பெண்களைப் புரட்டிப் போடும் பெரி மெனோபாஸ்
மாத விலக்கு இஷ்டத்துக்கு வரும். சில மாதம் வரவே வராது. இரண்டு மாதம் கழித்து வரும்போது அதீத உதிரப்போக்கு, இதெல்லாவற்றையும்விட எப்போது வருமோ என்கிற மன அழுத்தமும் எரிச்சலில் ஒருவித பதற்றத்திலுமே நம்மை வைத்திருக்கும். உற்சாகத்தின் எல்லைக்கும் விரக்தியின் எல்லைக்கும் ஊசலாடும் மனதைச் சமன்படுத்தவே படாதபாடுபட வேண்டியிருக்கும். மன அழுத்தம் பெண்களை அமுக்கிப் படாதபாடுபடுத்தும் இந்தக் காலகட்டத்தில் உடலும் மனமும் போர்களமாகும்.
