கொச்சின் அரசு (Kingdom of Cochin)
பெரும்படப்பு சுவரூபம் என அறியப்பட்ட கொச்சி, 12வது நூற்றாண்டில் சேரர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு தன்னாட்சி பெற்றது. வாஸ்கோடகாமா வந்து இறங்கிய காலகட்டத்தில், கொச்சி அரசு, சமோரின் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. சமோரின் ஆட்சியிலிருந்து விடுதலை பெற எண்ணிய கொச்சி அரசர் போர்த்துக்கல்லுடன் உடன்படிக்கை செய்து கொண்டார்.
1503-ம் ஆண்டு, கொச்சி, ‘protectorate of the Portuguese East India’ என ஆனது. அதாவது போர்த்துக்கேய அரசு, கொச்சி அரசுக்குப் பாதுகாப்பு வழங்கியது. எதுவும் சும்மா வருவதில்லை. பதிலுக்கு கொச்சி பல அதிகாரங்களை வழங்கியது.
அரேபிய கடலின் முத்து என சொல்லுமளவிற்கு கொச்சி மீது ஐரோப்பியருக்குக் கண் இருந்தது. அது அவர்களுக்குள் பெரும் போட்டியை ஏற்படுத்தியது. ஏழாம் நூற்றாண்டில், கோழிக்கோட்டில் (சமோரின் அரசு) இருந்த காலகட்டத்தில் வாஸ்கோடகாமா வந்து இறங்கினார். அப்போது கொச்சி அரசு, சமோரின் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. சமோரின் ஆட்சியிலிருந்து விடுதலை பெற எண்ணிய கொச்சி அரசர் போர்த்துக்கல்லுடன் உடன்படிக்கை செய்து கொண்டார். 1503-ம் ஆண்டு, கொச்சி, ‘protectorate of the Portuguese East India’ என ஆனது. அதாவது போர்த்துக்கேய அரசு, கொச்சி அரசுக்குப் பாதுகாப்பு வழங்கியது. எதுவும் சும்மா வருவதில்லை. பதிலுக்கு கொச்சி பல அதிகாரங்களை வழங்கியது.
பின், 1663-ம் ஆண்டு டச்சுக் கிழக்கிந்திய நிறுவனம் பாதுகாப்பு வழங்கியது..
மைசூர் மன்னர் திப்பு சுல்தான் கொச்சி மற்றும் திருவாங்கூர் மீது படையெடுத்த போது இங்கிலாந்து உதவியது. பதிலுக்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. டச்சுக்காரர்களுடனான ஒப்பந்தம் 1814-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இப்போது ஆங்கில கிழக்கிந்திய நிறுவனம் பாதுகாப்பு வழங்கியது. 1817-ம் ஆண்டு வரை கொச்சி தன்னாட்சிகொண்டு இருந்தது.
துணைப்படைத் திட்டத்தின் கீழ் அரசு, 1818-ம் ஆண்டு முதல், ஆங்கிலேய அரசுக்கு கட்டுப்பட்டு, ஆண்டுதோறும் திறை செலுத்தும் அரசானது. விடுதலைக்குப் பின்னும் 6 ஏப்ரல் 1949 வரை இந்தியாவுடன் இணையவில்லை. 1956-ஆண்டின் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ், இப்போது கேரளா மாநிலத்தில் உள்ளது.
கொச்சின் அஞ்சல் என ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் எழுதிய அஞ்சல்தலைகள், 1892 முதல் வெளிவந்துள்ளன. Pies என பணம் குறிப்பிடப் படுகிறது.
1898-1905 காலக்கட்டத்தில், கொச்சின் அஞ்சல் (COCHIN ANCHAL) என்று பொறிக்கப்பட்ட வெவ்வேறு எண் வடிவமைப்புகள் வெளியிடப்பட்டன. என்னிடம் ஒன்று மட்டும் உள்ளது.
