நமக்கு மூன்று பதின் பருவங்கள்
மறதி, கோபம், இயலாமை, நம்மைப் பற்றிப் பெரிதாக நினைத்துக் கொள்வது, குறைவாக நினைத்துக் கொள்வது, பயப்படுவது, என பதின் பருவத்தின் அத்தனை குணங்களுமே ‘ரிப்பீட்’டாகும்.
மறதி, கோபம், இயலாமை, நம்மைப் பற்றிப் பெரிதாக நினைத்துக் கொள்வது, குறைவாக நினைத்துக் கொள்வது, பயப்படுவது, என பதின் பருவத்தின் அத்தனை குணங்களுமே ‘ரிப்பீட்’டாகும்.
தொழில்நுட்ப புரட்சி காலத்தின் சாட்சியாக இருப்பவர்கள். எல்லாவற்றையும் அதிசயமாகவும் புதுமையாகவும் அதே சமயம் சந்தேகமாகவும் எப்போதும் பயத்துடனும் அணுக ஆரம்பித்தவர்கள்.
அவனுடையதை விட தனது குறி ஏன் பெரிதாக / சிறிதாக இருக்கிறது? ஏன் இப்படி முடி வளருகிறது? சம்பந்தமே இல்லாத கனத்த ஒன்று தனது குரலாக வந்திருக்கிறதே? இவை ஆண் பிள்ளைகள் எதிர்கொள்ளும் பதின் பருவக் குழப்பங்கள்.
முதலில் பிள்ளைகளின் பாத்ரூமில் அவர்கள் தன் உடம்பைப் பார்க்க, நேசிக்க, அறிய, உணர பெரிய கண்ணாடி இருக்க வேண்டும். அதைப் பற்றி எல்லாம் நம்மோடு பேசும்படியான, பகிரும்படியான நமக்கேயான பொழுதுகள் வேண்டும். அதனுள் வேறு யாருக்குமே அனுமதி கிடையாது.
மிக எளிதான வழி, அவர்களின் கேள்விகளுக்கு, அந்தந்தப் பருவத்திற்கேற்ற வகையில் எளிமையாகப் பதிலளிப்பதுதான். பிள்ளைகளின் கேள்விகளுக்கான எளிய பதில்கள் முக்கியம், நமது வயதின் கூடுதல் அறிதல்கள் காரணமாகப் பிள்ளைகளை நாம் வதைக்கக் கூடாது.
எத்தகைய குடும்ப அமைப்பாக இருந்தாலும், குழந்தைகள் வளர்ப்பில் அன்பும் ஆதரவும் கொண்டு அமைய வேண்டும் என்பதுதான் அடிப்படையாக இருக்க வேண்டும்.
வீடு என்பது அங்கு வாழ்பவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்று. அங்கு குழந்தை வளர்ப்பையும் வீட்டுப் பொறுப்புகளையும் அதன் உறுப்பினர்கள் அனைவருமே பகிர்ந்து செய்வதுதான் நல்லது.
தத்தமது பிரச்னைகளை மனம் விட்டுப் பகிர்ந்துகொள்ளும் தம்பதிகளை விடவும், பேசக்கூட வாய்ப்பில்லாதவர்களுக்குள் நாள்பட்ட வெறுப்போ கசப்போ இருந்து கொண்டே இருக்கும். சந்தர்ப்பம் கிடைக்கும்போது வெடித்து விடும்.
ஆண்கள் பொதுவெளியில் சிறுநீர் கழிக்கக் கூடாது என்று சட்டம் வந்தால், வெகு இயல்பாக, வீதி வீதிக்கு ஒரு கழிவறை வசதி தன்னால் வந்துவிடும். அடிப்படையாகவே, தான் அடிபட்டால்தான் ஆண் தட்டிக் கேட்பான்.
ஆக்கும் சக்தி – அழிக்கும் சக்தி – காக்கும் சக்தி சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். குற்றங்களின் வேகத்தை விடவும் அவற்றைத் தடுத்து அழிக்கும் சக்திகள் அதைவிட வேகமாகச் செயல்படும்படி இருக்க வேண்டும்.