பிறப்புறுப்பை பொதுவெளியில் காட்டுவது ‘எக்ஸ்போஸ்’ பண்ணுவது சட்டப்படி குற்றம்தானே? பிறகு எப்படி இத்தனை ஆண்கள் பொதுவெளியில் எந்தவித பொறுப்பும் அச்சமும் கூச்சமும் இன்றி சிறுநீர் கழிக்கிறார்கள்?

ஆண்கள் பொதுவெளியில் சிறுநீர் கழிக்கும் இழிவான செயலை நிறுத்த வைக்க வேண்டுமெனில், ப்ளாஸ்டிக் ஒழிப்பு சட்டமானதால், பழையபடி சணல் துணிப் பைகள் வந்தது போல,

ஆண்கள் பொதுவெளியில் சிறுநீர் கழிக்கக் கூடாது என்று சட்டம் வந்தால், வெகு இயல்பாக, வீதி வீதிக்கு ஒரு கழிவறை வசதி தன்னால் வந்துவிடும். அடிப்படையாகவே, தன்னைப் பாதிக்கும்வரை, தான் அடிபட்டால்தான் ஆண் தட்டிக் கேட்பான்.

வீதிக்கொரு டாய்லெட் பெண்களுக்காக என்று கேட்டால் ஜென்மத்துக்கு நடக்காது; ஆனால், இது சீக்கிரம் நடக்கும். நிச்சயம் நடந்து விடும்.

பாலியல் தொடர்பான வல்லுறவுக் கொலைகளின் போதெல்லாம் மக்கள் கொதித்தெழுந்து, தவறு செய்த ஆண்களைத் தூக்கிலிட வலியுறுத்துகிறார்கள். தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்தான்; ஆனால், அதைவிடக் குற்றத்தின் காரணிகள் சமூகத்தில் சரி செய்யப்பட வேண்டும்; ஏனெனில் இங்கு மாட்டிக்கொண்டவர் மட்டுமே குற்றவாளி ஆகிறார். சட்ட ஓட்டைகளில் தப்பிக்கிறார். ஆனால், எத்தனை காலமாகத் தவறு செய்தும், மாட்டாமல் எத்தனையோ பேர் பொதுவெளிகளில் சுக வாழ்க்கை வாழ்வதைத்தானே ‘மீ டூ’ பிரச்னைகள் சுட்டிக் காட்டுகின்றன.

தவறே செய்யாமல் ஆனால், அதற்கான மனநிலையுடன் மற்ற பெரும்பாலான ஆண்கள் வாழ்வதைத்தானே, பெண்கள் பாதிக்கப்படும்போது அமைதியாக அவர்கள் அதைப் பார்த்துக் கொண்டு இருப்பது காட்டுகிறது.

குற்றங்களுக்கான காரணிகளுக்கு வருவோம். தவறு செய்த ஆண்களை எல்லாம் தமது மகன்களாகவும் பாதிக்கப்பட்ட பெண்களை எல்லாம் தமது மகள்களாகவும் பார்க்கும்போது, எங்கே தவறு செய்தோம், செய்து கொண்டே இருக்கிறோம் என்பது அப்பட்டமாகப் புரியும். மகன்களை எப்படி வளர்க்கத் தவறினோம் என்பது தெரியும்.

இதுவரை நீதி கிடைக்கவில்லை; கிடைக்கவே கிடைக்காது என்பதெல்லாம், நீதிமன்ற நிறுவனங்கள் சரியாகச் செயல்படாததன் விளைவு. இன்னும் அப்பட்டமாகச் சொன்னால், குற்றவாளிகளுக்குக் கிடைத்த வாதத் திறமை மிக்க வக்கீல்கள், பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதுதான். இதனால் நீதி செத்துவிட்டது என்றால் அபத்தம்.

சரிசெய்யப்பட வேண்டியவை பள்ளிக்காலத்திலிருந்தே, குழந்தைப் பருவத்திலிருந்தே ஆண்கள், பெண்களை, மற்றவர்களை சகவுயிராக நேசிக்கும் பார்வையும் சட்டங்களை அறியும் உரிமையும் கொண்டு வருவதே!

