UNLEASH THE UNTOLD

படைப்பாளர்கள்

<strong>சூழலும் பெண்களும்</strong>

ஓர் இடத்தின் சுற்றுச்சூழல் கெட்டுவிட்டால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களாகத்தான் இருக்கிறார்கள். இன்னொருபுறம், சீரழிந்த சுற்றுச்சூழலை யார் பாதுகாக்கவேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. சூழல் பாதுகாப்புக்காகக் குரல் கொடுக்கும் பெண்களைப் பாராட்டும் அதே நேரம், பச்சை மையில் கையெழுத்துப் போட்டு இந்த முடிவுகளை எடுக்கும் இடங்களில் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் இருக்கிறதா என்பதையும் கேள்வி கேட்க வேண்டும். இவற்றைத் தவிர, சாதி, வர்க்கம் போன்ற வெவ்வேறு சமூகப் படிநிலைகள் இந்தப் பிரச்னைகளுக்குள் எப்படி இயங்குகின்றன என்பதையும் கவனிக்கவேண்டும்.

வந்தியத்தேவன் வழித்தடத்தில் ஆனையிறவு

2000இல் ‘ஓயாத அலைகள் 3’ என்று பெயரிடப்பட்ட இரண்டாம் ஆனையிறவு சண்டையின் போது விடுதலைப்புலிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மிக நீண்டதும், கடினமானதுமான சமர் அது. 35 நாட்களுக்குப் பின் ஏப்ரல் 22 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசமானது கோட்டை. ஆனால், இறுதி யுத்தத்தின்போது, 2009 ஜனவரி 10 ஆம் நாள் இலங்கை ராணுவம் மீண்டும் இப்படைத்தளத்தைக் கைப்பற்றியது. ஆனையிறவுக்கான ஈழப்போராட்டத்தில் ஏறத்தாழ 3000 புலிவீரர்கள் களமாடி வீரச்சாவடைந்ததாக விடுதலைப் புலிகளின் குறிப்பு கூறுகிறது. ஈழப்போராட்டத்தில் ஆனையிறவு மீட்பே மிகப்பெரிய வெற்றியாக வெளி உலகுக்குத் தோன்றியது.

பூக்கரு

“இங்க பாரு பூவு, ஒன்னு வச்சேன்னு வையி, வாய் கொட்டாவி விட்டுக்கும். எங்கம்மாவைப் பாத்தியா எப்டித் தவிச்சு நிக்குதுன்னு? அது ஆசைப்பட்டுச்சுன்னுதான் நான் உன்னை இங்க வச்சிக்க சம்மதிச்சேன். இப்ப உன்னால அதுக்கு எதுவும் ஆச்சுன்னு வையி வெளுத்துடுவேன்” என்று சட்டைக் கைகளை மடித்தான் சரவணன்.

சோகை தவிர்ப்போம்; வாகை சூடுவோம்!

கிராமங்களில் பெரும்பாலும் மாதசுழற்சி உதிரப்போக்கை ‘தீட்டு’ எனக் கூறுவார்கள். அது கெட்ட ரத்தம் என்பார்கள். ஆனால், அது தவறான புரிதல். அது எவ்வகையிலும் கெட்ட ரத்தம் அல்ல. மனித இனம் உற்பத்தியாகும் மிகச்சிறந்த புனிதமான பேராற்றல் கொண்ட கர்ப்பபையில் இருந்து வரும் மாதசுழற்சி உதிரப்போக்கு எப்படித் தீட்டாக முடியும்? அது தீட்டெனில் அங்கிருந்து பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் தீட்டாகிறான் என்று சொல்வீர்களா?

வந்தியத்தேவன் வழித்தடத்தில் திரிகோணமலை

‘தென்கிழக்காசிய மிலேச்சர்களின் உரோமாபுரி’,  ‘தட்சிண கைலாசம்’ என்றெல்லாம் புகழப்படும்  அதே திருகோணமலை நகரின் மற்றொரு மூலையில், தேசம் பிடிக்கும் பேராசையின் விளைவுகளைப் பறைசாற்றி மௌனமாக நிற்கின்றன… இரண்டாம் உலக யுத்தத்தில் தேசம்விட்டு தேசம்வந்து போரிட்ட பிரிட்டானியப் படைவீரர்களின் 303 கல்லறைகள்.

