UNLEASH THE UNTOLD

சிறப்புக் கட்டுரைகள்

பாலியல் வர்த்தகத்துக்கு எதிராகப் போராடும் சொமலி மாம்

பாலியல் வர்த்தகத்தையும் பாலியல் சுரண்டலுக்கான ஆள்கடத்தல் வர்த்தகத்தையும் உலகை விட்டு அழித்தே தீருவது என்பதையே தன் லட்சியமாக வரித்துக் கொண்டுள்ள சொமலி, சொமலி மாம் அறக்கட்டளை ஒன்றை நிறுவி, அதன் மூலம் பாலியல் சுரண்டலுக்கு ஆளான பெண்களை மீட்டெடுக்கப் போராடி வருகிறார்.

ஆணாதிக்க உலகில் பகடைக்காய்களாகும் நாதிராக்கள்

விவாகரத்தான தம்பதி ஒருவரை இன்னொருவர் சமரசம் செய்து கொண்டு மீண்டும் இணைந்து வாழ அல்லது மறுமணம் செய்து கொள்ள விரும்புவது அரிதாக இருக்கலாம், ஆனால், இது நடப்பதற்கு சாத்தியமான ஒன்றே. எத்தனையோ மனப்போராட்டங்களுக்கும் கஷ்டங்களுக்கும் பிறகு தனக்கு எந்தவிதத்திலும் தொடர்புபடாத விவாகரத்திலிருந்து நீங்கி, தன் கணவனுடன் மீண்டும் இணைந்து வாழ்வதற்கான வாய்ப்பை எட்டிப்பிடிக்கும் நாதிராவின் நம்பிக்கைகளை மதத்தின் விசித்திரமான திருமணச் சட்டம் அப்படியே சுட்டுப் பொசுக்குகிறது.

அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்த முதல் பெண்!

பதவிகளும் சொகுசான வாழ்க்கையும் வசதியும் தேடி வந்தாலும் விமானத்தில் உலகைச் சுற்றிவர வேண்டும் என்கிற மாபெரும் வேட்கையைக் கொண்டவராக இருந்தார் அமெலியா. அவருக்கு முன் வேறு பலர் இந்தச் சாதனையைச் செய்திருந்தாலும் தனக்கென புதிய இலக்கொன்றை வைத்திருந்தார். தன் பயணத்துக்காகப் பூமத்திய ரேகையை ஒட்டி அமைத்துக்கொண்ட பாதை, அதுவரை மற்றவர்கள் தேர்ந்தெடுத்த பாதையைவிட அதிக தூரத்தைக் கொண்டது. ஏறக்குறைய 47 ஆயிரம் கி.மீ. வான்வழிப் பயணம் செய்யவேண்டும். பர்டியூ பல்கலைக்கழகத்தின் பொருளுதவியுடன் அவருடைய பயன்பாடுக்கேற்ற வகையில் விமானத்தை வடிவமைத்தது லாக்ஹீட் வானூர்தி நிறுவனம்.

குழந்தை பெற்றுக்கொள்ளும் முன்...

என் அம்மா பார்த்துக்கொள்வார், மாமியார் பார்த்துக் கொள்வார், உறவினர்கள் இருக்கிறார்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று பிறரை நம்பி குழந்தை பெற்றுக்கொள்வதும் கூட அபத்தம்தான். அவர்கள் குழந்தை வளர்ப்பில் துணை புரியலாமே தவிர, முழுப் பொறுப்பையும் ஏற்க முடியாது, கணவன், மனைவி இருவரும் குழந்தை வளர்ப்புக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு, விட்டுக் கொடுக்க வேண்டியவை பற்றித் தீர ஆலோசித்து, அதன் பின் குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி யோசித்தாலே குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே பிரச்னை இருக்காது.

விவாகரத்து நாள் வாழ்த்துகள்!

சமீபத்தில் (2022) இந்தியக் குடும்பங்களில் ‘நேஷனல் ஃபேமிலி ஹெல்த் சர்வே (NFHS)’ நடத்திய பெரிய அளவிலான பல சுற்றுக் கணக்கெடுப்பில் ‘திருமணமான 18 – 49 வயதுடைய 29.3% இந்தியப் பெண்கள் குடும்ப வன்முறை அல்லது பாலியல் வன்முறையை எதிர்கொண்டுள்ளனர். 18 – 49 வயதுக்குட்பட்ட கர்ப்பிணிப் பெண்களில் 3.1% பேர் அவர்களின் கர்ப்ப காலத்தில் உடல் ரீதியான வன்முறையை அனுபவித்திருக்கிறார்கள். உடல் ரீதியாக வன்முறைக்கு உட்படுத்தப்பட்டும்கூடப் பெரும்பான்மையான பெண்கள் தங்கள் திருமண உறவில் இருந்து விவாகரத்து பெறுவது குறித்துச் சிந்திக்காமல் இருக்கக் காரணம் என்ன?