1911-ம் ஆண்டு முதலாம் ராமவர்மா அஞ்சல் தலையை கொச்சின் அரசு வெளியிட்டது. இவர், 1615–1624 காலகட்டத்தில் கொச்சின் அரசு, போர்ச்சுக்கீசிய அரசுடன் இணைந்திருந்த காலகட்டத்தில் மன்னராக இருந்தவர். Overprint அஞ்சல்தலைகள் பிற்காலத்தில் வெளியிடப்பட்டவை.
1923-ம் ஆண்டு முதலாம் ரவிவர்மாவின் அஞ்சல் தலையை கொச்சின் அரசு வெளியிட்டது. இவர், 1650–1656 காலகட்டத்தில் காலகட்டத்தில் மன்னராக இருந்தவர். கொச்சின் அரசு அப்போது போர்ச்சுக்கீசிய அரசுடன் இணைந்திருந்தது. Overprint அஞ்சல்தலைகள் பிற்காலத்தில் வெளியிடப்பட்டவை.
1933-ம் ஆண்டு மூன்றாம் ராமவர்மாவின் அஞ்சல் தலையை கொச்சின் அரசு வெளியிட்டது. இவர், 1721–1731 காலக்கட்டத்தில் மன்னராக இருந்தவர். Overprint அஞ்சல்தலைகள் பிற்காலத்தில் வெளியிடப்பட்டவை.
1943-ம் ஆண்டு மன்னர் கேரள வர்மா அஞ்சல் தலையை கொச்சின் அரசு வெளியிட்டது. Overprint அஞ்சல்தலைகள் பிற்காலத்தில் வெளியிடப்பட்டவை.
1947-ம் ஆண்டு மன்னர் ராமவர்மா அஞ்சல் தலையை கொச்சின் அரசு வெளியிட்டது.
இது 1948-ம் ஆண்டு வெளியான அஞ்சல்தலை.
ஜூலை 1, 1949 அன்று, இது திருவிதாங்கூர்-கொச்சின் என்ற ஒருங்கிணைந்த மாநிலத்தின் ஒரு பகுதியானது. ஆனாலும் கொச்சி அஞ்சல்தலைகள், இந்தியாவுடன் இணையும்வரைத் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்தன.
***
திருவிதாங்கூர் (Kingdom of Thiruvithamkoor/ Kingdom of Travancore)
இது, கேரள மாநிலத்தின் தென்பகுதிகளையும், தமிழ் நாட்டின், கன்னியாகுமரி, மாவட்டத்தையும் உள்ளடக்கியிருந்த ஒரு அரசு.
ஓரிரு ஆண்டுகளுக்கு முன் குளச்சல் சென்றபோது பார்த்த தூண் இது.
இந்தப் போர் குறித்து, சக்தி மீனா எழுதும் அய்யா வழி அறிவோம் தொடரின் இப்பகுதி சொல்கிறது. வாய்ப்பிருப்பவர்கள் இத்தொடர் முழுவது வாசித்தால், திருவிதாங்கூர் பகுதியின் ஆட்சி முறையைப் புரிந்து கொள்ளலாம்.
பால மார்த்தாண்டவர்மா (1728-1758) வலிமையான அரசராக இருந்திருக்கிறார். ஐரோப்பியர்கள் பல இடங்களில் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டியிருந்த காலகட்டத்தில், இவரது நாட்டில் வணிகர்களாக மட்டுமே இருந்திருக்கின்றனர். டச்சுக்காரர்கள் நடத்திய தாக்குதலில் கூட (குளச்சல் சண்டை) பால மார்த்தாண்ட வர்மா தான் வெற்றி பெற்றிருக்கிறார்.