எல்லாரும் சொல்கிறார்கள், என் வீட்டில் நடந்தால், என் மகளுக்கு நடந்திருந்தால் சம்மந்தப்பட்டவனைத் தயங்காமல் சுட்டுக் கொல்வேன் என்று. அதுவே செய்தது என் மகனாக இருந்தாலும் கொல்வேன் என்று ஏன் யாருமே சொல்லவில்லை?

பொள்ளாச்சி விவகாரம்

https://www.bbc.com/tamil/india-47570307

https://tamil.samayam.com/latest-news/state-news/cbi-investigation-started-in-pollachi-rape-case-in-coimbatore/articleshow/69094976.cms

பீஹார் குழந்தைகள் காப்பகம்

https://www.polimernews.com/view/22239-10-people-have-been-detained-for-sexual-assault-by-girls-and-girls-in-the-state-archive-in-Bihar

https://tamil.oneindia.com/videos/55yearold-owner-of-the-shelter-home-in-bihar-was-arrested-328436.html

இன்னும் சில காப்பகங்கள் – திருவண்ணாமலை அருணை காப்பகம், மெர்சி காப்பகம்

http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/57986-child-abuse-in-thiruvannamalai-child-home-2-persons-arrested.html

https://yourstory.com/tamil/a1e7b64867-the-collector-who-reco

சென்னை அபார்ட்மெண்ட் சிறுமி பாலியல் கூட்டு வல்லுறவு

http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/48555-chennai-ayanavaram-child-harassment-a-ground-reality-report.html

https://m.dailyhunt.in/news/india/tamil/nakkheeran-epaper-nakkh/ayanavaram+sirumi+baliyal+bukaril+tappitha+ainthuber+tidukkidavaikkum+buthiya+takavalkal-newsid-94267906

7 வயது ஹாசினி, தஸ்வந்த் என்பவனால் வல்லுறவு செய்யப்பட்டு எரிக்கப்பட்டது

https://www.vikatan.com/news/crime/116711-hasinis-alleged-killer-dhasvanth-activities-in-jail

ஆறுமாத, எட்டு மாத குழந்தைகள் வல்லுறவு செய்யப்படுவது

கர்ப்பிணி ஆட்டை கூட்டு வல்லுறவு செய்தது

https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/pregnant-goat-dies-after-being-gang-raped-by-8-men-in-haryana/articleshow/65184376.cms

https://www.nakkheeran.in/24-by-7-news/india/pregnant-goat-dies-after-being-gang-raped-by-8-men-haryana

கடந்த ஓரிரு வருடங்களில் இணையங்களில் பகிரப்பட்ட எண்ணிலா ‘மீ டூ’ பிரச்னைகள்…

பகிரப்படாத, எத்தனையோ குடும்பங்களில் இன்னும் நடந்து கொண்டிருக்கிற, அது வல்லுறவு என்றே அறியப்படாமலே நிகழ்ந்து கொண்டிருக்கிற, குடும்ப வல்லுறவுகள்…

மேற்சொன்ன அனைத்தும் தெள்ளத் தெளிவாகப் புரிய வைப்பது என்ன? இதுதான் நாட்டின் இன்றைய முந்தைய எப்போதுமான நிலை. மீடியாக்கள் காரணமாக இப்போது வெளியில் அதிகம் தெரிய வருகின்றன.

எந்தப் பிரச்னையும் ஏதோ ஓரிடத்தில் சரி செய்யத் தொடங்கப்பட வேண்டும்.

எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை 1990களில் இந்திய அரசாங்கம் தரும்போது, ‘காண்டம்’ யூஸ் பண்ண வேண்டும் என்பதில் தொடங்கினார்கள். அந்தப் பெயரை பரவலாக மக்கள் மனதில் பதித்தார்கள். ஏனென்றால், எந்த ஒரு பிரச்னையிலும், முதலாக ‘பாதிப்பின் உடனடி கூறுகளை’ கட்டுப்படுத்துவது முக்கியம். அடுத்து எப்போதைக்குமான தொலைநோக்கு கூறுகளை ஆராய்ந்து சரிசெய்வது முக்கியமானது.

