UNLEASH THE UNTOLD

ரமாதேவி ரத்தினசாமி

சமத்துவ மலை!

இலங்கையின் இரண்டாவது பெரிய, அழகு மிகுந்த சோலைகள் சூழ்ந்த அந்த மலை ரத்தினபுரி மாவட்டத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் சபரகமுவா மற்றும் மத்திய மாகாணங்களுக்கு இடையில், நிர்வாக ரீதியாக நுவரெலியா மாவட்டத்துக்குச் சொந்தமானதாக இருக்கிறது. நான்கு மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒரே இடத்தை சர்ச்சையின்றி வணங்கிச் செல்லும் உலகின் ஒரே இடம் இதுவாகத்தான் இருக்க முடியும்.

துலங்காத மர்மங்கள்...

புத்தரின் புனிதப்பல் யாரிடம் இருக்கிறதோ அவர்களே இலங்கையை ஆள்வார்கள்’ என்பது தொன்றுதொட்டு நிலவிவரும் நம்பிக்கை. அதனால் மகாவம்ச கால சந்திரபானுவும் சரித்திரக் கால ஆரியச் சக்கரவர்த்தியும் புத்தரின் புனிதப்பல் பாதுகாக்கப்பட்ட பேழையை அபகரித்துச் சென்றுள்ளனர். இந்த இடத்திற்கு வருவதற்கு முன் ஐந்து வெவ்வேறு இடங்களில் அந்தப் பல் பாதுகாக்கப்பட்டு இருந்திருக்கிறது. ஒவ்வோர் அரசரும் ஒவ்வொரு பேழையில் வைத்துப் பாதுகாக்க, இப்போது பல் ஏழு பேழைகளுக்குள் பத்திரமாக பொதியப்பட்டுள்ளது. “மூன்று அங்குல அளவில் இருக்கும் அந்தப்பல், செம்பருத்தி பூக்களின் நடுவிலிருக்கும் காம்பு போல, வேருடன் காணப்படும்” என்று அந்தப் பிக்கு சொல்ல, “மூன்று அங்குல நீளத்தில் பல்லா?” என்று தலை சுற்றியது.

1983 ஜூலை 25 : கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை

“ஜூலை கலவரத்தை அரசியல் ரீதியில் நிறுத்தியிருந்தால் இன்று இலங்கைக்கு இவ்வளவு பெரிய அழிவு வந்திருக்காது” என்று கொழும்பு மாநகரசபை உறுப்பினர் உமா சந்திரா பிரகாஷ் பிபிசி தமிழுக்குச் சமீபத்தில் பேட்டி கொடுத்தார். 39 ஆண்டுகளைக் கடந்தும், இரு இனங்களுக்குமிடையே எந்த நல்லிணக்கமும் ஏற்படாமலே போய்விட்டது.

கறை படிந்த கறுப்பு ஜூலை

இலங்கை வரலாற்றின் பக்கங்களில் ரணங்களால் நிரப்பப்பட்ட அந்த ஜூலை, இலங்கை இனி எப்போதும், முன்னெப்போதைப்போலவும் இருக்க வழியில்லை என்பதை உணர்த்திச் சென்றது. வலிகள் மிகுந்த அந்த மாதத்தைப் பிரபல பத்திரிக்கையாளர் மேர்வின் டி சில்வா கறுப்பு ஜூலை என்று வர்ணித்தார். ஜூலை 23 இல் இருந்து 27ஆம் திகதி வரை திட்டமிட்டு நடத்தப்பட்ட வெறியாட்டங்கள் சந்திகளிலும் வீடுகளிலும் மட்டுமல்ல, இலங்கையின் மிகப்பெரிய சிறைச்சாலையொன்றிலும் நிகழ்த்தப்பட்டது அறிந்து உலகே உறைந்து போனது.

மரகதத்தீவில் மக்கள் திலகம்

நீண்டகாலப் போர், பண்பாட்டுப் பிரிவினைகள், பொருளாதார நெருக்கடி எனச் சிக்கித் தவிக்கிறது இலங்கை திரைப்படத்துறை. அதனால், இந்தியாவில் இருந்து வெளியாகும் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்களே இலங்கைத் திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ளன.

வயோதிகத் தாயாக ஒரு வரலாற்றுச் சின்னம்!

ஒவ்வோர் ஆட்சியாளர் கீழும் ஓயாமல் உழைத்துத் தேய்ந்து, தன்னை உருமாற்றிக்கொண்டு, சிதிலமடைந்து, காலத்தின் கோலங்களைத் தன் உடலில் தாங்கித் தனித்து நிற்கிறது கோட்டை. கோட்டையைச் சுற்றி வரும்போது முருகைக்கற்கள், சுண்ணாம்புக்கற்கள், அகழிகள், மணிக்கோபுரம், காவலர் அரண், சுரங்கம், நீர்த்தேக்கம் எனக் காலச்சக்கரம் நம்மை உள்வாங்கிப் பின்னோக்கி இழுத்துச் செல்வதைத் தடுக்க முடியவில்லை.

நாம் இந்து அல்ல, சைவர்

விஷ்ணு வழிபாடு பிற்காலத்தில் இந்தியாவிலிருந்து வந்தாலும்கூடத் தனி மதமாகாமல் சைவத்தின் உப பிரிவாக அடங்கிவிட்டது. அன்றிலிருந்து இன்றுவரை இலங்கை இந்துக்கள் சிவனை முழுமுதலாக வணங்கும் சைவர்களே. அவர்களுக்குள் சைவ, வைணவ பேதம் பெரிதாக இல்லை. அவர்களைப் பொறுத்தவரை அரியும் அரனும் ஒன்றுதான்.

நாங்கள் ஏன் அகதிகளானோம்?

“எப்படியாவது தப்பித்தால் போதும் எனக் கிடைத்த விசாவில் உலகின் எந்த மூலைக்கும் போக சனம் துடிப்பதைக் கண்முன்னால் கண்டேன் ரமா, குடும்பத்தில் யாரோ ஒருவருக்கு எதோ ஒரு நாட்டுக்கு விசா கிடைத்தால், அவர் மட்டுமாவது தப்பிக்கட்டும் என்று மொத்தக் குடும்பமும் வழியனுப்ப, இனி குடும்பத்தைக் காண்போமா, வாழ்க்கையில் ஒன்று சேர்வோமா என்ற எந்த நம்பிக்கையும் இல்லாமல், கதறித் துடிக்கிறார்கள்.”

ஆவே ஆவே மரியா வாழ்க வாழ்க மரியா!

தேவாலயப் பகுதியைக் கைப்பற்றிய ராணுவத்தினர் பெரும் ராணுவ வெற்றியாக அதைக் கொண்டாடி மகிழ்ந்தனர். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்துவந்த மடு இலங்கை ராணுவத்தினர் வசம் வந்தது. மடு தேவாலய நுழைவாயில் அருகில் ராணுவத்தினரால் பௌத்த விகாரை அமைக்கவும் முயற்சி எடுக்கப்பட்டு தோல்வியில் முடிந்தது.

எரியும் நினைவுகள்

வரலாற்றில் இருந்து நாம் பாடம் படிக்கத் தவறுகின்ற போது மீண்டும் மீண்டும் அந்தத் தவறான வரலாறு மீட்டப்படும் என்பதற்கு இந்தத் தேசத்தின் வரலாறு சான்றாக இருக்கிறது. எந்த மக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்தி தாங்கள் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்தார்களோ, அந்த மக்களே இன்று அவர்களுக்கு எதிரான ஆயுதங்களாக மாறியுள்ளனர்.