கார்த்திகைத் திருநாள் இராமவர்மா (தர்மராஜா) திருவிதாங்கூரின் முதல் அரசர். கி.பி 1758 முதல் 1798-ம் ஆண்டு வரை அரசாட்சி செய்தார். குளச்சல் போர் நடந்த நாள், 31 ஜூலை 1741 என்கிறது இணையம். அப்படியென்றால் அந்தப் போரை நடத்திய பால மார்த்தாண்டவர்மா (1728-1758) மன்னரின் அரசிற்கு ஒரு பெயர் இருந்திருக்குமல்லவா. அதைப்போடாமல், போர் முடிந்தபின்னர் உருவான அரசின் பெயர் ஏன் தூணில் உள்ளது? போன்ற கேள்வி தூணைப் பார்க்கும்போது எழுந்தன.
1791-ம் ஆண்டு, மைசூர் மன்னன் திப்புசுல்தான், திருவிதாங்கூர் மீது படை எடுத்தார். திருவிதாங்கூர் ஆங்கிலேயரின் உதவியை நாடியது. இது ஆங்கிலேய தலையீட்டிற்கு வழி வகுத்தது.
ஆங்கிலேய ஆட்சியாளர்கள் கொண்டு வந்த இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் 1818-ம் ஆண்டு முதல், அரசு ஆங்கிலேய இந்திய அரசிற்குக் கப்பம் கட்டும் அரசானது.
ஆங்கில அரசு, இந்தியாவிற்கு விடுதலை அளிக்க முடிவு செய்த போது, திருவிதாங்கூர் திவான் (முதல் மந்திரி) சி.பி. ராமசாமி, திருவிதாங்கூர் ஒரு சுதந்திர நாடாக இருக்கும் என அறிவித்தார். புன்னப்பரா – வயலாறு (1946) புரட்சி போன்று, பல இடங்களில் புரட்சி ஏற்பட்டது. திவானின் உயிருக்கு ஆபத்து ஏற்படவே. P.G.N.உன்னித்தான் திவான் ஆனார். திருவிதாங்கூர், கொச்சியுடன் இணைந்து திருவிதாங்கூர்-கொச்சி அரசு என ஆனது. பின் இந்திய விடுதலைக்குப் பின்னர் கடைசி அரசர் சித்திரைத் திருநாள் பலராம வர்மன், இந்தியாவுடன் இணைய ஒப்புக் கொண்டார். திருவிதாங்கூர், இந்தியாவுடன் 7 ஏப்ரல் 1949 அன்று இணைந்தது. மன்னர் புதிய மாநிலத்தின் ‘ராஜப்பிரமுக்’ ஆகப் பதவி ஏற்றார்.
திவான் (முதல் மந்திரி) சி.பி. ராமசாமி பிற்காலத்தில், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றினார். ஒரே நேரத்தில் இரண்டு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராக செயல்பட்ட முதல் இந்தியர் இவரே!
திருவிதாங்கூரின் முதல் அஞ்சல் தபால் தலைகள் 1888-ம் ஆண்டு, ஆறாம் ராம வர்மாவின் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்டன. சக்கரம், கேஷ் (cash) எனப் பணத்தின் பெயர் இருந்திருக்கிறது.
1930-ம் ஆண்டு, திருவிதாங்கூர் அரசு பல அஞ்சல் தலைகளை வெளியிட்டது. அவை பெரும்பாலும் overprint செய்யப்பட்டவை.
1933-ம் ஆண்டு, திருவிதாங்கூர் அரசு வெளியிட்ட அஞ்சல் தலை
1937-ம் ஆண்டு, திருவிதாங்கூர் அரசு வெளியிட்ட அஞ்சல் தலை
1947-ம் ஆண்டு, திருவிதாங்கூர் அரசு வெளியிட்ட அஞ்சல் தலை
1949-ம் ஆண்டு, திருவிதாங்கூர் அரசு வெளியிட்ட அஞ்சல் தலை
பல்வேறு காலக்கட்டங்களில் திருவிதாங்கூர் அரசு வெளியிட்ட அஞ்சல் தலைகள்.
தொடரும்…
படைப்பாளர்

பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது. தற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.





Fantastic information… Congratulations