UNLEASH THE UNTOLD

பிருந்தா சேது

ஆற்றாமை

“பசங்க பின்னாடியே திரியறியே; உனக்கு வெட்கமாயில்ல?” அனிதா இப்படிக் கேட்டதும், அவளுக்குச் சட்டென்று கண்ணில் நீர்த் துளிர்த்தது. குரல் கம்மியது. வார்த்தைகள் வரவில்லை. “சரி சரி உடனே அழுதுராத. என்ன சொல்லிட்டேன் இப்ப. அவனுங்க…

மயக்கம்

அவளது கையில் நீண்ட தண்டுடன் கூடிய கண்ணாடி மதுக்கிண்ணம். அதில் அவளுக்குப் பிடித்த ‘ஓட்கா காக்டெய்ல்’. செந்நிற மது, விளக்கினொளியில் பளபளத்தது. இப்படி, வருணிக்கப்படுவது மட்டும் அவளுக்குத் தெரிந்தால் அவ்வளவுதான். ‘பிலு பிலு’ என்று…

பலி

கதவு மெள்ளத் திறந்தது. மாலை வெயிலின் குறைந்த வெளிச்சத்தில் அந்தச் சிறிய உருவம் அறைக்குள்ளே வருவது தெரிந்தது. “ம்மா …” லலிதாவின் ஒன்றரை வயது மகன் கோபி, தூங்கிக்கொண்டிருந்தவன் விழித்துவிட்டான் போல. ராஜு பதறி…

விருந்து

“சப்பாத்தி உருட்டுவீங்களா?” இவளை உருட்டச் சொல்லிவிட்டு மகளிடம், “ஏ, குட்டி, சப்பாத்தி போட்டு எடுப்பியா” என்று கேட்டு, அடுப்பைப் பற்ற வைத்துவிட்டு “இதோ வர்றேன்” என்றபடி சுபத்ரா சென்றாள். கல் காய்வதற்குள் இவள், சுபத்ரா…

கொட்டுக்காளி - காலத்தின் கண்ணாடி

பயணங்கள் அப்போதெல்லாம் உல்லாசமாக இருந்ததில்லை. நடந்து நடந்து வலிக்கும் கால்களோடு, களைத்த மனதோடு, பாதையின் முடிவில் அடர் காட்டின் நடுவே ஓடைக்கரையோரம் இருக்கும் மண்டபத்தில் வனப் பூச்சிகளின் ரீங்காரத்தில் எல்லா பிள்ளைகளும் ஒரு மூலையில்…

செருப்பு

‘இந்த மொத்த உலகத்துல, நம்மோட வாழ்க்கைங்கிறது சின்னஞ்சிறிய கண்ணி. எறும்பைவிடச் சின்னது. உலகத்துல நடக்குற எல்லாத்துக்கும், உலகத்தின் மொத்த கன பரிமாணத்துக்கும் நாம மட்டுமே பொறுப்பேத்துக்கிட்டு நம்மளை கஷ்டப்படுத்திக்கக் கூடாது.’

<strong>குரல்கள்</strong>

நானறிந்தவரை, கணவன் மனைவி உறவில், சிலருக்குத் தினம் பார்த்துக்கொள்ளும்படி இருக்க வேண்டும்; சிலருக்கு வாரமொருமுறை, சிலருக்கோ மாதம் ஒருமுறையே போதுமானது; சிலரோ வருடத்திற்கொருமுறை சந்திக்கிற கணவன் மனைவியாக இருந்தால்தான் அந்தத் தாம்பத்யம் நிலைத்திருக்கும்.

விபாஸனா

நான் உலகத்தோடு கலந்ததாக, அப்படி எல்லாம் இல்லை; உலகம் தனியாக அப்படியே இருக்கிறது. நானில்லை. நான் என்பதே இல்லை. ‘நான்’ என்று எவ்வெப்போதும் உணர்ந்து கொண்டிருக்கிற எதுவுமே இல்லை. அந்த உணர்வில், பிடித்தம் பிடிக்காமை, பயம் வெறுப்பு நேசம் எந்த உணர்வுத் தீவிரமும் அதில் இல்லை. எதுவுமே இல்லை. வெறும் ஒரு ஜன்னல் வழி உலகம், ஜன்னலற்றுத் தெரிவது போல. அவ்வளவுதான்.

தைரியசாலியின் பயங்கள் பயங்கரமானவை...

கூச்சம், தயக்கம், பயம் என்கிற உணர்வுகள் ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது; இல்லாவிடில் இத்தனை சுதந்திரம் உள்ளதாக நம்பப்படுகிற ஆண்கள் இந்நேரம் எவ்வளவோ சாதித்திருக்க முடியும்தானே? அந்தத் தயக்கத்தை உடைத்து நம்மிடம் பேசும் நம்பகத் தன்மை வரவும், நம்மை அதைப் பற்றி எல்லாம் உரையாட அனுமதிப்பதுமே பெரும் சவாலாக இருந்தது. கடல் அலைகள் போலத்தான்; ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடுவே உள்ள அலைகளைத் தாண்டிவிட்டால், இருவருமே கடல்தான். ஒத்த உயிரினம்தான்.

ஏமாந்த கதை...

நினைக்கும் போதெல்லாம் அந்த நினைவின் திரும்ப அடைய முடியாத தூரத்திற்குள்
திரும்பத் திரும்ப சிக்கிக்கொள்ள வைக்கிறது.

பாதைகளின் கண்களுக்குத் தப்பிய ஏமாற்றுக்காரர்களோ மறதிக்குள் ஒளிந்து கொள்கிறார்கள் அல்லது ஞாபகமாய் மறந்து விடுகிறார்கள்.