UNLEASH THE UNTOLD

தேனி – பண்பாடு, வரலாறு, வாழ்வியல்

 வர்ணங்கள் பேசும் போடிநாயக்கனூர் அரண்மனை

மிகுந்த தயக்கத்துடன் அந்த சிறிய தகரக்கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றோம். ஒரு பெரிய மாமரம் காற்றில் அசைந்தாடியபடி எங்களை வரவேற்க, தனது மேல் தோலை ஆங்காங்கே உரித்துக்கொண்டு, எலும்புகள் தெரிய காட்சியளிக்கிறது அந்த…

பாறைகளில் உறைந்து நிற்கும் காலம் - திருக்குணகிரி

தேனி, உத்தமபாளையத்தில் இருந்து கம்பம் செல்லும் சாலையில் சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அந்த சமணர் தளம். எத்தனையோ முறை அங்கு செல்ல முயற்சி செய்திருந்தாலும், ஏனோ அதற்கான வாய்ப்பு கிட்டவேயில்லை. ‘உள்ளே…

குரங்கணி டூ டாப்ஸ்டேஷன் – வரலாற்று வழித்தடம் – 2

ஜான் டேனியல் மன்றோ வேறு யாருமல்ல, திருவிதாங்கூரின் திவானாகப் பணியாற்றிய ஜெனரல் ஜான் மன்றோவின் பேரனும், வனப்பாதுகாப்பு அதிகாரியாக இருந்த அர்பன் விகோர்ஸ் மன்றோ மற்றும் மடில்டா கோல்ஹோஃப் ஆகியோரின் மகனுமே ஜான் டேனியல்…

குரங்கணி டூ டாப்ஸ்டேஷன் – வரலாற்று வழித்தடம் - 1

“மலைகளுக்கு ஆயிரம் கதைகளிருக்கிறது, மலைகளிடமும் ஆயிரம் கதைகளிருக்கிறது” – என்றோ, எங்கோ வாசித்த வரிகள் மனதிற்குள் ஓட, “அட ஆமாம்ல…” எனத் தோன்றுகிறது அந்த மலைகளைப் பார்க்கையில். அந்த அகலம் குறைந்த மலைப்பாதையில் நெளிந்து,…

மங்கலதேவி கண்ணகி கோட்ட வரலாறு - 2

“வரலாற்றில் இதெல்லாம் சகஜம்தானே?” என நினைத்தவளாக, பௌர்ணமிக்கு முதல்நாள் ஞாயிற்றுக்கிழமை தங்கை வீட்டுக்குப் (சின்னமனூர்) போய்விட்டேன். அதிகாலை மூன்று மணிக்குக் கிளம்பி பனிரெண்டு பேர் கொண்ட குழுவாக கூடலூர் சென்றோம். வழக்கமாக கண்ணகி கோவில் போகும்…

 மங்கலதேவி கண்ணகி கோட்ட வரலாறு - 1

“மயினி (மதினி) நீங்க நடக்கனும்னு மனசார நினைச்சீங்கனா, நிச்சயம் நடந்திடுவீங்க, நேத்துப் பொறந்த பச்சப்புள்ளயிலிருந்து பல்லுப்போன தாத்தா வரைக்கும் எல்லா வயசுக்காரங்களும் நடக்குறாங்க தெரியுமா? உங்களால முடியும், எல்லாத்துக்கும் மனசுதான் காரணம்” – ஆண்டில்…

களைகட்டும் வீரபாண்டித் திருவிழா

“வாங்கண்ணே… வாங்க. உங்களுக்காகவே வந்திருக்கு பீமபுஷ்டி அல்வா. ஆரஞ்சு கலர் வேணுமா, பச்சைக்கலர் வேணுமா..? மஞ்சக்கலர் வேணுமா, ஊதாக் கலரு வேணுமா..? பல கலர்ல இருக்குண்ணே… பீமபுஷ்டி அல்வா, சின்னக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுங்கண்ணே……

குலசாமி ஜான் பென்னிகுவிக்

‘கர்னல் ஜான் பென்னிகுவிக் (John Pennycuick)  நினைவு மணிமண்டபம்’ என்ற பெயரைத் தாங்கிக்கொண்டு, அந்த பச்சை நிறக் கட்டிடம் ஒரு வரலாற்று நாயகனுக்கு நன்றி செலுத்தும் விதமாக நின்று கொண்டிருந்தது. பின்னணியில் மனதைக் கவ்வும்…

ஏலம் மணக்கும் போடிமெட்டு

ஸ்ஸ்ஸ்…  மப்ளரை இறுகச் சுற்றிக்கொண்டேன்.  மார்ச் மாத கோடை வெயிலில் தமிழ்நாடே தகதகத்துக் கொண்டிருக்க, எனக்கோ முகத்தில் அறைந்த குளிர்காற்று மூச்சு விடமுடியாமல் நடுக்கியது. நீங்கள் நினைப்பதுபோல  நான் நின்றிருந்தது சிம்லாவோ, மணாலியோ இல்லை….

வரலாற்றில் வருசநாடும் அழநாடும்

மதுரைச்சீமையின் ஒரு பகுதியான அழநாடு, வரலாறு நெடுக  தனது பங்களிப்பை ஈந்து, பயணித்துக் கொண்டே இருந்திருக்கிறது. தமிழர் பண்பாட்டின் முத்திரைகளைத் தாங்கி நிற்கும்  நிலங்களாக தேனி மாவட்டம் முழுமையும் உள்ளது.  தனது நிலத்தினுடைய பண்பாட்டின்,…