கும். சுய கழிவிரக்கும் பொதிந்திருக்கும். இப்படியெல்லாம் நடித்துத் தொலைய வேண்டியிருக்கிறதே என்ற இயலாமையிருக்கும். தான் பயன்படுத்திக்கொள்ளப்படுகிறோம் என்ற உண்மை உறைப்பதால் வெடித்துச் சிதறும் கோபமிருக்கும். தன் தேவைகளை அவன் புரிந்து கொண்டு செயல்படவில்லையே என்ற ஆத்திரமிருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக அவனை விரைவாக அவன் வேலையை முடித்து விட்டுக் கிளம்ப வைக்கும் அவசரமிருக்கும்… 

உண்மையான உச்சக்கட்டம் அடையும்போதும், பொய்யான உச்சக்கட்ட நடிப்பில் ஈடுபடும்போதும் ஆண், பெண் இருவரின் மூளைகளும் எப்படி செயல்படுகின்றன, எந்தவிதமான ரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதைப் பற்றிய ஆராய்ச்சிகளில் நான் மேலே குறிப்பிட்டுள்ள அத்தனை விதமான உளவியல் உண்மைகளும் நிஜம்தான் என்று கண்டறியப்பட்டுள்ளன. பொய்யான உச்சக்கட்ட நடிப்பில் ஒரு பெண் ஈடுபடும்போது மேற்சொன்னவைகள் அத்தனையும் நிகழ்கின்றன. அவளது மூளையில் அதற்கேற்றவாறான மாற்றங்களும் நிகழ்கின்றன

2005 ஆம் ஆண்டு, க்ரோனிங்கென் பல்கலைக்கழகத்தில், ஜெர்ட் ஹோல்ஸ்டீஜ் அற்றும் ஜேனிகோ ஜியோர்ஜியாடிஸ் இருவரும் 12 தம்பதிகளை அதாவது இருபத்து நான்கு பேரை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு, வெவ்வேறு தருணங்களில் MRI ஸ்கேனர் வைத்து ஆராய்ந்தனர். கீழ்க்கண்ட நான்கு நிலைகளில் அந்தப் பெண்களின் மூளைகள் ஸ்கேன் செய்யப்பட்டன

1. சாதாரணமாயிருக்கும்போது 

2. பொய்யான உச்சக்கட்ட நடிப்பில் ஈடுபடும்போது 

3. அவர்களது துணைவர்களின் விரல்களால் க்ளிட்டரஸ் தீண்டப்படும்போது 

4. க்ளிட்டரஸ் தூண்டுதலால் உச்சக்கட்டம் அடையும் போது 

இந்தஆராய்ச்சியில் பெண்கள் உச்சக்கட்டம் அடைந்து விட்டதாகப் பொய்யாக நடிக்கும்போது, நமது சுய உணர்வு நிலையைக் கட்டுப்படுத்தும் மூளையின் மையப்பகுதி அவர்களுக்கு செயல்பாட்டிலேயே இருந்ததாகக் கண்டறியப்பட்டது. ஆனால் உண்மையான உச்சக்கட்டத்தை அவர்கள் அடையும்போது அந்தக் கட்டுப்பாட்டு மையங்களில் எவ்வித செயல்பாடுகளுமற்ற நிலை ஏற்பட்டதாகவும் கண்டறிந்தனர்

உடலுறவின்போது, உச்சக்கட்டத்தை அடையமுடியாத நிலை அனார்கஸ்மியா (Anorgasmia) அழைக்கப்படுகிறது. பயம், பதட்டம்,கவலை, மன அழுத்தம்குற்றவுணர்ச்சி போன்ற உளவியல் காரணங்களும் வலி, வசதியில்லாத அல்லது மனதிற்குப் பிடிக்காத படுக்கையறை மற்றும் சுற்றுப்புறச் சூழல், ஆல்கஹால், போதை மருந்து பயன்படுத்துவது போன்ற பிற காரணங்களும் உடலுறவில் உச்சம் ஏற்படாமல் போவதற்கு பலசமயங்களில் காரணமாகி விடுகின்றன

