UNLEASH THE UNTOLD

கதையும் கவிதையும்

வேதா

“நா சொல்ல வேண்டியத சொல்லிட்டன் பெரியப்பா..நாளக்கி அவ்வொ பத்திரம் பாடு சாமாஞ்செட்டு என்ன இருக்கோ ஒங்க கிட்ட சேத்துர்றேன். அவ்வொவ வழியப் பாத்துக்க சொல்லுங்க”,

ஈரம் உதறும் பறவை

ஜன்னலில்
நனைந்த பறவையொன்று
வந்தமர்ந்து
இறகுகளின் ஈரம்
உதறிக்கொண்டிருக்க
எண்ண முடியாத
நரம்புகளின் வீணையாக
எல்லோருக்கும் ஆறுதலாக
இசைத்துக் கொண்டிருக்கிறது
வான்

பெண் என்பவள் பொருள் அல்ல, உயிர்

நிகழ்ந்த விபத்திற்கு பெண் பொறுப்பில்லை எனும் போது பெண்களை தண்டித்தல் எவ்விதத்தில் நியாயம்? அவள் புனிதத்தை கேள்விக்குள்ளாக்குவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்?

Woman

முத்தங்களுடன் பயணிப்பவள்

உன்னை வழியனுப்பித் திரும்புகையில்
வீடு உள் படிக்கட்டுத் திருப்பத்தில் நின்று வாறியணைத்துக் கொள்கின்றன உன் முத்தங்கள்
பெரு மழையின் சிறு சாரலாக

சின்னபாப்பா

“படிக்கிற புள்ளதான நீ, இவ்வொதான் அறிவில்லாம டமுக்கு அடிக்கிறாவொன்னா ஒனக்காச்சும் தெரிய வேணா? நாளக்கி பள்ளியோடம் போம்போது எல்லா பயலும் சிரிக்கமாட்டானுவ?”

சௌந்தரா

” நீ அன்னிக்கி தாத்தாவ பாக்க வந்தன ..அப்ப ஒன்னப் பாத்தாராம்…அப்பிடியே அவரு மவன உரிச்சு வெச்ச மாறி இருக்குறியாம்….ஹஹா ஹ..வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தாள்.புளுவு…புளுவு…மண்ட கொண்ட புளுவு… ராஜேந்திரன் மவளா நீ…சௌந்தரத்த அச்சுல எடுத்தவன்னுதான ஆத்தா சொல்லும்…ஆத்தாவ விடு, நம்ம தெருக்காரவுங்க யார வேணும்னாலும் கேக்கட்டுமே….” சரி…இதில் சிரிக்க என்ன இருக்கிறது என்று ஆனந்திக்குப் புரியவில்லை. என்னவோ போகட்டும் என்று சௌந்தரத்தின் மேல் காலைப் போட்டபடி உறங்கிப் போனாள். ஆனால், தன் உரிமை கோரலை அவள் அங்கீகரித்து முத்திரை குத்திவிட்டதுபோன்ற நிறைவில் சௌந்தரத்துக்கும் நல்ல உறக்கம் வந்தது.

இயற்கை எனும் சொர்க்கம்

மழை பிடித்தது. நிலா பிடித்தது. “நிலாச்சோறு மாற்றுதல்” என்று ஒரு விளையாட்டு 15 நாட்களுக்கு நடக்கும். வாசலில் முக்காலியில் சாணத்தால் செய்த பிள்ளையார் வைத்து, அன்று மாலை வீட்டில் சமைத்த உணவை எச்சில் படாமல் அவரவர் வீட்டில் இருந்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வந்து அந்த முக்காலியைச் சுற்றிலும் வைத்துக் கும்மிப் பாடல் பாடி விளையாடுவார்கள். கும்மி முடிந்து நிலவொளியில் நிலவுக்குப் படைத்த உணவைப் பகிர்ந்து உண்ணுவார்கள். அது முடிந்து தூக்கம் வரும் வரை விளையாட்டுகள் தொடரும். 15ஆவது நாள் மாவிடித்து உலக்கை வைத்து அந்த நிலாச்சோறு மாற்றும் வைபவம் முடியும்.

மூன்றாவது கதவு

‘ஏ.. பூப் பறிப்பமா’
அதற்குள் ஒரு வண்ணத்துப் பூச்சி அவர்களைத் திசை திருப்ப, பள்ளிவாசலின் வாங்கு’ சொல்லுமிடத்துக்கு ஓடினார்கள். தன்னையறியாமல் கூச்சலிட்டார்கள். வாசல் கேட்’டில் ஒரு அஸரத்’ கத்தினார். ‘ஏ யாரு பிள்ளைங்களா அது? எப்படி உள்ள வந்தீங்க; வெளாட்ற இடமால்ல இது… ம்?’
பக்கத்தில் இன்னொருவர் ‘வச்சுப் பூட்டுங்க சொல்றேன். அப்பத்தான் இதுகளுக்கு புத்தி வரும்’
இருவரும் பூட்டிவிட்டுச் சென்றார்கள்.

நீலா

” பெரிம்மா அது கடன்தான்…என்னய விக்கல….இதுக்குதான் நா அப்பிடி சொன்னேன்…ஒங்க பணத்த அடுத்த ஆறு மாசத்துல திருப்பிக் குடுத்துடுவன்…ஒங்களுக்கு ஏதாச்சும் ஒதவி வேணும்னு கூப்டா வந்து செஞ்சி தாரேன். வேற ஒண்ணும் வேணாம்” ,எனச் சொல்லிவிட்டு தரதரவென இழுக்காத குறையாகத் தாயை அழைத்துக்கொண்டு வெளியேறி விட்டான். தன்முன்னாலேயே தன்னுடைய விருப்பு வெறுப்புக்கு உட்படாத ஒன்று இந்த வீட்டில் நடக்கும் என்று கனவிலும் நினைத்ததில்லை அவள்.

திகைப்பு

தொலைக்காட்சியை இயக்கி பென் டிரைவை செருகினாள். அவளுக்குப் பிடித்த பாடல்களின் தொகுப்பைத் திறந்தாள். புட்ட பொம்மா பாட்டை ஓட விட்டு, வீட்டின் கதவு சாளரங்களை அடைத்தாள். வசிப்பறையின் மையத்தில் நின்றபடி அந்தப் பாட்டுக்கு ஆனந்தமாகக் கூத்தாடினாள். இது தான் அசைவு, அடவு என்றெல்லாம் இல்லாமல் மனம் போல கை கால்களை வளைத்து நெளித்து, குதித்து சரி ஆட்டம் ஆடினாள். பாடல் முடியும் தருவாயில் மீண்டும் அதே பாடல். நான்கைந்து முறை ஆடியதில் வியர்த்து கொட்டியது. வேகவேகமாக மூச்சு வெளியேறியது. பெரிய சாதனை நிகழ்த்திவிட்டது போன்ற மிதப்பில் இருந்தது செண்பகத்தின் உள்ளம்.