UNLEASH THE UNTOLD

   

 கம்போடியாவில் ஆட்சி செய்த 30 மன்னர்களின் பெயர்களில் ‘வர்மன்’ என்கிற பெயர் தொட்டுக்கொண்டிருப்பது, தமிழின வழித் தோன்றலான நந்திவர்மனைக் குறிப்பிடும் பெயர் என்கிற கருத்தும் உள்ளது. பல்லவர்களுக்குப் பிறகு வந்த சோழர்கள் காலத்திலும் இரு நாடுகளுக்குமிடையே தொடர்பு நீடித்தது. தமிழகத்தில் சிதம்பரம் நகரில் சிவனுக்குப் பெரிய கோயில் கட்டியபோது, அந்தக் கோயில் சுவரில் வைப்பதற்காக கம்போடியாவில் இருந்து அழகிய பெரிய கல் ஒன்றை நினைவுச் சின்னமாக அந்த நாட்டு மன்னர் சிதம்பரம் கோயிலுக்கு அனுப்பி வைத்த அரிய நிகழ்வும் நடைபெற்றுள்ளது.           

ஏழாம் அறிவு

கற்றலும், எடுத்துக் கொள்ளும் குறிப்பிட்ட பயிற்சியும், அறிவாற்றலும் தனிநபரை மட்டுமே சார்ந்ததே தவிர, அது மரபணுக்களில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது. மாறாகச் சுற்றுச்சூழலும், உணவு பழக்கவழக்கங்களும், கன உலோகங்கள், கதிர்வீச்சுகள், நச்சுகள் முதலியவற்றைத் தொடர்ந்து எதிர்கொள்வதும் தாயனையில் பிறழ்வுகள் ஏற்படுத்தலாம். அதனால் புற்றுநோய் போன்ற நோய்களும் வரலாம்.‌ அது அடுத்த தலைமுறையினரைப் பாதிக்கவும் செய்யலாம்.

XXL சைஸில் தொடரும் பிரச்னைகள் (3)

சில பெற்றோர் குண்டாக இருக்கும் பெண் குழந்தைக்குத் தேவையான அளவு உணவைக் கொடுக்காமல், குறைவாகக் கொடுப்பார்கள். ஆனால், எங்கே அதிகம் சாப்பிட்டால் இன்னும் குண்டாகி விடுவோமோ என நினைத்து அதையும் சரியாகச் சாப்பிடாமல், பாதிச் சாப்பாட்டை என் தட்டில் கொட்டிய பள்ளித் தோழியை இப்போது என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

மோதி மிதித்து விடு பாப்பா!

துர்கா மிஸ்ஸை எல்லோருக்கும் பிடிக்க இதுவும் ஒரு காரணம். ஏதோ வந்தோம், பாடம் எடுத்தோம், சென்றோம் என்று இல்லாமல் எல்லோருக்கும் புரியும் விதத்தில் நடந்த வேண்டும் என்பதில் கண்ணாக இருப்பவள். அது பாடமாக இருந்தாலும் சரி, பாரதியார் கவிதையாக இருந்தாலும் சரி. அதே நேரத்தில் பெண்களாகச் சமூகத்தில் நாளை அவர்கள் சந்திக்கப் வேண்டியவற்றிற்கும் அவர்களைத் தயார்படுத்துவதும் தன் கடமை என்று நினைத்துக் கொண்டாள்.

மதன மோகினி

ஆதி முதலானவா என வரும் பிள்ளையார் சதுர்த்தி விழா ஆடல் மிகவும் அழகாக இருக்கிறது. நான் பார்த்தவரை இது தான் சினிமாவில் முதல் பிள்ளையார் சதுர்த்தி நடனம். 

அமெரிக்காவின் முதல் தொழில்முறைப் பெண் வானவியலாளர் மரியா மிட்செல்

மரியா மிட்செல் வாசார் கல்லூரியில் பதவி ஏற்ற பிறகு, தொழில்முறை வானியலாளராகவும் வானியல் பேராசிரியராகவும் பணிபுரிந்த முதல் சர்வதேசப் பெண்மணி. 1865ஆம் ஆண்டில் அவர்  அமெரிக்கக் கலை மற்றும் அறிவியல் அகாடமி மற்றும் அறிவியல் முன்னேற்றத்திற்கான அமெரிக்க சங்கத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி.

இசை எதைத் தேர்ந்தெடுத்தாள்?

தன்னுடைய தேவை என்ன என்கிற தெளிவும் தீர்வும்தான் இலக்கே தவிர அது தான் யோசித்த வழியில் மட்டுமே இருக்க வேண்டும் என்கிற பிடிவாதம் இல்லா நெகிழ்வுத் தன்மை, எதிரில் இருப்பவரையும் சவாலுக்குள் சேர்த்துக் கொள்ளும் அறிவுத்திறன், எந்தச் சூழ்நிலையிலும் வேலையைவிடப் போவதில்லை என்கிற திட சிந்தனையும், அதை வெளிப்படுத்தத் தயங்காத திட மனதும் எல்லாம் சேர்ந்துதான் இசையின் வெற்றிக்குக் காரணம்.

வரலாற்றில் கம்போடியா

கம்போடியாவில் 2009இல் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழாய்வு முடிவுகள், கம்போடியாவின் வரலாற்றை கற்காலத்துக்கு  எடுத்துச் சென்று, இப்பகுதியில் கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பு மட்பாண்டங்கள் தயாரித்து பயன்படுத்திய மனிதர்கள் வாழ்ந்திருக்க வேண்டும் என்று கூறுகிறது. கற்கால வேட்டைக்குழுக்கள் முதல் ஒழுங்கமைக்கப்பட்ட சமூகங்கள் வரையிலான மனித நாகரிக வளர்ச்சியின் சான்றுகள் அகழ்வாய்வின் முடிவில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

சாதிக்குள் முடங்கும் பாரம்பரியக் கலை

பாரம்பரியத்தைச் சந்ததிகள் தெரிந்து கொள்ளும் வகையிலும், பொழுதுபோக்காகவும் ஆடப்பட்டு வந்த இந்த வள்ளிக் கும்மி இப்போது சாதிப் போர்வைக்குள் சிக்குண்டு கிடக்கிறது. கடந்த இரண்டு வருடங்களில்தான் இந்த வள்ளிக் கும்மி எழுச்சி பெற்றிருக்கிறது. இது பண்பாடு, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை மீட்டெடுக்கும் முயற்சி என்கிற பெயரில் இளைய தலைமுறையினர் நெஞ்சில் நஞ்சை விதைப்பதாகவே இருக்கிறது. மட்டுமன்றி சுய சாதிப் பெருமிதத்தை அவர்களிடம் ஏற்படுத்துவதே இதன் நோக்கமாக இருக்கிறது. ஏனெனில் இப்போது முகநூலில் சாதிப் பெயர், குலப் பெயர் தாங்கிய இளையோர்களின் முகநூல் கணக்குகள் பல்கிக் கிடப்பதைப் பார்க்கிறோம்.

காதல் கணக்கெடுப்பு

இதிகாசங்களில் வருவது போல் இங்கு ராமர்களும் இல்லை; சீதைகளும் இல்லை. அதுவே இயற்கையின் நியதி. யாரும் இங்கே அக்கினி பிரவேசம் செய்யவும் தேவையில்லை.