‘ என்னுடனான உன் அந்தரங்க செயல்பாடு எனக்குத் திருப்தியளிக்கவில்லைஎன்று ஒரு மனைவி சொல்லும்போது, அவனது ஆண் என்ற அகந்தை’ சுக்கு நூறாகத் தகர்ந்து போய்விடுவதால், அதைச் சொல்லி அவனது மனதை நோகடிக்க விரும்பாத மனைவிகள், இவ்வாறு தாங்கள் உச்சக்கட்டம் அடைந்து விட்டதாகப் பொய்யாக நடிக்கிறார்கள்

ஒரு தமிழ் சிறுகதையில் ஆண்களின் ஈகோவைப் பெண்கள் உடைக்கும் ஒரு வலிமையான தருணம், உன்னால் என்னைத் திருப்தி அடைய வைக்க முடியவில்லைஎன்று ஒரு பெண் சொல்வதுதான் என்பது மிக அழகாக புனையப்பட்டிருக்கும்ஒரு ஊரின் பெரிய மனிதர், மிகப் பெரும் பணக்காரர் ஒருவர் ஏழைப்பெண்ணொருத்தியை வலுக்கட்டாயமாக உறவுக்கழைப்பார். அவள் எவ்வளவோ முயன்றும் தடுக்க முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுவிடும். தனது அதிகார பலத்தைக் காட்டி அந்தப் பெண்ணை நிர்பந்தித்துத் தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள்

ஒரு மரக்கட்டையைப்போல் அவனுடன் படுத்திருக்கும் அவள் தன் முகத்தில் எவ்வித உணர்ச்சிகளையும் காட்டமாட்டாள். திருப்தி அடைந்து விட்டதைப் போன்றோ அல்லது குறைந்தபட்சம் தன் உடலுக்குள் அவனது உறுப்பு நுழைவதைத் தான் உணர்ந்தது போன்றோ கூட குரல் எழுப்பாது தேமேஎன்றிருப்பாள்அவன் கலவி முடித்ததும், இவள் எழுந்து த்தூஎதையுமே நான் உணரலைஇதுக்குத்தானா இவ்வளவு ஆர்ப்பாட்டம்..?’ என்பதுபோல் ஒரு அலட்சிய முக பாவனையைக் காட்டி விட்டு அவனைக் கடந்து செல்வாள். அந்தப் பணக்கார, அதிகாரம் படைத்த கிழவனுக்கு அது செருப்பால் அடித்ததைப் போலிருக்கும்இதை விட அவளால், அவனுக்கு வேறு என்ன தண்டனை கொடுத்து விட முடியும், எப்படி அவமதித்து விட முடியும்..? என்று கதை முடியும்

ஆக, ஒரு ஆணை, அவன் ஆண்என உணரச் செய்வதே ஒரு பெண்ணின் கையில்தானிருக்கிறது. அவளது செய்கைகளிலும் வெளிப்பாட்டிலும் தானிருக்கிறது. கிபி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அர்ஸ் அமெடோரியா (Ars Amatoria) என்ற புத்தகத்தில் ரோமன் கவிஞர் ஓவிட்’ (Ovid) பெண்களின் பொய்யான உச்சக்கட்ட நடிப்பைப் பற்றி , அது எவ்வாறு இருக்க வேண்டுமென கீழ்க்கண்டவாறு சொல்லியிருக்கிறார்.

ஆக, பெண்களே, உங்கள் எலும்பு மஜ்ஜைகள் வரை இன்பத்தை உணருங்கள். அவ்வாறு நிகழ்ந்ததெனில், அதை மறைக்காமல் உங்கள் துணைவரிடம் சொல்லுங்கள். இனிமையான, குறும்பான விஷயங்களை அப்போது பேசுங்கள், ஒருவேளை இயற்கை இந்த உண்மையான உச்சக்கட்ட உணர்வை உங்களுக்குக் கொடுக்கவில்லையெனில், அவ்வாறு நீங்கள் உச்சம் அடைந்து விட்டதாகப் பொய் சொல்ல உங்கள் உதடுகளுக்குக் கற்றுக் கொடுங்கள்… ஆனால், அதிகப்படியாக நடித்துவிடாதீர்கள். உங்கள் உணர்வுகள் உண்மைதான் என்று நம்புமளவிற்கு உங்களது உடலசைவுகளும் கண்களும் ஒருங்கிணைந்து எங்களை ஏமாற்றட்டும். மூச்சுத் திணறும் மூச்சிரைக்கும் ஒலிகளுடன் அந்தப் பொய்யான மாயையை அழகாய் நிறைவு செய்யுங்கள்என்று பெண்களுக்குப் பாடம் நடத்தியிக்கிறார்! 