காட்டில் தீப்பிடிக்கும் போது எப்படி, அதற்கு எதிர் திசையில் தீ மூட்டி அணைப்பார்களோ அதைப்போல. இருபுறம் இருந்தும் பிரச்னையை அணுகித் தீர்க்க வேண்டும். பெண்கள் – குழந்தைகள் பாலியல் வல்லுறவு பிரச்னைகளில், எப்போதைக்குமான தீர்வு எவ்வளவு முக்கியமோ, பாதிக்கப்பட்டவர்கள் நலம் எந்தளவு முக்கியமோ, பாதிப்பைத் தரும் காரணிகளை ஆராய்வதும், அதற்கான உடனடித் தடுப்பு முறைகள் பின்பற்றப்படுவதும் அதைவிட அவசியமானது.

வாஸந்தியின் ஒரு நாவலில், திருவிழாவில் சப்பாத்தி மாவில் ஆடு போல் செய்து பலி கொடுப்பார்கள். ‘ஆட்டை வெட்டினால் என்ன, மாவை வெட்டினால் என்ன, இரண்டும் வன்முறைதானே’ என்று ஒருவன் யோசிப்பான். ஆனால், மாவை வெட்டும்போது, மனிதரின் வன்முறை உணர்ச்சி யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ‘பலி’ என்பதன் வன்முறை உணர்ச்சியை மட்டுமே இதில் சொல்கிறேன். சைவ, அசைவ உணவு பற்றியதல்ல இது.

எல்லா உணர்ச்சிகளும் எல்லோரிடமும் இருக்கின்றன. சூழலும் காரணிகளும் ஏற்படும்போது வெளிப்படுகின்றன. மனிதர்களின் வன்முறை உணர்ச்சியை நேர்மறையாக முறைப்படுத்துவதில் தவறும்போது, அது சமூகத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. கத்தியால் காய்கறிகளும் வெட்டலாம்; அறுவை சிகிச்சையும் செய்யலாம்; கொலையும் செய்யலாம் என்பதைப் போல.

நொடி நேர உணர்ச்சித் தடுமாற்றத்தில் நிகழ்பவை ஏராளம். அதற்கு விலையாகக் கொடுப்பது மொத்த வாழ்வை.

இப்போது நாட்டில் நிலவும் வல்லுறவுகளை ஓரளவேனும் கட்டுப்படுத்த, வெளிநாடுகளில் போல இங்கும் செக்ஸ் டாய்ஸ் விற்பனை மிக அவசியம். ஒவ்வொருவரும் தத்தமது பாலியல் தேவையை, மற்றவர்களைப் புண்படுத்தாமல் கண்டுணரவும் இது பயன்படும். பாலியல் வக்கிரங்கள் மட்டுப்பட ஓரளவு உதவக் கூடும்.

ஆனால், செக்ஸ் டாய்ஸ் விற்பனை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. விற்பனை உரிமம் கேட்டு, சட்ட ரீதியாக போராடுவது என்பது விரைவில் செய்யப்பட வேண்டிய அத்தியாவசியமான ஒன்று.

தடுமாறும், தறிகெட்டு நிற்கும் எத்தனையோ வளர்ந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் இது மிகப் பெரிய அவுட்லெட் டாக இருக்கும்.

எப்படி நீதிபதி லீலாசேத் பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டத்தில் 2005இல் கொண்டு வந்த மாற்றம், பெண் குழந்தைகள் கொல்லப்படுவதை மறைமுகமாகத் தடுத்ததோ, அதே போல ‘செக்ஸ் டாய்ஸ்’ விற்பனை என்பது இந்தியாவில் பெண்கள் – ஆண்/பெண் குழந்தைகள் மற்றும் திருநர் மீதான பாலியல் வல்லுறவு கொடூரங்களை கணிசமான அளவில் குறைக்க நிச்சயமாக உதவும்.

எதையும் கேள்வி கேள்!

படைப்பாளர்

பிருந்தா சேது

சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர்.