UNLEASH THE UNTOLD

பெண் ஏன் அடிமையானாள்?

தந்தை பெரியாரின் ’பெண் ஏன் அடிமையானாள்?’ என்கிற இந்தப் புத்தகத்தைப் படிக்கும் பொழுதுதான் பெண் எப்படி அடிமையாக்கப்பட்டாள் என்பது புரிகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட புத்தகம் ’பெண் ஏன் அடிமையானாள்?’ இன்று வரை அந்தப் புத்தகத்தைப் பற்றிப் பேசிக் கொண்டு இருக்கிறோம், அந்தப் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு தரப்பினர் எப்படி அன்று எதிர்தார்களோ அப்படியே இன்றும் எதிர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.

போதும் பொண்ணு

போதும்பொண்ணுவின் மனதுக்குள் தோன்றியது. “டீச்சர் சொன்னது பொய், ஒரு நாளும் ஆம்பளயும் பொம்பளயும் சமமே கிடையாது, சமமாகவே முடியாது.”

நமது உணர்வுகளைத் தெளிவாகப் புரிந்துகொள்வது எப்படி?

நாம் கனவு காணும் சமமான சமுதாயத்தில் இது இல்லாமல் போகும்.  சிக்கலான மனம் இரு பாலருக்கும் ஒன்றுதான். மனம் சிக்கலானது எனில் அதில் பிறக்கும் உணர்வுகளும், அதனால் நமக்குள் எழும் மாற்றங்களும்கூட அப்படித்தான். ஒரே நிகழ்விற்கு வெவ்வேறு நபர்களிடம் நாம் வெவ்வேறு விதமாக நடந்து கொள்ளலாம், வெவ்வேறு நேரத்தில் ஒரே நபரிடம்கூட நாம் அதே விதமாக நடந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. ஏனெனில் “அது போன வாரம், இது இந்த வாரம்.“

முத்துக்குட்டி முதல் அய்யா வைகுண்டர் வரை - 1

சம காலத்தில், இந்தியாவில், பாபர் மசூதி, ராமர் கோயிலாக மாறிய சரித்திர அவமான நிகழ்வு அரங்கேறியது. ரத்தம் தோய்ந்த அச்சரித்திர நிகழ்வுக்கு, சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாமே சாட்சி.

ஆடையா? அறியாமையா? எது சிக்கல்?

குடும்பத்துக்குள்ளேயே இருந்துகொண்டு தங்கள் சொந்தக் குடும்பத்துப் பெண்களுக்கே பாலியல் தொந்தரவுகள் கொடுத்த ஆண்கள் இங்கே இல்லையா?

5. மில்ஸ் அன் பூன் நாயகர்கள்

1960களில் காதல் நாவல்களுக்கு வலுவான சந்தை இருக்கும் என்பதைக் கணித்து விட்டவர்கள், இன்னும் அவர்களின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். இருப்பினும் அது புத்தகத்தின் விலையைப் பொறுத்தது. ஆகையால் குறைவான விலைக்குத் தங்கள் நாவல்களை வாசகர்களிடம் சேர்க்கக் கெட்டி அட்டைகளிலிருந்து மெல்லிய காகித அட்டைகளில் புத்தகங்களை அச்சிட்டு வெளியிடத் தொடங்கினார்கள். மேலும் கண்களைக் கவரும் அழகான காதல் ஜோடிகளைக் கொண்ட அட்டைப் படங்களை வடிவமைத்தார்கள். இது போன்ற உத்திகள் மூலமாக வாசகர்களைக் கவர்ந்து விற்பனைகளையும் பெருக்கினார்கள்.

பூக்களைப் பறிக்காதீர்கள்...

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் ஒரு தனிநபர் பிரச்னையோ அல்லது அந்தக் குழந்தையின் குடும்பம் சார்ந்த பிரச்னையோ மட்டுமல்ல. இது ஒட்டுமொத்த சமுதாயம் சார்ந்த ஒரு பொதுவான பிரச்னை. இதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டுத்தான் தீர்வு காண வேண்டும். குழந்தைகளுக்கு இனிமையான நினைவுகளை மட்டுமே நாம் பரிசளிக்க வேண்டும். அது மிகவும் முக்கியமானது. ஏனெனில் அவர்கள்தாம் நாளைய இந்தியத் தூண்கள். அவற்றை உளுத்துப் போனதாக வளர்க்கக் கூடாது. குழந்தைகளுக்கு என்று ஓர் உலகம் இருக்கிறது. அது அமைதியாக, அழகாக இருப்பது மிகவும் அவசியம்.

சுடச்சுட நோன்புக் கஞ்சி, கண்ணாடி வளையல்கள்

கூட்டாஞ்சோறு தினத்தில் ‘தோழி போடுதல்’ என்ற இன்னொரு சுவையான நிகழ்வும் நடக்கும். பத்துப் பன்னிரண்டு வயது சிறுமிகள் இருவர் அன்று மாலை வெற்றிலை பாக்கு வாங்கி வந்து இருவரும் போட்டுக் கொள்வார்கள். பிறகு ஒருவருக்கொருவர் கைகளைப் பற்றிக்கொண்டு, ‘நம்ம ரெண்டு பேரும் இன்னையிலயிருந்து தோழிகள்’, எனச் சொல்லிக் கொள்வார்கள். அதிலிருந்து அப்படித் தோழி போட்ட இருவரும் எப்போதுமே ஒருவரையொருவர் தோழி என்றுதான் அழைத்துக் கொள்வார்களே தவிர, பெயரைச் சொல்லி அழைப்பதில்லை.

வயதானவர்கள் இதைப் படிக்க வேண்டாம்… 

பெரும்பாலான மேலை நாடுகள் போல இந்தியாவில் Age Discrimination-க்கு எந்தச் சட்டமும் இன்னும் இயற்றப்படவில்லை. இப்படி ஓர் ஒடுக்குமுறை இருக்கிறது என்பது குறித்தான வெளிப்படையான பேச்சுகூட நம் சமுதாயத்தில் எழுவதாகத் தெரிவதில்லை. காரணம், பெண்களைக் கலாச்சாரத்துடன் தொடர்புபடுத்தி வைத்துள்ளது போலவே வயதையும் கலாச்சாரத்துடன் தொடர்புபடுத்தி வைத்துள்ளனர். நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் பெரியவர்களை மதிக்கக் கற்று இருப்பார்கள். நல்ல கலாச்சாரம் உள்ள குடும்பத்தில் பிறந்தவர்கள் பெரியவர்கள் சொல் கேட்டு நடக்கக் கற்றுக் கொடுக்கப்பட்டு இருப்பார்கள்  என வழக்கமான கலாச்சார பூச்சாண்டிகளை வைத்து இந்தச் சமுதாயம் நம்மைக் கட்டிப்போட்டு வைத்து விடுகிறது.