பெட்ரீஷியா வாட்சன் 2002 ம் ஆண்டு ஓவிடின் இந்தக் கூற்றைக் குறிப்பிட்டு, கொந்தளித்திருத்தார். ஓவிட் சொல்லியிருக்கும் இந்த வழிமுறைகளெல்லாம், அப்பட்டமாக பெண்கள் ஆணின் அகந்தைக்கு எந்த சேதமும் ஏற்பட்டு விடாதவாறு சந்தோஷப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே வலியுறுத்தப்பட்டுள்ளன என அவர் சொல்லியுள்ளார்.

பெண்களின் எந்தவித உடலுறவு உடல்மொழிகள் (Sexual poses) ஆண்களைக் கிளர்ச்சியடையச் செய்யும் என்று முதலில் பட்டியலிட்டிருந்த ஓவிட், பிறகு பெண்கள் தங்கள் துணைவரால் உச்சக்கட்டத்தை அடையவில்லை என்றாலும் அவ்வாறு அடைந்து விட்டதைப்போல் அந்த ஆணின் மன மகிழ்ச்சிக்காக நடியுங்கள் என்று அவர் சொல்லியிருப்பது ஆணாதிக்க சிந்தனையின் உச்சக்கட்டம்என்று இவர் பலமாகச் சாடியிருந்தார்

இவர் சொன்ன இதே கூற்றைத்தான் 1967ல் பெண்ணியவாதிகளும் தெரிவித்திருந்தனர். இந்தப் பொய்யான உச்சக்கட்ட நடிப்பால், பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதாகவும் அவர்கள் கொந்தளித்திருந்தனர்ஆனால், ஒவ்வொரு முறையும் இந்த உச்சக்கட்டப் பிரச்சினை உச்சக்கட்டத்திற்கு வரும்போதெல்லாம் ஆண், பெண் இரு பாலாருக்கும் அது ஒரு பெரும் மோதலை ஏற்படுத்தும் விஷயமாக, பேசு பொருளாகவே மாறிவிடத் தொடங்கியதுநம் நாட்டில் மட்டுமல்ல, மேலை நாடுகளிலுமே இந்த விஷயத்தில் ஆண்கள், தங்கள் அகந்தையை விட்டுக் கொடுக்க முடியாதவர்களாகவே இருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது

பொய்யாக உச்சக்கட்டத்தை அடைவதைப்போல நாங்கள் நடிக்கவேண்டியிருக்கிறது… தயவு செய்து எங்கள் உணர்வுகளுக்கும் மதிப்புக் கொடுத்து நடங்கள், இதனால் எங்கள் மனநிலைகூட பாதிப்பிற்குள்ளாகிறது; மன அழுத்தம் ஏற்படுகிறது என்று பெண்கள் கதறுகின்றனர். அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொண்டு, ‘சரிநாங்கள் இன்னும் உங்கள் உணர்வுகளின் மீது அக்கறையுள்ளவர்களாகவும் உங்கள் மேல் கரிசனையுள்ளவர்களாகவும் எங்களை மாற்றிக் கொள்கிறோம்…’ என்று தானே ஆண்கள் சொல்ல வேண்டும்…? அதுதானே நியாயம்…? அதை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்டவனையே குற்றவாளியாக்கும் வேலையை அவர்களும் செய்யத் தொடங்கினார்கள்.

