இருவர் ஒன்றானால்...
’அடுத்த தலைமுறையை உருவாக்குதல்’ என்பது உயிர்களுக்கே உள்ள தனிப் பண்பு. ஒரு பேனாவிலிருந்து இன்னொரு பேனா பிறப்பதில்லை. ஆனால், சாதகமான சூழல் அமையும்போது ஓர் அமீபா தன்னைத் தானே பிரதியெடுத்துக்கொள்கிறது.
’அடுத்த தலைமுறையை உருவாக்குதல்’ என்பது உயிர்களுக்கே உள்ள தனிப் பண்பு. ஒரு பேனாவிலிருந்து இன்னொரு பேனா பிறப்பதில்லை. ஆனால், சாதகமான சூழல் அமையும்போது ஓர் அமீபா தன்னைத் தானே பிரதியெடுத்துக்கொள்கிறது.
தாயிடமிருந்து பால் குடிக்கும் குட்டிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளும் மூளை வளர்ச்சிக்கான வேதிப்பொருட்களும் ஊட்டச்சத்துகளும் போதுமான அளவில் சென்று சேர்ந்துவிடுகின்றன.
கண்களைத் திறந்தபடியே வலுவான தசைகளோடு பிறக்கும் குட்டிகள், பிறந்த நொடியிலிருந்தே மூர்க்கமானவையாகவும் சண்டை போட்டு உணவு உண்ணவும் இருக்கின்றன. இவை வனத்தின் சூழலுக்கு அளிக்கும் பங்கு முக்கியமானது.
பிறக்கும்போது முள்ளெலிகளின் உடலில் உள்ள எல்லா முட்களும் மென்மையானவையாக, கிட்டத்தட்ட நீண்ட முடிகளைப் போலவே இருக்கும். பிறந்த சில மணி நேரத்துக்குள் குட்டியின் முட்கள் இறுகிக் கூர்மையடைந்துவிடும்!
கடற்கன்னிகளின் பர்ஸ் என்பது, சுறா முட்டைகளுக்கான வெளிப்புறக் கூடு. ஒவ்வொரு மணிபர்ஸுக்குள்ளும் ஒன்று அல்லது இரண்டு சுறாக்குஞ்சுகளும் அவற்றுக்கு உணவூட்டும் மஞ்சள் கருவும் இருக்கும்.
இணையைத் தேர்ந்தெடுப்பதில் பெண் விலங்குகள் காட்டும் கண்டிப்புதான் ஆண் விலங்குகளின் தோற்றம் பரிணாம வளர்ச்சியடைந்து அழகாக மாறுவதற்கே காரணம் என்கின்றன ஆய்வுகள்.
பெரிய குட்டிகளுக்காக கொழுப்பு நிறைந்த பாலையும், வயிற்றுப்பைக்குள் இருக்கும் ஜோயிக்களுக்காக மாவுச்சத்துமிக்க பாலையும் உருவாக்கி கங்காருக்கள் ஊட்டுகின்றன!
ஒவ்வொரு விலங்கிலும் ஆண் – பெண் இருவகை உறுப்புகளும் உண்டு என்றாலும் இணைசேரும்போது முட்டைகளை உருவாக்க நிறைய ஆற்றல் தேவை என்பதால் உயிரணுக்களைத் தருகிற ஆணாக இருப்பதையே விரும்புகின்றன.
ஓர் ஓம்புயிரி வேற்று முட்டையைக் கண்டுபிடித்து உடைத்துவிட்டால், அந்த முட்டையைப் போட்ட ஒட்டுண்ணி அதைத் தெரிந்துகொண்டு அந்த ஓம்புயிரியின் முட்டைகளை எல்லாம் மொத்தமாக அழித்துவிடும்!
ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் (75 நாட்கள்) வரை ஆண் பெங்குயின்கள் முட்டைகளை இவ்வாறு கண்ணும் கருத்துமாய் பாதுகாக்கின்றன.