இந்தியாவிற்கு வரப் புதிய வழியைக் கண்ட போர்ச்சுகல் நாட்டின், வாஸ்கோட காமா, இன்றைய கேரளாவின் கள்ளிக்கோட்டையில் வந்திறங்கினார். அதன் தொடர்ச்சியாக, சில இடங்களைப் போர்த்துக்கீசியர் கைப்பற்றினர். 

போர்த்துக்கீசிய இந்திய அரசு 1505இல் கொச்சியில் தனது முதல் வைஸ்ராயை நியமித்தது. அது Estado da Índia எனப்பட்டது. அதற்கு State of India என்பது பொருள். 1510 முதல் கோவா இந்த அரசின் தலைநகரானது. 1752ஆம் ஆண்டு வரை தெற்கு ஆப்பிரிக்காவிலிருந்து தெற்கு ஆசியா வரை பரவியிருந்த போர்த்துகீசிய குடியேற்றங்களுக்கு இதுதான் தலைமை இடமாக இருந்தது. பின் தான் பல அரசுகள் தனியாகப் பிரிந்தன. கோவாவைப் பார்த்தால் லிஸ்பனைப் (போர்ச்சுகல்லின் தலைநகரம்) பார்க்க வேண்டும் என்ற அளவிற்கு அவர்களின் தாக்கம் இங்கு இருந்திருக்கிறது. கோவா பெரிய வணிகத்தளமாகவும்  இருந்திருக்கிறது. 

போர்த்துக்கீசிய அரசின் பணமாக Reis மற்றும் Tanga இருந்து இருக்கிறது; பிற்காலத்தில் (1950) RS என்பதும் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது என்பது அவர்கள் வெளியிட்ட அஞ்சல்தலைகளின் மூலம் அறிய முடிகிறது. அஞ்சல் தலைகளில் இருக்கும் correos என்ற சொல்லுக்கு அஞ்சல் (mail) என்பது பொருள்.

1510 இல் பழைய கோவாவை கைப்பற்றியவுடன் வைஸ்ராய் மற்றும் லிஸ்பனில் உள்ள நீதிமன்றத்திற்கு இடையேயான தகவல் தொடர்பு மூலம் போர்ச்சுக்கீசிய இந்திய அஞ்சல் வரலாறு தொடங்குகிறது. மிஷனரி அருள்தந்தையர் பல கடிதங்கள் எழுதியுள்ளார்கள். அவை ஆவணப்படுத்தப் பட்டுள்ளன. 

போர்த்துகீசிய இந்தியாவின் முதல் அஞ்சல் தலைகள், அக்டோபர் முதலாம் நாள் 1871 ஆம் ஆண்டு, வெளியிடப்பட்டது. 

1880 போர்சுக்கீசிய இந்திய அரசு, போர்த்துகீசிய மகுடம் (Portuguese Crown) அஞ்சல்தலைகள் வெளியிட்டது. என்னிடம் அவற்றுள் ஒன்று என்னிடம் உள்ளது.

இது போர்சுக்கீசிய இந்திய அரசு 1922 வெளியிட Surcharged அஞ்சல்தலை. சர்சார்ஜ் என்பது மதிப்பை மாற்றுவதற்காக செய்யப்படும் முத்திரை. Surcharged is a mark printed on a postage stamp changing its value.

போர்ச்சுக்கீசிய இந்திய அரசு, 1931ஆம் ஆண்டு புனித சவேரியாரை (Francis Xavier) நினைவுகூரும் விதமாக அஞ்சல்தலைகள் வெளியிட்டது. அந்த ஆண்டு, அவரின் பிறந்தநாளான டிசம்பர் மூன்று அன்று கோவாவில் நடைபெற்ற புனித பிரான்சிஸ் சவேரியார் கண்காட்சியை (St. Francis Xavier Exposition) முன்னிட்டு இவை வெளியிடப்பட்டன. 

அவரது உடல் வைக்கப்பட்டிற்குக்கும் Bom Gesu / Basílica do Bom Jesus கோவில், அவரது கையெழுத்து போன்றவை இவற்றில் பொறிக்கப்பட்டன. 

சுருக்கமாகச் சொல்லப்போனால், சவேரியார், இந்தியாவின் கீழ் ‘V’ பகுதியான கடற்கரை மற்றும் அதன் அண்டை உள்நாட்டுப் பகுதி முழுவதும் பயணப்பட்டவர். இப்பகுதியின் சமகால வரலாற்றுடன் பின்னிப் பிணைந்தவர்.

1933ஆம் ஆண்டு, போர்சுக்கீசிய இந்திய அரசு, Sao Gabriel அஞ்சல்தலைகள் வெளியிட்டது. Sao Gabriel என்பதற்கு Saint Gabriel என்பது பொருள். இந்தப் பெயருள்ள கப்பலில்தான் இந்தியா வந்தார். 

கபிரியேல் தேவதூதரைப் பற்றிய குறிப்பு விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில், தானியேல் நூலில் உள்ளது. 

திருமுழுக்கு யோவான் மற்றும் இயேசு கிறிஸ்துவின் பெற்றோர்களுக்கு அவர்களின் பிறப்பை முன் அறிவித்தவர் என இவரைப் புதிய ஏற்பாடு சொல்கிறது.

