UNLEASH THE UNTOLD

ரமாதேவி ரத்தினசாமி

மறக்க முடியாத கதைகளும் சொல்ல விரும்பாத கதைகளும்

உலகில் எங்கு போர் நடந்தாலும் சிரியாவோ உக்ரைனோ ஈழமோ அந்த யுத்தத்திற்குச் சமபந்தமேயில்லாமல் பாதிக்கப்படுபவர்கள் பெண்களும் குழந்தைகளும் என்பதுதானே வரலாறு. இலங்கையில் நடந்த இனப் போரின் விளைவால், 24 சதவீதக் குடும்பங்கள், பெண் தலைமை தாங்கும் குடும்பங்களாக இருக்கின்றன. வடக்கு கிழக்கில் மட்டும், 89,000 பெண்கள் தங்கள் கணவரை இழந்து ஒற்றைப் பெண்களாகக் குடும்பத்தைச் சுமக்கின்றனர்.

யாருமற்ற தனிமையில் டொரிக் மாளிகை!

காலம் சுழன்றது. காலம் கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டு. தங்க முட்டைக்கு ஆசைப்படும் பேராசைக்காரனாக இயற்கைக்கு எதிராக விலங்கினம் வளர்வதற்கும் பெருகுவதற்கும் இடம் கொடுக்காமல் மனிதன் தொடர்ச்சியாக முத்துகளை அறுவடை செய்து குவிக்க, இறுதி விளைவாக இயற்கை தன் வளத்தை நிறுத்திக்கொண்டது. அள்ளிக்கொடுத்த முத்துக்குளித்தல் தொழில் முடிவுக்குவர, அதன் காரணமாகவே உருவாக்கப்பட்ட மாளிகை கேட்பாரற்று போயிற்று.

தமிழுக்கு மதுவென்று பேர்...

முதன்முதலில் இலங்கைத் தமிழ் நமக்கு வானொலி வழியாகவே பரிச்சயமானது. இலங்கை அறிவிப்பாளர்களின் குரலுக்கும் தமிழுக்கும் மனதைப் பறிகொடுத்து பித்தாய் அலைந்தார்கள். தொலைக்காட்சிகளும் தமிழ்த் திரைப்படங்களும் நாமறிந்த இலங்கைத் தமிழின் வட்டத்தைச் சற்றே பெரிதாக்கின. யூ டியூப் காணொளிகளால் மேலும் சற்று அதிகப்படியாக அறிந்துகொண்டோம்.

மன்னார் தீவினுக்கோர் பாலம் அமைத்தே…

திருக்கேதீஸ்வரம், மடுமாதா தேவாலயம், தள்ளாடி, குஞ்சுகுளம் தொங்கு பாலம், அல்லி ராணிக்கோட்டை, கட்டுக்கரைக்குளம், வங்காலை பறவைகள் சரணாலயம், பெருக்குமரம், மாதோட்ட துறைமுகம், மன்னார்கோட்டை என வரலாற்றுச் சிறப்புகளால் நிறைந்திருக்கிறது மன்னார்.

இலங்கை அரசியலின் அணையாத வெம்மை

சிங்களப் பேரினவாதத்தின் அதிகாரத்துக்கு எதிராகத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் உருவெடுத்தது. தொடர்ச்சியான போராட்டங்கள் 1983 க்குப் பின்னர் உள்நாட்டுப்போராக மாறியது. தமிழர்கள் கேட்ட, தமிழ் தேசியம் என்பது பிரிவினைக்கான கோரிக்கை அல்ல, அடையாளத்துக்கான போராட்டம் என்பதை இலங்கை அரசு மட்டுமல்ல, உலகநாடுகள்கூட புரிந்துகொள்ளவில்லை.

ராஜா வேஷம் கலைஞ்சி போச்சு டும்... டும்... டும்…

“மக்கள் நினைத்தால், ஆகாய விமானங்களைக் கல்லால் எறிந்து வீழ்த்துவார்கள், டாங்கிகளைக் கைகளால் புரட்டிப்போட்டுவார்கள்” என்ற ஃபிடல்காஸ்ட்ரேவின் வார்த்தைகள் எல்லாக் காலத்துக்கும் எல்லாத் தேசத்திற்கும் பொருத்தமானவை என்பதை கண்முன் காண்கிறோம்.

புத்தம் சரணம் கச்சாமி

தவறான விதத்தில் பிடிக்கும் பொழுது ஒரு புல்லின் இதழ் எவ்வாறு ஒருவரின் கையில் வெட்டுக்காயத்தை ஏற்படுத்துகின்றதோ அதே விதத்தில் துறவிகள் தமது துறவு நிலையைத் தவறான விதத்தில் முன்னெடுக்கும்போது அது ஒருவரை நரகத்திற்கு இழுத்துச் செல்கிறது.

நீண்ட காலம் உயிர் வாழும் பெருக்குமரம் எனும் அதிசயம்!

நெடுந்தீவிலுள்ள மற்றொரு பெருக்குமரம் ஆறேழு பேர் உள்ளே சென்று நிற்கக்கூடிய அளவுக்கு மரத்திற்குள் குகை போல, தாராள இடவசதியுடன், மிகுந்த குளிர்ச்சியுடன் காணப்படுமாம். போர்த்துகீசியம், ஒல்லாந்தர் ஆட்சிக்காலங்களில் பெருக்குமரத்தினுள் ஒளிந்திருந்து அவர்கள் மீது நம்மவர்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.

ஈழமும் இலங்கையும் பொருளால் ஒன்றே…

ஈழக்காசு, ஈழக் கழஞ்சு, ஈழச்சேரி, ஈழத்துணவு, ஈழ மண்டலம் என்று பல்வேறு சொற்றொடர்கள் தமிழர்களின் வாழ்வியலில் தொடர்ச்சியாகப் பயன்பட்டுத்தான் வந்துள்ளன. ஈழ கேசரி, ஈழ நாடு போன்ற பத்திரிகைகள் தோன்றிய காலத்தில்கூட, ஈழம் என்பது முழுத் தீவையுமே குறித்தன. அரசியலில் இன வேறுபாடுகள் தோன்ற ஆரம்பித்தபோது தான், இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளைக் குறிக்க, ‘தமிழீழம்’ என்ற சொல் அறிமுகமானது.

உணவுல ஒரு உறவு இருக்குது...

தாய்நாட்டின் சொந்த உணவுகளை, சமையல் முறைகளை இறுகப் பற்றியிருக்கும் ஈழத்தமிழர்கள், அந்த உணவுகளுக்குள் தம் உறவுகளை, நண்பர்களை,  தத்தம் ஊரை, நட்பை, அந்த உணவு குறித்த நினைவுகளை தினம் தினம் மீட்டெடுக்கிறார்கள்.