ஆடையா? அறியாமையா? எது சிக்கல்?
குடும்பத்துக்குள்ளேயே இருந்துகொண்டு தங்கள் சொந்தக் குடும்பத்துப் பெண்களுக்கே பாலியல் தொந்தரவுகள் கொடுத்த ஆண்கள் இங்கே இல்லையா?
குடும்பத்துக்குள்ளேயே இருந்துகொண்டு தங்கள் சொந்தக் குடும்பத்துப் பெண்களுக்கே பாலியல் தொந்தரவுகள் கொடுத்த ஆண்கள் இங்கே இல்லையா?
1960களில் காதல் நாவல்களுக்கு வலுவான சந்தை இருக்கும் என்பதைக் கணித்து விட்டவர்கள், இன்னும் அவர்களின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். இருப்பினும் அது புத்தகத்தின் விலையைப் பொறுத்தது. ஆகையால் குறைவான விலைக்குத் தங்கள் நாவல்களை வாசகர்களிடம் சேர்க்கக் கெட்டி அட்டைகளிலிருந்து மெல்லிய காகித அட்டைகளில் புத்தகங்களை அச்சிட்டு வெளியிடத் தொடங்கினார்கள். மேலும் கண்களைக் கவரும் அழகான காதல் ஜோடிகளைக் கொண்ட அட்டைப் படங்களை வடிவமைத்தார்கள். இது போன்ற உத்திகள் மூலமாக வாசகர்களைக் கவர்ந்து விற்பனைகளையும் பெருக்கினார்கள்.
குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் ஒரு தனிநபர் பிரச்னையோ அல்லது அந்தக் குழந்தையின் குடும்பம் சார்ந்த பிரச்னையோ மட்டுமல்ல. இது ஒட்டுமொத்த சமுதாயம் சார்ந்த ஒரு பொதுவான பிரச்னை. இதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டுத்தான் தீர்வு காண வேண்டும். குழந்தைகளுக்கு இனிமையான நினைவுகளை மட்டுமே நாம் பரிசளிக்க வேண்டும். அது மிகவும் முக்கியமானது. ஏனெனில் அவர்கள்தாம் நாளைய இந்தியத் தூண்கள். அவற்றை உளுத்துப் போனதாக வளர்க்கக் கூடாது. குழந்தைகளுக்கு என்று ஓர் உலகம் இருக்கிறது. அது அமைதியாக, அழகாக இருப்பது மிகவும் அவசியம்.
கூட்டாஞ்சோறு தினத்தில் ‘தோழி போடுதல்’ என்ற இன்னொரு சுவையான நிகழ்வும் நடக்கும். பத்துப் பன்னிரண்டு வயது சிறுமிகள் இருவர் அன்று மாலை வெற்றிலை பாக்கு வாங்கி வந்து இருவரும் போட்டுக் கொள்வார்கள். பிறகு ஒருவருக்கொருவர் கைகளைப் பற்றிக்கொண்டு, ‘நம்ம ரெண்டு பேரும் இன்னையிலயிருந்து தோழிகள்’, எனச் சொல்லிக் கொள்வார்கள். அதிலிருந்து அப்படித் தோழி போட்ட இருவரும் எப்போதுமே ஒருவரையொருவர் தோழி என்றுதான் அழைத்துக் கொள்வார்களே தவிர, பெயரைச் சொல்லி அழைப்பதில்லை.
பெரும்பாலான மேலை நாடுகள் போல இந்தியாவில் Age Discrimination-க்கு எந்தச் சட்டமும் இன்னும் இயற்றப்படவில்லை. இப்படி ஓர் ஒடுக்குமுறை இருக்கிறது என்பது குறித்தான வெளிப்படையான பேச்சுகூட நம் சமுதாயத்தில் எழுவதாகத் தெரிவதில்லை. காரணம், பெண்களைக் கலாச்சாரத்துடன் தொடர்புபடுத்தி வைத்துள்ளது போலவே வயதையும் கலாச்சாரத்துடன் தொடர்புபடுத்தி வைத்துள்ளனர். நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் பெரியவர்களை மதிக்கக் கற்று இருப்பார்கள். நல்ல கலாச்சாரம் உள்ள குடும்பத்தில் பிறந்தவர்கள் பெரியவர்கள் சொல் கேட்டு நடக்கக் கற்றுக் கொடுக்கப்பட்டு இருப்பார்கள் என வழக்கமான கலாச்சார பூச்சாண்டிகளை வைத்து இந்தச் சமுதாயம் நம்மைக் கட்டிப்போட்டு வைத்து விடுகிறது.
இரண்டு பேரும் ஆசை ஆசையாய் நெய் ஒழுகிக் கொண்டிருந்த கேசரியை எடுத்து வாய் கொள்ளாமல் அடக்கினார்கள். அவன் மெதுவாக அவர்கள் முன்னாலேயே பேன்ட்டை உருவி சுவரை ஒட்டி இருந்த கொடியில் போட்டான். சட்டையைக் கழற்றினான். வெறும் ஜட்டியோடு நின்றான்.
சென்ற தலைமுறைவரை மிக மிக மோசமான பொருளாதார நிலையில் இருந்தவர்கள் சற்று மேம்பட்டு இருக்கிறார்கள் என்று சொல்லலாமே ஒழிய, 75% பேர் பொருளாதார தன்னிறைவு அடைந்துவிட்டார்கள் என்பது முற்றிலும் அபத்தமான பார்வை.
பொதுவாக ஒருவரை அறிவாளி, புத்திசாலி என்று புகழும்போது நாம் குறிப்பிடுவது அவரது அறிவு கூர்மையை மட்டுமே. எத்தனையோ பெற்றோர் மொழிப் பாடத்தில் அதிக மதிப்பெண் வாங்கினாலும் கணக்கிலும், அறிவியலிலும் முழு மதிப்பெண் வாங்காத குழந்தையை அறிவாளி என்று ஒத்துக்கொள்வது இல்லை.
பிழைக்க வழியே இல்லாமல், பார்ப்பனப் பிணம் தூக்குவதையே முழுநேர தொழிலாகச் செய்த பார்ப்பனர்கள் ஏராளம் உண்டு. ஒரு வேளை உணவுக்கும் பிள்ளைகளை படிக்கவைக்கவுமே இதையெல்லாம் செய்தார்கள்.
அவரவர்களின் தளங்களில் படிக்கவென்று உருவாகிய வாசகர் வட்டங்கள் மூலமாக நாளடைவில் சிலர் பணம் ஈட்டவும் செய்தனர். கூகிள் ஆட் சென்ஸ் (Google adsense) பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். தளங்களில் வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தும், அதில் வரும் விளம்பரங்களின் சொடுக்குகளைப் பொறுத்தும் அத்தளங்களுக்கு டாலர்கள் வரும். அவற்றின் எண்ணிக்கை நூறு டாலர்களைத் தொடும் போது அது அந்த இணையத்தளத்தின் உரிமையாளரின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.