ஜிப்ரீல் என்று அழைக்கப்படும் இவர் தான் இறைவனின் செய்தியை அவரின் தூதுவர்களான நபிமார்களுக்கு கொண்டு செல்பவர் என குர்ஆன் குறிப்பிடுகின்றது. குர்ஆன் இவர் மூலமாகவே முகமது நபிக்கு அருளப்பட்டது என்பது இசுலாமிய நம்பிக்கை.

1938 ஆம் ஆண்டு. போர்சுக்கீசிய இந்திய அரசு, ஜோவாகிம் அகஸ்டோ மௌசினோ டி அல்புகெர்கி (Joaquim Augusto Mouzinho de Albuquerque) அஞ்சல்தலை வெளியிட்டது. இவர் ஒரு போர்த்துகீசிய குதிரைப்படை அதிகாரி. 

1950 ஆம் ஆண்டு. போர்சுக்கீசிய இந்திய அரசு, Ano Santo அஞ்சல்தலைகள்  வெளியிட்டது. இதற்கு ஆரோக்கியமான ஆண்டு (healthy year) என்பது பொருள்.

1951 ஆம் ஆண்டு. போர்சுக்கீசிய இந்திய அரசு, எக்ஸ்போசிகோ டி ஆர்டே சாக்ரா மிஷனாரியா (Exposição de Arte Sacra Missionária)  அஞ்சல் தலைகள் வெளியிட்டது. இது தொடர்பாக லிஸ்பன் நகரில் ஒரு நூலும் வெளிவந்துள்ளது.  

1951 ஆம் ஆண்டு. போர்சுக்கீசிய இந்திய அரசு, தந்தை ஜோஸ் வாஸ் மூன்றாம் நூற்றாண்டு Father José/ Joseph Vaz Tercentenary (1951) அஞ்சல்தலைகள் வெளியிட்டது.

இவர், ஏப்ரல் 1651, கோவாவில் பிறந்தவர். இலங்கையில் கத்தோலிக்கர்கள் ஒல்லாந்தரால் (டச்சுக்காரர்கள்) அடக்குமுறைக்கு ஆட்பட்ட நேரம் இவர் அங்கு பணிபுரிந்தார். கண்டி இராச்சியத்தில் தங்கியிருந்து இப்பணியைச் செய்தார். இதனால் இலங்கையின் திருத்தூதர் என அழைக்கப்பட்டார். 2015 ஜனவரி 14 அன்று கொழும்பு காலிமுகத் திடலில் வைத்துப் புனிதராகத் திருநிலைப்படுத்தினார்.

அவர் விவிலியத்தைத் தமிழிலும் சிங்களத்திலும் பெயர்த்தார். இரு மொழிகளிலும் வழிபாட்டு நூல்களை இயற்றினார். மொழி, இன வேறுபாடுகளைக் களையப் பாடுபட்டார். 

போர்சுக்கீசிய இந்திய அரசு, 1951 ஆம் ஆண்டு புனித சவேரியார் இறந்த நான்காவது நூற்றாண்டு விழாவினை நினைவுகூரும் விதமாக அஞ்சல்தலைகள் வெளியிட்டது. 

1952 இல் லிஸ்பனில் நடைபெற்ற முதல் National Congress of Tropical Medicine பொருட்டு,  போர்சுக்கீசிய இந்திய அரசு, அஞ்சல்தலைகள் வெளியிட்டது. 

சவேரியாரின் நானூறாவது நினைவு நாளை முன்னிட்டு போர்ச்சுக்கீசிய இந்திய அரசு வெளியிட்ட அஞ்சல் தலை.

மானுவல் டி நோப்ரேகா (Manuel de Nobrega) பிரேசிலில் மிஷனரி தொடங்கியதை முன்னிட்டு, போர்ச்சுக்கீசிய இந்திய அரசு வெளியிட்ட அஞ்சல் தலை

போர்சுக்கீசிய இந்திய அரசு, 1958 ஆம் ஆண்டு Heraldic Arms of Famous Men அஞ்சல்தலைகள் வெளியிட்டது. 

போர்சுக்கீசிய இந்திய அரசு, 1959ஆம் ஆண்டு போர்த்துகீசிய இந்திய நாணயங்கள் அஞ்சல்தலைகள் வெளியிட்டது. மொத்தம் எட்டு அஞ்சல்தலைகள் வெளியிடப்பட்டன. என்னிடம் ஒன்று மட்டுமே உள்ளது. 

இவையெல்லாம் வெவ்வேறு காலகட்டங்களில் போர்த்துகீசிய இந்திய அரசு வெளியிட்ட அஞ்சல்தலைகள்.

ஆங்கிலேய இந்தியாவினுள் விடுதலைப் போராட்டம் நடந்தது போலவே, போர்ச்சுக்கீசிய இந்தியாவிலும் நடைபெற்றுள்ளது. ஆனால் அவர்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை. சுதந்தர இந்திய அரசு அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தது. 1947ஆம் ஆண்டு இந்தியாவின் விடுதலையின்போது இந்தப் பகுதிகள் போர்ச்சுக்கீசிய ஆட்சியின் கீழ் இருந்தன. பிற்காலத்தில் அவை அனைத்தும் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. போர்ச்சுகீசிய இந்தியாவின் அஞ்சல்தலைகள் வழக்கொழிந்தன.

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறதுதற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.