பெண்ணியம் பேசும் எழுத்துக்கு நோபல் பரிசு!
ஒருவரின் தனிப்பட்ட அனுபவம் என்று எதுவும் இல்லை. அவர் சார்ந்திருக்கும் வர்க்கமும் இனமும் சமுதாயமும் அரசாங்கங்களும் எடுக்கும் முடிவுகள், நேரடியாகவும் மறைமுகமாகவும் தரும் அழுத்தங்கள், பொது வாழ்வியல்முறை ஆகிய அனைத்தும் தனிநபர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆகவே, தனிநபர் தனது சொந்த அனுபவத்தைப் பேசினாலும், அந்தச் சமுதாயத்தின், வரலாற்றின் பிரதிநிதியாகத்தான் பேசுகிறார். பெண்ணுக்கு இது அதிகமாகப் பொருந்தும்.