மலக்குழி மரணங்கள்...

கடந்த 2022 ஆம் வருடம் ஜூலை மாதம் 19 ஆம் தேதி மழைக்கால கூட்டத் தொடரின் போது மலக்குழி சுத்தம் செய்பவர்களுக்கு நிகழும் மரணங்கள் குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி வைக்கப்பட்ட போது மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார், ‘கடந்த  5 ஆண்டுகளில்  இந்தியா முழுவதும் 347 மலக்குழி மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 51, தமிழ்நாட்டில் 48, டெல்லியில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரபிரதேசம், தமிழ்நாடு, டெல்லி ஆகிய 3 மாநிலங்களில் மட்டுமே 40 சதவீத மலக்குழி மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்கிற புள்ளிவிவரத்தைத் தெரிவித்திருக்கிறார்.

விவாகரத்தும் வியாக்கியானங்களும்

இன்றைய தலைமுறை ஆண்கள் நான் மனைவியின் சுமைகளைப் பகிர்ந்து கொள்கிறேன், வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்கிறேன் என்று சிலவற்றைப் பகிர்ந்தாலும், பல நூற்றாண்டுகளாக ஆணுக்குள் ஆழப் பதிந்துவிட்டு இருக்கும் பெண்ணின் இலக்கணம் வழுவுதலை பல ஆண் மனதால் ஏற்க முடிவதில்லை என்பதுதான் உண்மை.

சகிக்கப் பழ(க்)குவோம்...

குழந்தைகள் உலகம் தனியானது. கவனமாகக் கையாள வேண்டியது. மாறி வரும் தொழில்நுட்பங்கள், கல்விமுறை, மதிப்பெண் பெற வேண்டிய அழுத்தம், பல கலைகளில் வித்தகராக விளங்க வேண்டிய நிர்ப்பந்தம் போன்றவை குழந்தைகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன. அதன் வெளிப்பாடே பெரியவர்களைப் பார்த்துக் குழந்தைகள் எடுக்கும் இத்தகைய முடிவுகள்.

பிலிஸ் வீட்லி

இவரது கவிதைகளில் இவர் வாழ்க்கையின் பல தாக்கங்கள் பிரதிபலித்தன. மேலும் ஆப்பிரிக்கப் பாரம்பரியத்தின் பெருமையும் இவர் படித்த இலக்கியங்களின் மேற்கோள்களும் பைபிள் குறிப்புகளும் கவிதைகளில் தெரிந்தன. இவர் கவிதைகளில் இருந்த தனித்துவமும் இலக்கியச் செழுமையும், வாசகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்ற அதே வேளையில் ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் இத்தனை நேர்த்தியாக பல கவிதைகள் படைப்பதை ஏற்றுக்கொள்ளாத சில அமெரிக்கர்களால் இவரது கவிதைகள் ஒரு குப்பை எனவும், வேறு சில சிறந்த கவிஞர்களிடமிருந்து நகல் எடுக்கப்பட்டது எனவும் விமர்சிக்கப்பட்டது. அத்தனை விமர்சனங்களுக்கும் இடையில் வெகுஜன மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டது ஃபிலிஸ்ஸின் கவிதைகள்.

வாழ்க்கை வசப்பட…

‘பெண்ணே பெண்ணுக்கு எதிரி, ஆண்களைக் குறை சொல்லாதீங்க, ஆண்டாண்டு காலமாக ஆண்கள் அடக்கினார்கள் என்று பொங்குகிறீர்களே முதலில் மாமியார் மருமக பஞ்சாயத்தை முடிங்க பார்ப்போம்’ என வீரவசனம் பேசுபவர்கள் அதிகம். நிஜத்தில் மாமியார் மருமகள் பிரச்னை ஏன் இவ்வளவு பெரிதாக ஊதி பெரிதாக்கப்படுகிறது? மாமனார், மருமகன் பிரச்னை வரவே வராதா? இங்குதான் ஆணாதிக்க குடும்ப அமைப்பு பெண்களைத் தங்கள் வசதிக்கு சாதகமாக, பெண்களைக் கொண்டே பெண்ணை ஒடுக்கும் வெளியே தெரியாத மிக தந்திரமான வலை ஒன்றைப் பின்னி, பெண்களையே பொறிகளாக வைத்துள்ளது.