நம் ஊரில் ஒரு பெண், ‘என்னை இவர்கள் பாலியல் ரீதியாக சீண்டினார்கள்அல்லது பாலியல் வன்புணர்வு செய்து விட்டார்கள் என்று சொல்லும் போது, தவறு செய்த ஆண்களைத் தட்டிக் கேட்கவும், அவர்களைத் தண்டிக்கவும் துப்பில்லாமல், ‘நீ ஏன் அப்படி ட்ரெஸ் போட்டுட்டுப் போனநீ ஏன் அத்தனை மணிக்கு வீட்டைவிட்டு வெளியே போன…?’ என பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விடுகிறார்கள் அல்லவா..? அதேபோல் மேலைநாட்டு ஆண்களும் இந்த விஷயத்தைப் பல வகைகளிலும் திசை திருப்பினார்கள்… 

படுக்கையறையில் கணவனிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்க வேண்டியதுதானேசொல்ல வேண்டியதுதானேநீங்கள் ஏன் பொய்யான உச்சக்கட்டத்தைக் காட்டி நடிக்கிறீர்கள் என்று சாதாரண ஒற்றைப் பெண்ணைப் பார்த்து யாரும் கேட்கவே முடியாதுஏனெனில் பெண்ணியவாதிகள் கும்பலாகக் கூடிக் கேட்கும்போதே, கூட்டமாக பதிலடி கொடுக்கின்றனர் ஆண்கள். வீட்டிற்குள்ளிருக்கும் மனைவி என்ற அந்த ஒற்றை மனுஷி கேள்வி கேட்டால், அவளுக்கு என்ன நடக்கும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். பின்தங்கிய நாடுகளிலெல்லாம் வாழும் பெண்களின் கதியைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்

எப்படியெல்லாம் ஆண்கள் இந்த விஷயத்தைத் திரித்தார்கள் தெரியுமா? ‘எங்கள் மேல் எந்தத் தவறுமில்லை‘, ‘பெண்கள் ஆண்களுக்குக் காட்டும் சைகைதான் அது…’, ‘ அவர்களுக்கு உண்மையிலேயே எங்கள் கூடல் நேர செயல்பாடுகளும் அவர்கள் அப்படி உணர்ச்சியை வெளிப்படுத்துவதும் பிடித்திருப்பதால்தான் அவ்வாறு செய்கிறார்கள்’, என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டினார்கள்இவற்றையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் நித்தியானந்தா சொல்லும் ஸ்டைலில், ’வெச்சாம் பாரு ஆப்பு எனக்கு…’ எனப் பெண்கள் கதறும் வகையில் ஒரு பெரிய அணுகுண்டையே தூக்கிப் போட்டார்கள் ஆண்கள்என்ன தெரியுமா அது..? 

தங்கள் துணைவரிடம் தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதைப்போல் காட்டிக் கொள்ள பொய்யான உச்சக்கட்ட நடிப்பை ஆடிவிட்டு, வெளியே வேறு ஒரு துணையுடன் உல்லாசமாக இருக்கிறார்கள். இதை மறைக்கத்தான் இவ்வாறு நடிக்கிறார்கள்…” என்று பொத்தாம்பொதுவாக சொன்னதுதான் அந்த அணுகுண்டு

உச்சக்கட்ட உண்மைகளும், ரகசியங்களும் தொடரும்

படைப்பு:

செலின் ராய்

காட்சித்தகவலியல் (Visual communication) துறையில் இளங்கலையும்இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் (Mass communication & Journalism) உளவியல் (Psychology) இவையிரண்டிலும் முதுகலைப் பட்டமும் அழகியலில் (Advance Diploma in Beautician) அட்வான்ஸ்டு டிப்ளமோ பட்டமும் பெற்றவர்விரிவுரையாளருக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று (UGC – NET) பல கல்லூரிகளில் துறைத்தலைவராகப் பணியாற்றியவர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடுமுறையில் எழுதத் தொடங்கிதமிழில் பல முன்னணி இதழ்களில் எழுதியவர். புத்தகங்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் எழுதியுள்ளார். பிரபல பெண்கள் பத்திரிக்கைக்கு 21 வயதிலேயே ஆசிரியரான போது, ‘ The Youngest Editor of Tamilnadu’ என ‘The Hindu’ பத்திரிக்கை செய்தி வெளியிட்டது53 ஆடியோ மற்றும் வீடியோ சிடிக்களை பல தலைப்புகளிலும் வெளிட்டுள்ள இவர் எழுதுவதுடன் உறவுச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான பல பயிலரங்குகளை தமிழகமெங்கும் நடத்தி வருகிறார்இவருக்கு மனித உரிமைக் கழகம் மனித நேயத்துக்கான விருது வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.