ஜெய ஜெய ஜெய ஜெய ஹே!

ஒரு பெண்ணின் தேவை என்ன என்று நீதிபதி கேட்கும் ஒரு காட்சியில் அங்கிருக்கும் ஆண்களுக்கு அதற்குப் பதில்கூடத் தெரியாது. சமத்துவம், நீதி, பெண் சுதந்திரம் இவைதான் பெண்களின் அடிப்படைத் தேவை என்பார் நீதிபதி. இந்த அடிப்படைத் தேவை எல்லாப் பெண்களுக்கும் கிடைத்து விடுகிறதா இந்த ஜனநாயக நாட்டில் என்கிற கேள்வி தொக்கியே நிற்கிறது இந்தத் திரைப்படத்திலும் நம் வாழ்விலும்.

வந்தியத்தேவன் வழித்தடத்தில் சிகிரியா

மிகவும் பாதுகாப்பான அந்தக் குன்றில் புதுத் தலைநகரை அமைத்தான் காசியப்பன். அரசனனின் புத்திசாலித்தனம் வியக்க வைக்கிறது, சுற்றி வர ஆழ்ந்த அகழி சூழ்ந்திருக்க குன்றின் மேலே குகைக்குள் கட்டிய கோட்டைக்குள் எந்த எதிரியால் நுழைய முடியும்? கி.பி. 495 வரை காமக்கிழத்தியர் புடைசூழ முகில்கள் தழுவிச் செல்லும் அந்தச் சொர்க்கபுரியில் வாழ்வாங்கு வாழ்ந்துகொண்டான் காசியப்பன்.

வந்தியத்தேவனின் வழித்தடத்தில் எசல பெரஹரா திருவிழா!

எசல பெரஹர அல்லது எசலா பேரணி என்பது இலங்கையின் கண்டி நகரத்தில் நிகழும் ஒரு பௌத்த திருவிழா. மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே நடைபெறுவதாகக் கூறப்படும் இவ்விழா, மழை வேண்டியும் இந்தியாவிலிருந்து புத்தரின் புனிதப்பல் கொண்டுவரப்பட்ட நாளை கொண்டாடுவதற்காகவும் தொடங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இன்றைக்கு இலங்கையின் தனித்துவமான விழாவாக மாறியுள்ளதால், அச்சமயத்தில் வெளிநாட்டாரின் வருகை அதிகமாக உள்ளது.

கருக்கலைதல்

கருவுற்ற காலத்தில் கருவானது உயிருடன் இருக்க முடியாத ஒரு நிலையில் தானாகவே அழிந்து போதல் அல்லது அழிக்கப்படுதல் கருக்கலைதல் எனப்படும். உலக சுகாதார அமைப்பானது 500கிராம் எடையோ அல்லது அதற்கு குறைவான எடையோ கொண்ட கருவின் இழப்பை, கருச்சிதைவு அல்லது கருக்கலைதல் என வகைப்படுத்துகிறது.

வந்தியத்தேவனின் வழித்தடத்தில் அனுராதபுரத்தின் அதிசயங்கள்!

அனுராதபுரத்திற்குள் அருள்மொழிவர்மனும் ஆழ்வார்க்கடியானும் தானுமாக நுழையும்போது, இப்படித்தானே அதிசயித்துப் போனான் வந்தியத்தேவன்! இலங்கைத்தீவின் தொன்மை மிக்க அத்தலைநகரத்தைச் சற்று தூரத்திலிருந்து பார்த்தபோதே வந்தியத்தேவன் அதிசயக் கடலில் மூழ்கிப் பேசும் சக்தியை இழந்தான். அவனுடைய கற்பனைகளையெல்லாம் அந்த மாநகரம் விஞ்சியதாயிருந்தது.